உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) 2012

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் தேதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம்:

1974- ஒரே ஒரு பூமி

1975- மனித வாழ்விடம்

1976- தண்ணீர் : வாழ்க்கையின் ஆதாரம்

1977- ஓசோன் படலம், சுற்றுச் சூழல் முக்கியத்துவம் : நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு

1978- இழப்பில்லாமல் வளர்ச்சி

1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் : இழப்பில்லாமல் வளர்ச்சி

1980- பத்தாண்டுக்கான புதிய சவால் : இழப்பில்லாமல் வளர்ச்சி

1981- நிலத்தடி நீர்: மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்

1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)

1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல் : ரசாயன மழை மற்றும் ஆற்றல்

1984- பாலைவன மேலாண்மை

1985- இளமை : மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்

1986- அமைதிக்கு ஒரு மரம்

1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம் : ஒரு கூரையையும் தாண்டி

1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்

1989- புவி வெப்பமயமாதல், புவி எச்சரிக்கை

1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்

1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை

1992- ஒரே பூமி, பராமரிப்பு மற்றும் பங்களிப்பு

1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் – வளையத்தை உடைத்தல்

1994- ஒரு பூமி, ஒரு குடும்பம்

1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்

1996- நம் பூமி, நம் வசிப்பிடம், நம் வீடு

1997 – பூமியில் வாழ்க்கைக்கு

1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்

1999- நம் பூமி – நம் எதிர்காலம், காப்போம்

2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு – செயல்படும் நேரம்

2001- வாழ்க்கையை இணைப்போம்

2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு

2003- தண்ணீர் – அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு

2004- தேவை ! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் – இறப்பு அல்லது வாழ்வு ?

2005- பசுமை நகரங்கள் – கிரகத்திற்காக திட்டமிடுவோம்

2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் – தரிசு நிலங்களை கைவிடாதீர்

2007- உருகும் பனி – ஒரு சுடான விஷயம்

2008- பழக்கத்தை உதருவோம் – குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி.

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி, ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்’ என்ற கருத்தின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

By : mohamedmohideen

(4000)

Leave a Reply

Top