வேற்றுக்கிரக வாசிகளுடனான நிலக்கீழ் யுத்த சான்றும் அனுமானமும்! – Aliens 15

போன பதிவில் உலகின் பல பாகங்களிலும் இருக்கும் மர்ம சுரங்கப்பாதைகளையும் அவை தொடர்பான சில விளக்கங்களையும் பார்த்திருந்தோம்.

இன்று…

700_a31eddbac792f5ab7e1dae1b2040093f

1979 ஆம் ஆண்டு மெக்சிக்கோ Dulce பகுதியில் அமெரிக்க இராணுவத்தினால் மிக இரகசியமாக ஒரு நிலத்தடி தளம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. Phil Schneider என்பவர் அவ் நிலத்தடித்தளத்தின் பாறைகளை ஆராயும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். வழமைபோல் சுரங்கத்தில் இறங்கி அவரும் அவர் சகாக்களும் பாறைகளை துளைத்து ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். சில பாறைகளை துளைத்த போது, கரும் புகை வெளிவரத்தொடங்கியது. தற்செயலாக பிளவுபட்ட ஒரு பெரும் பாறைக்குப்பின்னர் 7 அடி உயரமான ஒரு மர்ம உருவம் தெரிந்தது. உடனே வேகமாக செயல்ப்பட்ட பில் உடனடியாக கைத்துப்பாக்கியை எடுத்து அவ் உருவத்தை சுடத்தொடங்கினார். (அவ் உருவத்தின் அருகே இருந்த இரு உருவங்களை தான் சுட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.) சில வினாடிகளில் அவ் உருவம் பில்லை நோக்கி ஒரு நீல நிற கற்றையை பாய்ச்சியது.

1995 ஆம் ஆண்டு, ஒரு விரிவுரையின் போது பில் இந்த தகவலை சபை முன்னிலையில் தெரிவித்தார்.
அன்றையதினம் சுமார் 60இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், தான் உட்பட மூவர் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். மற்றைய இருவரும் கனடிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும். அவர்கள் உடல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சில தகவல்களை கசிந்தார்.
தான் சுரங்கத்தில் இருந்த தூக்கு இயந்திரமூடாக தப்பித்ததாக அவர் விபரித்திருந்தார்.
இது போன்று சுமார் 1400(?) தளங்கள் இருப்பதாகவும் அவற்றில் 160(?) தளங்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும் இதற்காக உலக அரசுகள் பெருந்தொகை நிதியை செலவிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

phil-schneider-1-1

1996 ஆம் ஆண்டு, பில் இன் நண்பர் அவரின் வீட்டிற்கு சென்று கதவைத்தட்டிய போது, கதவு திறக்கப்படவில்லை. காவலர்களின் (Police) உதவியுடன் கதவைத்திறந்த போது, சுமார் 6 நாட்களுக்கு முன்னரே பில் இறந்திருப்பது அறியப்பட்டது. தற்கொலை என பின்னர் பதியப்பட்டது.

ஆனால், பில்லின் முன்னால் மனைவியும் அவரின் நண்பர்களும் இது ஒரு கொலை என அடித்துக்கூறினார்கள்.
பில் அந்த இரகசியங்களை கசியவிட்டதன் பின்னர் பல மர்ம மிரட்டல்களுக்கு உட்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

பில் விரிவுரையாற்றியபோது, அந்த 7 அடி மர்ம நபர்களின் தாக்குதலால் தனது உடலில் ஏற்பட்ட தாக்கங்களை காண்பித்திருந்தார். (இங்கு புகைப்படமாக பதியப்பட்டுள்ளது.)

paul-philip-schneider-2

phil-schneider-chest-scars

அவரின் கை கால் விரல்கள் எரிந்து நீக்கப்பட்டிருந்தது. மேலும் அவரின் நெஞ்சுப் பகுதியில் வெட்டு அடையாளம் இருந்தது.

இவற்றிற்கு மேல், அவரின் இறந்த உடல் கைப்பற்றப்பட்ட போது, அவரின் முகம் மற்றும் நெஞ்சுப்பகுதியில் நீல அடையாளம் பதியப்பட்டிருந்தது. இவற்றிற்கான காரணம் இறப்பு சான்றிதலில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.


phil_dead
Phil Schneider இன் இச்சம்பவம் ஒன்றே நிலக்கீழ் நகரங்களில் வேற்றிக்கிரகவாசிகள் வாழக்கூடும், ஏற்கனவே அமெரிக்க கட்டுப்பாட்டில் இரகசியமாக அவை தொடர்பான ஆய்வு நடக்கின்றது என்பதற்கு நேரடி ஆதாரமாக இருக்கிறது.

(பில் பொய் கூறியதாகவும் கருத்துக்கள் உண்டு. ஆனால், பில் இச்சம்பவத்தை கசிய விட்டதன் பின்னர் மர்மமான முறையில் இறந்தமை. மற்றும் சில ஆய்வுகளின்படி குறிப்பிட்ட 1979 ஆம் ஆண்டு 60 இற்கு மேற்பட்ட இராணுவ ஊளியர்கள் இறந்தமைக்காக சரியான காரணம் காட்டப்படாமையும் பில்லின் கூற்றை வலுப்படுத்துகின்றது.)

ஏற்கனவே அமெரிக்காவின் Area 51 எனும் பகுதியில் நடைபெறும் செயற்பாடுகள் மக்களுக்கு வெளியிடப்படாமல் மர்மாகவே இருக்கும் நிலையில் இவ்வாறான தகவல்களில் உண்மை இருக்க வாய்ப்புண்டு.
Area 51 மற்றும் நாசாவின் இரகசிய வேற்றுக்கிரகவாசி தேடல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இப்போது இங்கு நிற்கும் கேள்விகள், ஏன் வேற்றுக்கிரகவாசிகள் நிலத்தின் கீழ் நிலவறைகள் அமைத்து வாழவேண்டும்?
ஏன் அரசுகள் பெரும் பொருட்செலவில் இச்செயலுக்கு துணை போகவேண்டும்?

இதற்கு நாம் கூறக்கூடிய காரணங்கள்,

1. நிலத்தின் கீழ் எம்மை சந்திப்பவர்கள் அல்லது நாம் சந்திப்பவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல. அவர்கள் எதிர்கால மனிதர்கள். காலப்பயணமூடாக நம்மை சந்திக்க வந்திருக்கலாம்.
அது ஏன் நிலத்தின் கீழ் என்ற கேள்வி எழும், காலப்பயணம் என்பது wormhole (பரவெளி அனுமான இணைப்பு) மூலமாக எதிர்காலத்தில் சாத்தியப்பட்டு, அந்த wormhole கள் நிலத்திற்கு கீழே திறப்பனவாக இருக்கலாம்.

2. வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள், புவியின் தற்பவெப்ப நிலைக்கு தாக்குப்பிடிக்காமல் நிலத்தின் கீழ் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம்.

3. நிலத்திற்கு கீழ் உண்மையிலேயே இன்னோர் உலகம் இருக்கலாம்.

முக்கியமாக ஏன் 1979 ஆம் ஆண்டு சம்பவத்தில், அவர்கள் மனிதர்களை கொன்றார்கள் என்பது உட்பட‌ இந்த அனுமானங்களுக்கான விரிவான விளக்கங்களையும் இலுமினாட்டி / அமெரிக்கா தலைமையிலான இந்த இரகசிய வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு தொடர்பாக கசிந்த அல்லது சந்தேகிக்கப்படும் தகவல்களையும் வரும் பதிவில் பார்க்கலாம்.

இணைந்திருங்கள் :)

Ref :
thoseconspiracyguys
ufodigest
darkgovernment
wikipedia
google

(1010)

2 thoughts on “வேற்றுக்கிரக வாசிகளுடனான நிலக்கீழ் யுத்த சான்றும் அனுமானமும்! – Aliens 15”

  1. Vinodhkumar says:

    Super message thank U !!!👍👍👍

  2. sharma sk says:

    அருமை

Leave a Reply

Top