கொலை என்பதை காவலர்கள் எப்படி உறுதிப்படுத்தினார்கள். – புதிர் கேள்வி (Crime)

tamil-crime-puzzlesஒரு அடுக்குமாடியில் இரண்டாம் தளத்தில் துப்பாக்கி* சூட்டுச்சத்தம் கேட்டதாக நகர் காவலர்களுக்கு(Police) ஒரு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற காவலர்கள் வீட்டை உடைத்து உள் நுழைந்த போது, தரையில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதை கண்டார்கள். அவரின் ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் பதிவு வானொளிக்கருவியும்*(cassette tape) இருப்பதைக்கண்டார்கள்.
உடனே அதில் உள்ள “Play” ஐ அழுத்தி கேட்டார்கள் அதில், “நான் இனி வாழ்வதற்கு ஒன்றுமில்லை. நான் இறப்பது தான் சரியான முடிவு…” என்று கூறியதும் துப்பாக்கி சத்தம் கேட்டது.

இது கொலை என்ற முடிவை காவலர்கள் உடனடியாக எடுத்தார்கள்.

கேள்வி : காவலர்கள் இது கொலை என்ற முடிவை எப்படி எடுத்திருப்பார்கள்?

 

(711)

Leave a Reply

Top