இது ஒரு தமிழ்குளோன் தளத்தின் அறிவியல் செயற்திட்டமாகும்.

நோக்கம் :
இன்று இணையத்தில் பல தளங்கள் அரசியல், சினிமா தகவல்களையும் இதற கேளிக்கைத்தகவல்களையும் பிரசுரித்து வருகின்றன. ( தமிழ்குளோன் தளமும் இதற்கு விதிவிலக்கல்ல! ) சில தளங்களே அறிவியல் தகவல்களை பிரசுரித்து வருகின்றன.

எனினும், எமது இன்றைய நிலையில் அறிவியல், வரலாற்றுத்தகவல்களை தமிழில் பெறுவது என்பது கடினமானதாக உள்ளது. இந் நிலை மாறவேண்டும். தேடப்படும் அனைத்து தகவல்களும் தமிழில் கிடைக்க வேண்டும் என்பதையும், நம் எதிர் கால சமுதாயத்தினருக்கு தமிழில் அரிய தகவல்களை கொடுத்து தமிழ் மீதான பற்றையும் வாசிப்புத்திறனையும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் நோக்காகக்கொண்டு இத் தனித்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் இணைந்து தளத்திலுள்ள தலைப்புக்களின் கீழ் தகவல்களை வழங்கக்கூடியவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும்! உங்களுக்கென தனி பயன‌ர் கணக்குத்தரப்பட்டு தரவேற்ற அனுமதிக்கப்படுவீர்கள்.

தனி உரிமைக்கொள்கை :
இத்தளத்தில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் எழுத்தாளருக்கும் தமிழ்ஜீனியஸ் தளத்திற்கும் மட்டுமே சொந்தமானது. மூலம் குறிப்பிட்டு தொடுப்பு கொடுக்கப்படும் தளங்களுக்கு மாத்திரமே பகிரும் அனுமதி கொடுக்கப்படும்.
பிரசுரமாகும் புகைப்படங்கள் கூகுள் தேடலை மையமாககொண்டவை. | தனி நபர் உரிமையுடைய புகைப்படங்கள் தவறுதலாக பிரசுரமாகி இருந்தால் தற்செயலானதே.

விளம்பரம் :
இத்தளத்தில் கல்வி தொடர்பான பயனுள்ள விளம்பரங்கள் இலவசமாக அனுமதிக்கப்படும்.
ஏனைய வர்த்தக விளம்பரங்கள், எமது தளத்தினூடாக நடாத்தப்பட இருக்கும் போட்டிகளுக்கான அனுசரனையாளர்களாக கட்டணத்துடன் விளம்பரப்படுத்தப்படும்.

எம்மோடு இணைய :
நம் தளத்தில் ஆக்கங்களை எழுதுவோருக்கு எந்தவித கட்டணமும் இப்போதுவரை கொடுக்கப்படுவதில்லை. (2014/12)
சேவை நோக்குடன் ஆக்கங்களை எழுத விரும்புவோர் தொடர்புகொள்ளலாம்.
[ தளத்திற்கு அனுசரனையாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் ஆக்கங்களின் பெறுமதிக்கும் எழுத்தாளரின் பங்களிப்பிற்கும் ஏற்ப சன்மானம் வளங்கப்படும். ]

– தமிழ் ஜீனியஸ்
Contact us | Our Team | Entertinment Section | Facebook | Twitter | Google+ | Pinterest

Top