எந்த கதவை திறந்தால் உயிர் தப்பலாம்? – மூளைக்கு வேலை – Crime puzzle 3

 

mistery-door-tamil-puzzlesஅருன் விளித்தெழுந்த போது ஒரு மர்ம வீட்டினுள் அடைக்கப்பட்டிருந்தான். அவன் முன்னே 1,2,3,4 என இலக்கமிடப்பட்ட கதவுகள் இருந்தன. அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை வெளிச்சம் மங்களானது.

அருன் அதில் இருந்து தப்பும் நோக்குடன் 3 என இலக்கமிடப்பட்ட கதவைத்திறந்தான். அவ் அறையில் அ,ஆ,இ என மேலும் 3 கதவுகள் இருந்தன அதில் ஆ என அடையாளமிடப்பட்ட கதவை திறந்து உள் நுழைந்தான். அவன் உள் நுழைந்ததும் நுழை வாயில் பூட்டிக்கொண்டது. அருனால் திரும்பி வெளிவர முடியாது. ஆனால் உள்ளே மேலும் இரு கதவுகள் இருந்தன. எக் குறிப்பும் அதில் இருக்கவில்லை. ஆனால், கதவுத்துவாரத்தினூடாக அருன் பார்த்த போது முதல் அறையில் அருன் கதவை திறந்ததும் அவனை நோக்கி துப்பாக்கி* சுடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அறையில் அருன் திறந்ததும் மின்சாரம் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அருன் ஒரு கதவைத்திறந்து தப்பித்துக்கொண்டான். அது எது?

(547)

Leave a Reply

Top