உலக செஞ்சிலுவை தினம் 8th May ( Red Cross day 8 may)

செஞ்சிலுவைச் சங்கம்… நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச அமைப்பு. அந்த அமைப்பினை கெளரவிக்கும் முகமாகவும் அதன் சேவையை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தி சேவையை விரிவு படுத்தவும் நோக்கத்துடனும் மே 8 ஆம் திகதியை “சர்வதேச செஞ்சிலுவை தினம்” ஆக உலகம் கொண்டாடுகிறது / நினைவுகூறுகிறது.

உலக நாடுகளிடையே செயற்பட்டுக்கொண்டிருக்கும் பக்கச்சார்பற்ற அமைப்பு எது? என்றால் அனைவரும் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அமைப்பு இந்த செஞ்சிலுவை சங்கமாகும். ஆம், இவ் அமைப்பை உருவாக்கிய ஹென்றி டுனான்ட் ( Henry Dunant) இன் அடிப்படை நோக்கமே “பக்கச்சார்பற்ற சேவையை இன மத பேதமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும்” என்பதே. இன்றுவரை செஞ்சிலுவைச்சங்கம் தனது சேவையை செவ்வனே ஆற்றிவருகிறது.

செஞ்சிலுவைச்சங்கம் உருவான வரலாறு :

சுவிஸ்சர்லாந்தைச்சேர்ந்த ஹென்றி டுனான்ட் எனும் பிரபல வர்த்தகர், 1859 ஆம் ஆண்டு ஃப்ரான்ஸ் சக்கரவர்த்தியான 3 ஆம் நெப்போலியனுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சை மேற்கொள்வதற்காக சென்றார். எனினும், அப்போது ஃப்ரான்ஸிற்கும் ஒஸ்ரியாவிற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போரில் காயமுற்ற இராணுவ வீரர்களின் துன்பத்தை நேரில் பார்வையிட்ட ஹென்றி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தார்.
நாடு திரும்பிய பின்னரும் அவரால் அந்தப்பாதிப்பில் இருந்து மீழமுடியவில்லை.

அதனால், இவ்வாறான பாதிப்புற்றவர்களுக்கு பக்கச்சார்பில்லாமல் உதவ வேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே செஞ்சிலுவை சங்கமாகும்.

1983 ஆம் ஆண்டு 9 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று 194 நாடுகளை அங்கத்துவர்களாகக்கொண்டு உலகம் முழுவதும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் தனது அடிப்படை நோக்கைவிட்டு விலகாமல் சேவையாற்றிவருகிறது.
சுமார் 97 மில்லியன் தன்னார்வலர்கள் இவ் அமைப்புடன் இணைந்து சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

By : Chandran Pirabu

(1358)

Leave a Reply

Top