வேற்றுக்கிரக வாசிகளுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவுகள். – Aliens 12

இந்த வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான பதிவுகளில் இது 12 ஆவதாக இடம்பெறும் பதிவு.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், “பரிமாணங்கள்” என்ற பெயரில் எழுதத்தொடங்கிய ஆக்கங்களில் நேரம் மற்றும் வேற்றுக்கிரக வாசிகளைப்பற்றி முதலில் எழுதத்தொடங்கியிருந்தேன். உங்களின் ஆர்வத்திற்கேற்ப பரிமாணம் என்ற தலைப்பை விடுத்து வேற்றுக்கிரக வாசிகள் என்ற நோக்கில் பதிவுகள் இடம்பெற்றன.

இப்போது நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அப்பதிவு புதுப்பிக்கப்பட்டு வேற்றுக்கிரகவாசிகளை பற்றி மேலும் அறிந்துகொண்ட தகவல்களையும் நான் ஊகிக்கும் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புதியதொடர்போன்று இடம்பெறவுள்ள இத்தொடரில் முதலாவதாக,
வேற்றுக்கிரக வாசிகள் எம்மோடு எப்போதிருந்து தொடர்புகொள்கிறார்கள் என்பதை சற்று பார்க்கலாம்.

வேற்றுக்கிரக வாசிகள் எம்மை தொடர்புகொண்டார்களா என ஆராய முற்படும்போது, அவர்கள் எம்மோடு இணைந்து வாழ்ந்தார்களா என்ற கேள்வி எழுவதை தவ்ர்க்க முடியாது. அதற்கு முன்னர்,

வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய தகவல்களை அறிய வந்திருக்கும் நீங்கள், நிச்சயமாக அவர்கள் பற்றி பல தகவல்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.
அவற்றில் பிரபலமானவை எகிப்திய சுவர்களில் வரையப்பட்டிருக்கும் சுவரோவியங்கள்.

எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 3000 வருடங்களுக்கு முற்பட்டவை என பரவலாக அறியப்பட்டாலும். அதன் கால அளவு சுமார் கி.மு 10 000 வரையானதாக இருக்கலாம் என கற்தேய்வு மற்றும் படிவுகளை ஆராய்வோர் குறிப்பிடுகின்றனர்.

proof of aliens lifeஎகிப்தில் பரோ(?) மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாபெரும் கட்டடங்கள் (எகிப்திய) பிரமிட்டுக்கள் ஆகும்.
பல மர்மங்களையும் இப்போது விலை மதிக்கமுடியாத பல பெறுமதியான கணிமங்களையும் கொண்ட அந்த பிரமிட்டுக்களின் சுவர்களில் எழுதவும், வரையவும் பட்டிருக்கும் சித்திர்/எழுத்துக்கள் இன்றுவரை பல ஆய்வாளர்களை சலிக்காமல் தன்பர்க்கம் ஈர்க்கிறது.
அந்த சுவர் சித்திரங்களில் பெரும்பாலானவை அக்கால அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழில் நுட்ப உக்திகளை சுட்டுக்காட்டுவனவாக அறியப்படுகின்றது.
எனினும், அச்சுவரோவியங்களில் பல விடைதெரியா கேள்விகளை முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது அவர்களின் சுவரோவியங்களில் வரையப்பட்டிருக்கும் மனித உருவில் இருந்து வேறுபட்ட (ஆனாலும் மனிதனை போல் இரு கை இரு கால் உடைய) உருவங்களும் பறக்கும் தட்டு என இப்போது அழைக்கப்படும் தட்டுவடிவ வான் பறக்கும் பொருட்களுமாகும்.

proof of aliens life 6

இப்போது,
சுமார் 19-20 ஆம் நூற்றாண்டிலேயே வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் பற்றியும் அவர்களை தாம் பார்த்ததாக கூறியும்ல் பல தகவல்கள் வெளிவந்தன.
அதே போன்று வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டத்தை அந்த (எகிப்திய) காலப்பகுதியில் வாழ்ந்தவர்களும் பார்த்து வரைந்து வைத்திருக்கலாம் என்ற கருத்து சொல்லப்படுகிறது.
ஆனால், இப்போது நாம் பார்வையிட்டதாக கூறப்படும் வேற்றுக்கிரகவாசிகள் எம்மோடு இணைந்து செயற்படுவதாக எம்மில் எவரும் கூறுயதில்லை.
அப்படி இருக்கும் போது, பிரமிட் சித்திரங்களில் ஏன் மனிதர்களோடு இணைந்து வேற்றுக்கிரக வாசிகள் வரையப்பட்டிருக்க வேண்டும்?
அதுவும், சில இடங்களில் கூட்டாக நிற்பது போன்றும், சில இடங்களில் உதவுவது போன்றும், சில இடங்களில் போதிப்பது போன்றும் வரையப்பட்டிருப்பதன் காரணம் என்ன என்பது இன்றுவரை தீர்க்கமான பதில் இல்லாத கேள்வியாகவே இருக்கிறது.

ஆனால், அக்காலப்பகுதியில் குறிப்பிட்டதுபோல் மனிதனுடன் சேர்ந்து வேற்றுக்கிரகவாசிகள் இயங்கி இருக்க கூடும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதும் பிரமிட்டுகள் தான்!
பல தொன்கள் நிறையுடைய கற்களை தூர இடத்தில் இருந்து நகர்த்தி பிரமிட்டுக்களை எப்படி கட்டினார்கள் எனபது ஒரு பெரும் கேள்வி. அதற்கு அடைமைகள் தொடக்கம், தொழில் நுட்பம் வரை பல விளக்கங்கள் ஊகமாக கொடுக்கப்படுகின்றன. எனினும், அடிமைகளைக்கொண்டு அப்படி பெரும் கட்டடங்களை கட்ட வேண்டியதன் அவசியம் என்ன?
தொழில் நுட்பம் காரணமாக கூறப்படும் போது, அந்த தொழில் நுட்பத்தை அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள்?
கூறப்படும் பல தொழில் நுட்பங்கள் தற்போதைய தொழில் நுட்பங்களைக்கொண்டு கட்டுமாணிப்பதே கடினமானது.
பைதகர்சு தேற்றத்தை அவர்கள் மிக கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அது அறியப்பட்ட ஆண்டாக கி.மு 500 ஆம் ஆண்டே வரையறுக்கப்படுகிறது.

proof of aliens life 3

சரி, அது மனிதனால் கட்டப்படவில்லை. மனிதனுக்கு உதவிய வேற்றுக்கிரக வாசிகள் மூலமே சாத்தியமானது என்றால். வேற்றுக்கிரக வாசிகள் அப்படி ஏன் கட்ட வேண்டும்? கட்டியவர்கள் எங்கே? இறந்தார்களா?
வரலாற்று பதிவுகளில் பரோமன்னர்களின் வரலாற்று சம்பவங்கள் இருக்கும் போது, அவர்களின் சம்பவங்கள் ஏன் இல்லை? மேலும், இந்த இடத்தில் மறுபடியும் குறிப்பிட்டு விடுகிறேன். “அடிமைகளைக்கொண்டு ஏன் அப்படி பெரும் கட்டிடத்தை கட்டினார்கள்?”
இதற்கான பதிலை/ ஊகத்தை மேலும் சில-பல உறுதியான சம்பவங்களை பார்த்த பின்னர் ஆராயலாம்.

எகிப்து, எகிப்திய பிரமிட்டு அல்லது மாயன் என்று ஏன் தொடர்ந்து அந்த ஆதாரங்களையே வைத்து வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்தார்கள் உதவினார்கள் என ஏன் கூறவேண்டும். வெள்ளைக்காரன் / மேற்கத்தயன் சொன்னால் அப்படியே அதை நம்பி அவற்றைப்பற்றி எழுதுவதா?
அரைச்ச மாவை அரைப்பது போல் ஒரே விதமான கருத்துக்களை இந்த பதிவு உட்பட ஏன் அனைவரும் சொல்லவேண்டும்?
என்ற சலிப்பு இதை வாசிக்கும் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். நீண்ட இடைவெளியின் பின்னான ஆரம்பம் என்பதால் எகிப்திய பதிவு எனக்கு அவசியமாக பட்டது. அதனால் சலில்ல சலிக்க எழுதியுள்ளேன்.

proof of aliens life 4

இந்த சலிப்பு உங்களை மேலும் பல இடங்களின் தகவல்களை ஆராயத்தூண்டினால், இணைந்திருங்கள் அடுத்த பதிவில் எகிப்தைத்தாண்டி எம்மோடு வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தலாம். (இல்லை என்பதையும் ஆராயலாம்ம்!!!)

வரும் பதிவுகளில்,

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான மேலதிக வரலாற்று பதிவுகள் உட்பட
எங்கு எங்கு வேற்றுக்கிரக வாசிகள் வாழ்ந்திருப்பார்கள்?
மனிதனுள் வேற்றுக்கிரவாசிகள் வாழ்கிறார்களா?
என்பதில் தொடங்கி,
உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதையும் ஊகிக்கலாம்.
அடுத்த பதிவு வரும் வாரங்களில்…

(6657)

One thought on “வேற்றுக்கிரக வாசிகளுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவுகள். – Aliens 12”

  1. ஆனந்தன் says:

    ஏன் இந்த இடைவெளி

Leave a Reply

Top