தாய்ப்பால் வியாபாரச் சந்தை

“எதுவும் வணிகம்” இப்படியான உலகத்தில் வாழ்கிறோம் இதில் தாய்ப் பால் விற்பனை என்பது இல்லாமலா இருக்கும்.

தனக்கு பிறக்காத இன்னொரு குழந்தைக்கு தாய் பால் புகட்டுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்தினால் பால் சுரப்பில் பிரச்சனையோ அல்லது நோய்வாய் பட்டிருக்கும் சமயத்தில், பசும்பாலை குடிக்கும் பக்குவம் இல்லாத சிசுவிற்கு பால் புகட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா ?

கைக்குழந்தை வைத்து இருக்கும் பெண்கள் இன்னொரு தாயான பெண்னை பால் புகட்ட சொல்லி வேண்டுவது உண்டு. இதெல்லாம் இலைமறை காய்மறை சங்கதிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது. எங்கே அழகு குறைந்து போய் விடுமோவென….குழந்தைக்கு பால் புகட்ட மறுக்கும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். சிசுவிற்கு தாய் பால் புகட்ட வேண்டிய அவசியத்தையும் விளம்பரப் படுத்த வேண்டி இருக்கும் காலமிது.

சரி தலைப்பு செய்திக்கு வருவோம்… ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்ட இப்போது தாய்பால் விற்பனை என்பது ஜனரஞ்சகமான ஒன்று. இந்தியாவில் இது இன்னும் பரவலாக்கப்பட வில்லை. சாதி என்ற ஒன்று இந்தியாவில் இருக்கும் வரை அதெல்லாம் மாறப் போவதில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

தாய்பால் விற்பனைக்காக பல தளங்கள் இருக்கின்றன அதில் வால்மார்ட் சக்கை போடு போட்டது என்கிறார்கள்.
ஒன்லி தி ப்ரெஸ்ட் onlythebreast எனும் தளம் தாய்பால் 57845759கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் இணைக்கிறது. இதில் முறையாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வாங்குவதானலும் விற்பதானாலும். (தளத்திற்கு செல்ல லிங்கின் மேல் சொடுக்கவும் ). எய்ட்ஸ் போன்ற நோய்கள் இல்லாதவரிடம் இருந்தே தாய்பால் பெறப்படுகிறது.

தாய்பால் குழந்தைக்காக வேண்டும் என்பது மட்டுமல்லா ஆண்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள் என்ற விவரமும் இந்த தளத்தில் இருக்கு ஆண்களுக்கு எதற்கு என்றால் இம்யூனல் பிரச்சனை உள்ளவர்கள், அ.து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், விளையாட்டில் (? !) (sports) போன்விட்டா பூஸ்ட் மாதிரி சக்தி ஏற்றி கொள்ளவும் வாங்கி குடிக்கிறார்கள். அவுன்ஸ் இவ்வளவு என்று விலை வைத்து விற்கப்படுகிறது அதிலும் கால அளவிட்டிற்கு தகுந்த படி யெல்லாம் இருக்கிறது. ஆனால் முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இத்தகைய விற்பனை பயில்வானாக மாற ஆசைப் படுபவர்களுக்கு அல்ல. “தாய் பால் குழந்தைகளுக்கானது ”

தாய்பால் தரத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா, கனடா இங்கெல்லாம் The Human Milk Banking Association of North America (HMBANA) (எச்எம்பானா )என்ற அமைப்பு (1985 லிருந்து) செயல்படுகிறது. சந்தை வியாபரம் அற்ற தனியார் அமைப்புகள் கூட இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு பால் இன தம்பதிகள் (கய்) கைக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் இப்படியான ஆன்லைன் சேவையை வரவேற்கிறார்கள். தங்களுக்கு பால் கொடுக்கும் கொடுப்பிணை இருந்தால் இத்தகைய வங்கிகளில் சேவை செய்ய ஏக்கமாயிருக்கிறது என்கிறார்கள் ….என்கிறது ஒரு செய்தி குறிப்பு.

தாய் பால் வியாபாரமா? என்பவர்களுக்கு ஆம் கை குழந்தைகளை வைத்துக் கொண்டு பண தேவையில் இருக்கும் பெண்கள் அனேகம் பேர். மாதத்திற்கு சாராசரியாக 20 / 25 ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பவர்களும் உண்டு.
இதெல்லாம் தேவையா தவறான போக்கு என்ற விவாதமும் இல்லாமல் இல்லை. எந்த ஒரு விளைவிற்கும் எதிர் வினை உண்டு என்று நியூட்டனே சொல்லி யிருக்கிறார் (டாட்)

(422)

Leave a Reply

Top