January 1 புதுவருடப்பிறப்பின் பின்னனி – Julius Caesar to Gregorian

ஏன் january 1 புதுவருட்பிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பதை முன்னர் மேலோட்டமாக பார்த்திருந்தோம். இது மெருகேற்றப்பட்ட பதிவு.

இதை பார்ப்பதற்கு முதலில் நாங்க நாட்காட்டிகள் பற்றி சிலதை அறிந்துகொள்ளவேண்டும்.
நாட்காட்டிகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்தாலும் கி.மு 200 களில் இருந்து தான் அவற்றில் ஏற்படுத்தபப்ட்ட மாற்றங்கள் பற்றிய தரவுகள் அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் ஐரோப்பியாவை அண்டிய பகுதிகளில் March 1,15,20 மற்றும் september 20 december 25 போன்ற நாட்களையே பரவலாக வருடப்பிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.

jul-calendar-transஅதன் பின்னர், யூலியசு சீசர் ரோமின் சர்வதிகாரியாக வந்த காலத்தில் நடைமுறையில் இருந்த நாட்காட்டியில் நிகழ்த்தபப்ட வேண்டிய நிகழ்வுகள் சரியான காலத்தில் இல்லாமல் மாறி மாறி வருவதை அவதானித்தார். முக்கியமாக யேசு உயிர்த்தெழுந்த நாள் (Easter) காலம் மாறிவருவதை அவதானித்தார். இதனால் ஆலெக்சான்டர் எனும் விண்கணிப்பாளாரின் ஆலோசனையின் பேரில் சூரியனை மையமாகக்கொண்ட நாட்காட்டியான எகிப்திய நாட்காட்டியை ஒட்டிய ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகம் செய்தார்.
(எகிப்தில் இவ் நாட்க்காட்டி எவ்வாறு புழக்கத்தில் வந்தது என்பதை பின்னர் பார்க்கலாம்.)

அதற்கு முன்னர் சந்திரனை மையமாக வைத்த நாட்காட்டியே புழக்க்கத்தில் இருந்துவந்தது. அவ் நாட்காட்டியில் ஆரம்பத்தில் 10 மாதங்களும் பின்னர் january, february சேர்க்கப்பட்டு 12 மாதங்களாக்கப்பட்டது.

downloadஅப்போதைய ரோமில் வருடப்பிறப்பு March 1 ஆக இருந்தாலும், ரோம் அரசில் பணியாற்றியோரின் பதவிப்பிரமான ஏற்பு januaryயிலேயே இருந்தது. January மாதம் என்பது Janus என்ற ரோம கடவுளின் பெயரில் இருந்து வந்தது. அந்த கடவுள் இரு முகமுடையவராக இருந்தார். முன் முகம் எதிர்காலத்தையும் பின் முகம் இறந்த காலத்தையும் குறிப்பதாக இருந்ததால் ஒரு காலம் முடிந்து இன்னோர்காலத்தொடக்கத்தை விபரிக்க சிறந்ததாக ரோமானியர்களால் தீர்மானிக்கப்பட்டு அவ் மாதம் ஆண்டின் முதல் மாதமாக அறிவிக்கபப்பட்டது. அதுவே January ஒன்று வருடப்பிறப்பாக கொண்டாடப்பட முதல் காரணமாக அமைந்தது.

ஆனாலும் ரோமரால் இவ் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் பூமி சூரியனை சுற்றும் நாட்கள் 365.25 என கருதப்பட்டு கணக்கிடப்பட்டது. ஆனால் உண்மையில் 365.242199 நாட்களே துள்ளியமானது. அதாவது 365 நாட்கள் 23 மணி நேரம் ஏறத்தாள 48 நிமிடங்கள் இதனால் காலப்போக்கில் அந்த நாட்காட்டியும் காலத்தை சரியாக காட்டவில்லை.

image007இச்சிக்கலை நிவர்த்தி செய்ய 1582 ஆம் ஆண்டு அப்போதைய போப் ஆன கிரகெரியால் தீர்வு முன்வைக்கப்பட்டது. சீசரின் நாட்காட்டியில் இருந்து ஏறத்தாள 1600 வருடங்களுக்கு பின்னர் இவ் மாற்றம் நிகழ்த்தப்பட்டது. நடப்பாண்டில் 14 நாட்களை குறைத்து அதாவது January 14 ஐ January 1 ஆக்கினார்.
(14 நாட்கள் குறைக்கப்பட்டதன் காரணம், ஏற்கனவே குறிப்பிட்ட படி 12 நிமிடங்கள் அதிகமாக பாவணை செய்து சீசரின் நாட்காட்டி அமைந்ததனால் அதனால் ஏற்பட்ட தவறை நீக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதன் படி; விடுபட்ட 12 நிமிடங்களை கணக்கிட்டால், 12*1600 = 19200 நிடங்கள் (19200 / 60 / 24) 13.33 நாட்கள் எனவே அவ் நாட்களை நீக்கி புதிய கிரகெரியன் நாட்காட்டியை அறிமுகம் செய்தார்.
(இதில் லீப் வருடத்திலும் மாற்றம் நிகழ்த்தப்பட்டது. 100 லீப் வருடங்களுக்கு பதிலாக 97 ஆக மாற்றப்பட்டது. 100 ஆவது லீப் வருடத்தில் february இல் 28 நாட்களே இருக்கும். (ஆனால் 400 ஆல் பிரிக்க கூடிய ஆண்டானால் அது லீப் வருடமாகவே இருக்கும். அதனால்த்தான் 1900,2100 லீப் வருடம் இல்லை. ஆனால் 2000 லீப்வருடம்.))

எனினும் அதை பிரித்தானியா உள்ளடங்களான சில பெரும் இராச்சியங்கள் ஏற்கவில்லை. எனினும் 1750 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா அவ் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது. அவ்வேளையில் உலகின் பல பகுதிகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தமையால் உலகம் முழுவதும் ஜனவரி 1 புதுவருடப்பிறப்பாக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

இதை விட பூமி சூரியனிற்கு அருகில் இருக்கும் கால கட்டம் ஜனவரி 1 ஐ அண்டி வருகிறது. எனவே, ஜனவரி 1 புதுவருடப்பிறப்பிற்கு பொருத்தமான நாளாக இன்னும் கருதப்படுகிறது.

இப்பதிவின் மூலம் நீங்கள் புதிதாக ஒன்றை அறிந்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பதிவு பற்றிய கருத்துக்ளை பின்னூட்டமிடுங்கள்.  மேலும் புதிய தகவல்களுடன் விரைவில் தொடர்ந்து சந்திக்கிறேன். நன்றி:)

Graphic design கல்வியை அடிப்படையில் இருந்து கற்க.

Follow me on Instagram / Add me on fb

(326)

Leave a Reply

Top