சுரங்கப்பாதைகளும் மர்ம வேற்றுக்கிரகவாசி குறிப்புக்களும். 2 – Aliens 14

போன பதிவில், நிலக்கீழ் நகரமான துருக்கிய‌ Derinkuyu (டெரிகியு) யைப்பற்றி பார்த்திருந்தோம்.
இன்று மேலும் பல மர்மமான நிலக்கீழ் நகரங்களையும் அவை ஏன் வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்பு படுத்தப்படக்கூடியன என்பவற்றையும் பார்ப்போம்.

முதலில்,
கனடா,
nahanni-valley-in-canada-tamil

நகானி வேலே (Nahanni Valley) எனும் பகுதி கனடாவின் மக்கன்சி (Mackenzie) மலைத்தொடரில் அமைந்துள்ளது. அப்பகுதியில் மலையைக்கு கீழ் துவாரங்கள்/சுரங்கப்பாதைகள் இருப்பதாக கனடிய கிராமக்கதைகளில் இருந்து அறியப்படுகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கும் அப்பகுதியில் நுழையும் மனிதர்கள் தலை துண்டிக்கப்பட்ட சடலங்கலாக மீட்கப்படுகிறார்கள்.

இப்பகுதியில் மர்ம நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியை ஆராய முட்பட்டோர் குறிப்பிடுகிறார்கள். இவ் ஆராய்வுகள் அனைத்தும் மேலோட்டமானவையாகவே அமைந்துள்ளன. காட்டுப்பகுதிக்குள் முழுமையாக ஆராய அனுமதி கொடுக்கப்படுவதில்லை.

இந்தப்பகுதியில் இருக்கும் முக்கிய மர்மம் என்னவென்றால், இப்பகுதியில் வேறு பல விலங்குகள் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் உள் நுழையும் போதே, தலை துண்டித்த சடலங்களாக மீட்கப்படுகிறார்கள். வேறு விலங்குகளின் சடலங்கள் மீட்கப்பட்டதில்லை.
கொடிய விலங்குகள் தாக்கி இருக்கலாம் என கருதினால், ஏன் அந்த விலங்குகள் தலையை துண்டித்துவிட்டு உடலை உண்ணாமல் விடவேண்டும் என்ற கேள்வி தங்கி நிற்கும்.
ஒரு வேளை பழங்குடி மக்களாகவோ வேற்றுக்கிரகவாசிகள்(?) ஆகவோ இருக்கலாம்.

கனடா ரொரன்டோ பகுதியில் இருக்கும் கைவிடப்பட்ட நிலக்கீழ் பகுதியொன்றின் மேற்புறத்தில் அதிக காந்தப்புல விசை இருப்பது உணரப்பட்டுள்ளது. அதற்கான விளக்கம் இதுவரை அரசால் கொடுக்கப்பட்டதில்லை.
Gerrard & Church வீதிப்பகுதியில் அதிகளவான வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன. நிலத்திற்கு கீழ் அதிகளவான காந்த விசை பயன்படுவது காரணமாக இருக்கலாம் என மர்ம பொருட்களை ஆராய்வோர் கூறுகின்றனர்.

எகிப்து,
cairo-aliens-tamil

எகிப்தில் Cairo வை அண்டிய பகுதியில் 1987 ஆம் ஆண்டளவில் இரு ஆய்வாலர்கள் இரு நீண்ட சுரங்கப்பாதை இருப்பதை கண்டறிந்து ஆராய முட்பட்டனர். எனினும் சில காலங்களில் அந்த இரு சுரங்கப்பாதைகளையும் ஆராய்வதற்கு எகிப்திய அரசு தடை விதித்துவிட்டது. அந்த சுரங்கப்பாதைகளின் பின்னனி என்ன என்பது இதுவரை அறியப்படவில்லை. எகிப்து கதைகளில் வேற்றுக்கிரக வாசிகளின் வருகை இருப்பதனால், இச் சுரங்கப்பாதை ஆர்வத்தை தூண்டும் ஒரு பகுதியாக இன்றுவரை இருக்கிறது.

மெக்சிக்கோ,
mictlan-mexico-tamil

மெக்சிக்கோவில் Mictlan எனும் பகுதியில் கத்தோலிக்க சபையால் மூடப்பட்ட ஒரு சுரங்கப்பாதை உள்ளது.
8 பெரிய கதவுகளில் 8 ஆவது கதவின் பின்னேயே இச் சுரங்கப்பாதையுள்ளது. நரகத்திற்கான பாதை எனக்கூறப்படும் இச்சுரங்கப்பாதையின் மர்மமும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

பிரேசில்,
பிரேசிலின் Joinville எனும் மலைசார் பகுதியில் மலையடிவாரங்களில் பல சுரங்கப்பாதைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட காலப்பகுதிகளில் இச்சுரங்கப்பாதைகளை அண்டிய பகுதியில் இசைச்சத்தங்கள் கேட்பதாக அறியபப்டுகிறது. இப்பகுதியும் ஆராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாகும்.

இவ்வாறு சீனா, இங்கிலாந்து, மல்ட்டா, மலேசியா என பல நாடுகளில் அரசால் ஆராய்வுக்கு அனுமதிக்கப்படாத பல மர்ம சுரங்கப்பாதைகள் இருக்கின்றன.

அடுத்து நாம் பார்க்கப்போவது, எம்மை அண்டிய சுரங்கப்பகுதி.

இமையமலைக்கு கீழே பாரிய நிலக்கீழ் நகரமிருப்பதாக ஆப்கானித்தான் (Afghanistan) கிராமியக்கதைகளில் கூறப்பட்டுள்ளது. இவ் நகரத்திற்கான நுழைவாயில் ஆப்கானித்தான் எல்லையை அண்டிய இமையமலைப்பகுதியில் இருப்பதாகவும். இவ் நகருக்கு பல சுரங்கப்பாதைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவற்றில் ஒன்று எல்லோரா குகையை அண்டிய பகுதியில் இருப்பதற்கான குறிப்புக்கள் உள்ளன.

ellora-cave-aliens-tamil

எல்லோரா குகையை அண்டிய பகுதிகளில் பல மர்மமான துவாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் சில நிலக்கீழ் நகரை விபரிப்பனவாகவும் உள்ளன.
உதாரணமாக, மேலே மனித உருவங்கள் இருக்க அதன் கீழ் மனிதர்கள் போன்றே ஆனால் உருவில் சிறிய உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்துப்புராணங்களில் பல இடங்களில் நிலக்கீழ் மனிதர்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. இன்றளவும் இந்தியாவில் சித்திரக்குள்ளர்களை நாம் கண்டோம் என கூறும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அப்படியானால், நிலத்தின் கீழ் மனிதர்கள் இருக்கிறார்களா?
அப்படி இருந்தால் அவர்கள் எப்படி சுவாசிப்பார்கள்? எதை உண்வார்கள் போன்ற அடிப்படைக்கேள்விகள் எழும்.
அதேவேளை பல இடங்களில் வெவ்வேறு சமூதத்தவர்களால் தாங்கள் குள்ள மனிதர்களை கண்டதாக கூறப்படுவது எதனால் என்ற சந்தேகமும் இருக்கிறது.
இன்றுவரை இவை பற்றி ஒரு ஆய்வு நடைபெறாமல் இருப்பது மர்மத்தை மேலும் அதிகரிக்கிறது.

ஒரு வேளை பரிணாமத்தில் மாறுபட்ட மனிதர்கள் நிலத்தின் கீழ் வாழ்வார்களா? அல்லது வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து நிலத்தின் கீழ் வாழ்கிறார்களா? அப்படி அவர்கள் வாழவேண்டியதன் அவசியம் என்ன?
இவை தொடர்பாக பின்னர் ஆராயலாம்.

அதற்கு முன்னர்,
நிலத்திற்கு கீழ் மனிதர்கள் என்றதும் தர்க்கரீதியாக சாத்தியமற்றது என்ற எண்ணக்கரும் இதை வாசிக்கும் உங்களுக்கும் வரலாம்.
ஆனாலும், சமீபத்திய அறிவியல் அறிக்கை ஒன்றின் படி, பூமிக்கு கீழும் பூமியின் மேற்பரப்பில் இருப்பதை விட 3 மடங்கு அதிக நீர் இருக்கலாம் என புவியியல் ஆய்வாளர் Steve Jacobsen என்பவர் உள்ளடங்களான குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரம் கூகுளில் உள்ளது.

பூமிக்கு கீழ் மண், தண்ணீர், அதற்கு கீழ் பாறை அதற்கும் கீழ் நெருப்புக்குழம்பு இருக்கும் என இவளவு நாளாக கருதிய எமக்கு இவ் ஆய்வு அறிக்கை மாற்றாகவும் வியப்பாகவும் அமைதிருக்கும்.
இப்போது தான் நாம் இவ்வாறான ஒரு அறிக்கையையே பெற்றிருக்கிறோம் என்றால், நாம் அறியாமல் பூமிக்குள் பல மர்மங்கள் இருக்கலாம்.

சரி, பூமிக்கு கீழ் வேற்றுக்கிரகவாசிகள் என்பது வெறும் ஊகங்கள்தானா?
ஒரு திடமான சாட்சி இல்லையா என சலிப்பேற்படும். பூமிக்கு கீழ் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான சில நம்பகமானதும் நம்ப முடியாததுமான சாட்சியங்கள் உண்டு. அவற்றை அடுத்தவாரம் பார்க்கலாம்.
நாம் இன்னும் அமெரிக்காவின் நிலக்கீழ் மர்மங்களை பார்க்கவில்லை, அவற்றின் மர்மம் பல சிந்தனைகளைத்தூண்டும். பார்க்கலாம்… தொடர்ந்திணைந்திருங்கள். :)

(2137)

3 thoughts on “சுரங்கப்பாதைகளும் மர்ம வேற்றுக்கிரகவாசி குறிப்புக்களும். 2 – Aliens 14”

  1. swapna says:

    ithulam unmaiya poiya….ithu epdi nanga namburathu

  2. Suresh says:

    அருமையான பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள் நான் படிக்க ஆர்வமாக உள்ளேன்… வாழ்த்துக்கள்

  3. ஹரி பிரகாஷ் says:

    தயவு செய்து அடிக்கடி தொடர்ந்து எழுதுங்கள்….,ரொம்ப கேப் விடறீங்க அண்ணா….

Leave a Reply

Top