Vio பால் எனும் விசம்.

vio-milk-dangers-tamilசல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு – ஏறுதழுவுதல்) தடையை உடைத்து வெற்றி பெற்ற அனைத்து தமிழ்நாட்டு மாணவர்கள், மக்களுக்கும் நன்றி-வாழ்த்துகள்.

அடுத்து தமிழ் நாட்டு உட்பட இந்தியாவில் நுழைந்துள்ள கொக்காகோலா நிறுவனத்தின் vio பாலைப்பற்றி சற்று பார்க்கலாம்.

இந்த vivo வகை பால்கள், ஐரோப்பா உட்பட 27 நாடுகளில் கடுமையாக தடை செய்யப்பட்ட பால்வகையாகும். அதற்கான காரணங்களாக,

அமெரிக்க பண்ணைகளில் இருக்கும் மாடுகளில் rBGH அல்லது  rBST என அழைக்கப்படும் ஒருவகை நொதியம் (hormones) ஏற்றப்பட்டு மரபணு மாற்றப்பட்ட மாடுகளாகும். (அமெரிக்காவில் 1/3 மாடுகள் இவ்வாறு மரபணு மாற்றப்பட் டவை) இவ் வகை மாடுகளின் பால் சிறு பிள்ளைகளின் உடலை சுறுசுறுப்பாக வைக்கவல்லது (பின் விளைவுகள் அறியப்படவில்லை). எனினும், 30 000 நபர்களிடம் 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, வளர்ந்தவர்களிடையே மிக ஆபத்தான தாக்கத்தை இப்பால் ஏற்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வகை பால்; மார்பு புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் விதை புற்று நோய்  ஏற்பட காரணமாக உள்ளது. (அமெரிக்காவில் அதிக படியான அளவில் விதை புற்று நோயாளர்கள் பதிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.)

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால்வகைகளில் 50% ஆனவை வெறும் 4 வீத பண்ணை நிறுவனங்களில் இருந்தே பெறப்படுகிறது. இவ் 4% ஆனா பண்ணைகள் சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களுக்கு (கொக்கா கோலா உட்பட) சொந்தமானவை.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடையம், vio வகை பால் பெட்டிகளில் நாம் குடிக்கப்போகும் பாலானது ஒரு மாட்டில் இருந்து பெறப்பட்டதில்லை. பல்வேறு மாடுகளில் இருந்து பெறப்படடவையாகும். (சுமார் 15 000 வெவ்வேறு மாடுகளில் இருந்து கூட பெறப்பட சந்தர்ப்பமுண்டு.)

அடுத்து, இயந்திரங்கள் முலம் பால் பெறப்படும் மாடுகளில் ஒன்று நோய்வாய்ப்படடால அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) கொடுக்கபட்டு தொடர்ந்து பால் பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் பாலில் antibiotics இன் தாக்கம் தொடர்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் மனிதனுக்கு ஏற்படும் நோயினால் (antibiotic-resistant infections) சுமார் 2 மில்லியன் மெரிக்கர்கள் வருடாந்தம் பாதிக்கப்பட்டு அதில் 23 000 பேர் இறப்பதாக அறியப்படுகிறது. (இலவச “அக்கறை” மருத்துவமுள்ள அமெரிக்காவில் இந்த நிலை என்றால், எம் நாடுகளில்?)

2017 போராட்டத்தில் பன்னாட்டு குளிர்பானங்களை தவிர்ப்பதாக இளைஞகள் முடிவெடுத்துள்ள நிலையில் vio பாலையும் ஒதுக்க வேண்டியது நம் கடமையாகும்.

இப்பாலின் தாக்கம் பற்றி மருத்துவர் ஒருவர் விரிவான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இதை படிக்கும் மருத்துவ மாணவர்கள் உதவவும். நன்றி :)

Ref :
lifehack.org
naturalsociety
time

(1017)

Leave a Reply

Top