நிலக்கீழ் நகரமும் வேற்றுக்கிரகவாசிகளும் 1 – Aliens 13

இது வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான 13 ஆம் பதிவு. புதிய தொகுப்பாக பல அமானுட விடையங்களுடன் இடம்பெறவுள்ளது.

முன்னைய பதிவுகளை வாசிக்க இங்கே சொடுகவும்.

வேற்றுக்கிரக வாசிகள் எம்மோடு வாழ்ந்திருப்பார்கள் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் எகிப்திய சுவரோவியங்களையும் அது தொடர்பான தர்க்கங்களையும் பார்த்திருந்தோம். இன்று அதைத்தாண்டி உலகின் ஏனைய பகுதிகளில் வேற்றுக்கிரகவாசிகளின் நடமாட்டம் தொடர்பான பதிவேடுகளை இப்பதிவின் பிற்பகுதியில் பார்க்கப்போகிறோம். இவ் பதிவேடுகள் சுமாரான பார்வையாக இருப்பதால் அதற்கு முதல்…

வேற்றுக்கிரக வாசிகள் எம்மோடு வாழ்ந்திருந்தார்கள் ஆனால் அவர்கள் இப்போது எங்கே என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம். (இதே வகையான கேள்வியும் அதற்கான பல மட்ட விளக்கங்களும் ஏற்கனவே ஆங்கிலத்தில் இருந்தாலும் அதைத்தாண்டிய விளக்கங்களை உங்களோடு இணைந்து ஆராய்வதில் ஆர்வமாயுள்ளேன்.)

aliens-tamil-20171963 ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் Derinkuyu (டெரிகியு) எனும் பகுதியில் ஒருவர் தனது வீட்டு சுவரில் திருத்து வேலை செய்த போது அச்சுவரின் பின்புறத்தில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை அவதானித்தார். அத்தகவல் உடனடியாக ஆய்வாளர்களுக்கு அனுப்பப்பட. ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் அது ஒரு மிகப்பெரும் பாதாள உலகம் என்பது கண்டறியப்பட்டது.
ஆம், நிலத்திற்கு கீழ் சுமார் 85 மீற்றர் ஆளமுடைய அதாவது நிலத்திற்கு கீழ் 8 அடுக்கில் அமைக்கபப்ட்ட ஒரு நகரம் அது. சுமார் 20 ஆயிரம் மனிதர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வசதிகொண்ட அவ் நிலக்கீழ் நகரிற்கு சுவாசிக்கும் காற்று செல்வதற்காக அவ் இடத்தை சுற்றி ஆங்காங்கே பல இடங்களில் துவாரங்கள் இடப்பட்டு அத்துவாரங்களூடாக காற்று அவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதற்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி இப்போது தோன்றலாம். சம்பந்தமுண்டு.

1. இவ் நகரம் வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்ததாக இருக்கலாம். இது உண்மையாக இருப்பதற்கான சந்தர்ப்பம் 1% கூட இருக்காது.

ஆனால், அவ் குகைசுவர்களை ஆராய்ந்ததில் அது கி.மு 7-8 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் பின்னைய ஆய்வுகளின்படி அக் குகையில் பூசப்பட்ட பூச்சே கி.மு 7-8 ஆம் நூற்றாண்டு எனவும். அதன் பின் புற உண்மை சுவர்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முட்பட்டதாக இருக்கும் என ஊகிக்கபப்டுகிறது.

இப்போது கேள்வி என்னவென்றால், அந்த கால கட்டத்தில் தொழில் நுட்ப அறிவில் பெரும் முன்னேற்றமில்லாத போது எப்படி இந்த நகரை அமைத்தார்கள். அப்படி அமைக்க வேண்டியதன் காரணம் என்ன?
ஏற்கனவே எகிப்திய பிரமிட்டுக்களை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடன் கட்டி இருப்பார்கள் என ஊகிக்கப்படும் போது, இந்த விசித்திர‌ நகரும் அதற்குள் வந்துவிடுகிறது.

derinkuyu_graphic-tamil

மேலும் ஒரு விசித்திரம் என்னவென்றால், இவ் நகரை சுற்றியுள்ள ஊர்களிலுள்ள பண்டைய கதைகளில் கூட இவ் நகரம் பற்றிய எந்தக்குறிப்பும் அகப்படவில்லை. அந்த நகரில் வாழ்ந்தவர்கள் எங்கே என்ற கேள்விக்கும் தெளிவான விளக்கமில்லை. ( Phrygians இனத்தவர்கள் அவ் நகரை நிறுவியதாகவும் வாழ்ந்ததாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.)
2. நிலத்திற்கு கீழ் மனிதர்கள் வாழவேண்டிய நிலை வருகிறது என்றால் ஏதோ மிகப்பெரிய ஆபத்து வந்திருக்க வேண்டும். அந்த ஆபத்து எது? இந்த நிலக்கீழ் நகரை மனிதர்கள்தான் அமைத்தார்கள் என்றால், இவ்வளவு நுட்பமாக பாரிய நிலக்கீழ் நகரை அமைக்க தெரிந்த அவர்களுக்கு அந்த ஆபத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதேன்?
இயற்கை ஆபத்து என்றால், காற்றை உட்கொண்டு செல்ல அமைக்கபப்ட்ட துவாரங்கள் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும்.
ஒருவேளை வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக அமைக்கப்பட்டதா?
அல்லது, இரு வேறு வேற்றுக்கிரக வாசிகளுக்கிடையேயான போட்டியில் ஒரு சாரரை காப்பாற்ற‌ அமைக்கப்பட்டதா?

இவற்றில் பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே ஆல் ஆவணப்படுத்தப்பட்டவைதான் இதையே ஏன் திருப்பி சொல்கிறேன் என நினைப்பவர்கள் அடுத்த பதிவுவரை காத்திருக்கவும். :)

இது போன்ற வேறு நிலக்கீழ் நகரங்கள் பூமியில் இல்லையா? என்ற கேள்வி இப்போது எழும்.
இதைவிட மர்மமான பல நிலக்கீழ் நகரங்கள், பாதைகள் பூமியில் உள்ளன. முழுமையாக ஆய்வுக்குட்படுத்தக்கூட முடியாத அளவிற்கு மர்மம் நிறைந்துள்ளது. அந்த மர்மத்தில் வேற்றுக்கிரகவாசிகளும் ஒழிந்துள்ளார்கள். அவற்றை அடுத்த பதிவில் அலசலாம்.

பதிவை முடிக்க முன்னர், மேலே சொன்னபடி எகிப்தை தாண்டி உலகின் வேறு மூலைகளில் அடையாளப்படுத்தப்பட்ட வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான பதிவுகளை பார்ப்போம்.

—————————————————-
aliens-tamil-2017

இந்தப்படம்… ஆபிரிக்க கண்டத்திலுள்ள தன்ஷானியா (Tanzania) நாட்டுக்குகை ஓவியங்கள்.
29 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
(1) முதலாவது படத்தில்… வானில், இரண்டு பறக்கும் தட்டுக்களை ஒத்த தெளிவான ஓவியங்கள் குகைச்சுவர்களில் வரையப்பட்டுள்ளது.
அதில் இருந்து பூமியை நோக்கி ஏதோ(குண்டுகள்?) விழுவது போல் வரையப்பட்டுள்ளது.
(2) இரண்டாவது படத்தில்… ஒரு பெண்ணை வேற்றுவாசிகள் (?) சூழ்ந்துகொள்வதுபோல் வரையப்பட்டுள்ளது

—————————————————-

ovni

இந்த படங்கள் ஃப்ரான்ஸின்… “Pech Merle ” எனும் குகையின் சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். கிறிஸ்துவுக்கு முன்.. 17 000 தொடக்கம் 15 000 ஆண்டுகளுக்குட்பட்டது. இதில், பல பறக்கும் தட்டுக்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் உள்ள மனித உருவம் ஏலியன்ஸாக அல்லது… ஏலியன்ஸ் மனிதனுடன் தொடர்புகொள்வதைக்காட்ட வரையப்பட்டுள்ளது.

—————————————————-

big-alien-head
இந்தப்படங்கள்… தஷிலி (Tassili), கிறிஸ்துவுக்கு முன் 6 000 ஆண்டை சேந்தது. இதிலும் பறக்கும் தட்டுக்களின் அடையாளங்கள் இருக்கின்றன. வரையப்பட்ட உருவமும் வித்தியாசமானது.
—————————————————-

japan-ufos-mexico
இது Mexico(Querato) குகை ஓவியங்கள். 7 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இதில் 4 மனித உருவங்களும்… அதற்கு மேலாக, ஒரு பெரிய பறக்கும்தட்டை ஒத்த வடிவமும் வரையப்பட்டுள்ளது. மனிதன் அவர்களுடன் தொடர்புகொண்டான் அல்லது கண்டு வியந்தான் என்று வேறு வேறு தகவல்களை தருகிறது இந்த ஓவியங்கள்.

—————————————————-

wandjinas-paintings
இது அவுஸ்ரேலியாவில் 5000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டதாக கருதப்படுகிறது.
நடுவில் ஆண்,பெண் மனித உருவங்களும்… அவர்களைச்சூழ ஏலியன்ஸின் முகங்களும் வரையப்பட்டுள்ளது.
ஏலியன்ஸிடன் உதவி பெற்றதைக்குறிக்கலாம் எனக்கருதப்படுகிறது.

—————————————————-

strange-aliens
இந்த குகை ஓவியங்கள் Sego Canyon , Utah. வை சேந்தது…. இங்குள்ள பல ஓவியங்களின் உருவங்கள் மனிதனுக்கும் முரணானதாகவும்… ஏலியன்ஸிக்கு ஒத்ததாகவும் உள்ளதாம்.

—————————————————-

saucer-vimana

இந்த பதிப்போவியங்கள்… 10 ம் நூற்றாண்டை சார்ந்தவை, ஜப்பானிய மியூஸியத்தில் அறியப்பட்டது. “பிராஜ்ஜபரமித்த சூட்ரா (Prajnaparamita Sutra) ” என அறியப்பட்ட இந்த ஓவியத்தில்… இந்திய பிராக்மி எழுத்துக்களாள் எழுதப்பட்டுள்ளது. இவை, இராமயாணத்தை பற்றி கூறுகிறதாம்… அதுவும் இந்த பக்கத்தில், இராவணனின் புஷ்பக விமானம் பற்றி கூறப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை பெரிப்பித்து பார்க்கையில், இரண்டு பறக்கும்தட்டுக்களின் உருவங்கள் தெளிவாக வரையப்பட்டுள்ளது.

—————————————————-

madonna-big

“The Madonna with Saint Giovannino”, 15 ம் நூற்றாண்டில் பலஷோ என்பவரால் வரையப்பட்ட புகழ்மிக்க ஒவியம். இதில்… மேரியின் வலப்பக்க மேல் மூலையில் ஒரு பறக்கும் தட்டை சார்ந்த உருவம் வரையப்பட்டுள்ளது. அதன் கீளேயே… ஒரு மனிதன் தனது நாயுடன் அந்த பறக்கும்தட்டு உருவத்தை பார்ப்பதுபோன்று தீட்டப்பட்டுள்ளது.

—————————————————-

hamburg-ufos

ஹம்பேர்க், ஜேர்மனியில் நடந்த சம்பவத்தை பின்னனியாக கொண்டு தீட்டப்பட்ட படம். 1697 Nov 4 அன்று நடந்திருக்கிறது. இதில் வானில் இரண்டு பெரிய சக்கரங்கள் போன்ற அமைப்பு இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. கீழே… பலர் நின்று பார்ப்பதுபோன்று உள்ளது. ஆகவே… அது தனி ஒருவரின் பொய் அல்ல எனலாம்.

—————————————————-

நீண்ட காலத்திற்கு பின்னரான நீண்ட பதிவு.
அடுத்த பதிவில், மேலும் பல மர்ம இடங்களையும் அவற்றிற்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையிலான தொடர்புகளை பார்த்துவிட்டு. அண்டத்தில் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை தேடலாம். இணைந்திருங்கள்.

Ref :

ancient-code , bibliotecapleyades, atlasobscura, History channel, Wikipedia & google

(2677)

4 thoughts on “நிலக்கீழ் நகரமும் வேற்றுக்கிரகவாசிகளும் 1 – Aliens 13”

 1. muthukumar says:

  nice super amazing

 2. 9600288909 says:

  arumai…

 3. raja says:

  Sema innum pathivugal thevai

 4. kavisaran says:

  மிக நீண்ட காலம் காத்திருக்கிறேன்.. பதிவுகள் அருமை..

Leave a Reply

Top