ரஷ்யாவின் ராயல் பெல் ! பற்றிய சுவாரசிய தகவல்கள்.

மணிகள் மனிதன் ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்த தொண்மையான இசைக்கருவி. இந்தியாவின் பெரும்பாண்மையான மதங்களில் மணிகள் உபயோகித்தமைக்காண ஆதாரம் உண்டு.

சைனாவில்( கி.மு) 5ம் நூற்றாண்டு,எகிப்தில் கி.மு 2ம் நூற்றாண்டு,இத்தாலியில் கி.மு 4ம் நூற்றாண்டு என்கிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டின் கற்சிலைகளில் இருந்து அலெக்சாண்டர் போர் ரதத்தின் (charioteers) குதிரையின் கழுத்தில் தொங்கும் மணிகளை பார்க்கலாம். இப்படி மணி ஒவ்வொரு மதத்திலும் உபயோகிக்கும் ஒரு புனிதமான, பாரம்பரிய இசைக்கருவி என்று சொல்லலாம்.

இங்கு ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் மணி பற்றிய தகவல் :

மாஸ்கோ கிரெம்லின் சதுக்கத்தில் உள்ளது உலகின் மிகப்பெரிய வெங்கலத்தால் (Bronze)ஆன காண்டா மணி. இதை ஆங்கிலத்தில் ராயல் பெல் எனவும் ரஷ்யனில் ஜார் கொலொகூல் (Tsar-Kolokol ) என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த மணி உடைந்த நிலையில் இது உருவாக்கப் பட்ட ஒரு பெரிய மேடைமேல் உள்ளது உடைந்த துண்டுடன்.

நெப்போலியன் போனபார்ட் இந்த மணியை வெற்றியின் சின்னமாக (1812) பிரான்சிற்கு கொண்டு செல்ல முயன்றதாகவும் ஆனால் இதன் பெரிய உருவம் மற்றும் அதிக எடை காரணமாக முடிவை கைவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

மணியடித்தால் மரணம் !

‘மணியடிச்சா சோறு’ இது கோவை வட்டார வழக்குச் சொல் (பஞ்சாலைகள் தொழிற்சாலைகள் அதிக அளவில் சுரு சுருப்பாக இருந்த காலத்தில் இது பிரபலம்) இது என்ன ‘மரணம்’ மேலே படியுங்கள்.

இதன் பிளாஸ்பேக்…” இது உடைந்த மணி பற்றிய டுபாக்கூர் கதை.”

ஒருசமயம் இளவரசன் ஐவான் கிரெம்ளின் கோட்டைக்கு வருகை புரிந்தான்.
வருகையை சிறப்பிக்க இந்த மணியை அடித்துப் பேரொலி எழுப்பச் செய்தார் மதகுரு.சத்ததில் பீதியாகி மயங்கி விழுந்துவிட்டான். செய்தி அரசனின் காதுக்கு எட்டியது கடுங்கோபம் கொண்ட அவர் மதகுருவின் தலையை துண்டிக்க செய்தார். அதோடுகூட இந்த மணியை உடைக்கச் சொன்னார்.
கொடுங்கோண்மையின் சாட்சியாக உடைந்த மணி உள்ளது.
சரி இந்த மணியின் வரலாறை பார்போம்.

ராயல் பெல்லை நிறுவியவர் (1735) ராணி அன்னா ஈவானோவ்னா. வடிவமைப்பாளர் ஐவான் மெட்டோரின் மற்றும் அவர் மகன் மிகேயில். 202 டன் எடையும் 20அடி குறுக்குவிட்டம்,உயரம் 22அடி தடிமன் 24 இஞ்சுகள். ஐரோப்பிய வடிவமைப்பு (பரோக் – baroque) கொண்ட வெங்கலத்தாலான இதன் மீது வார்பு முறையில் பதிக்கப்பட்ட புனிதர்கள், தேவதைகள், அழகிய கொடி வடிவம் கொண்டு அழகாக உள்ளது.

1737ல் ஏற்பட்ட க்ரெம்லினில் பரவிய தீவிபத்தில் 24 பெரிய ராட்சச சட்டங்களில் தெங்கவிடப்பட்டிருந்த இந்த மணி பற்றி எறிந்தது. இதை பாதுகாக்க ஊற்றிய குளிர்ந்த நீரினால் இதன் ஒரு பகுதி உடைந்தது.உடைந்த பகுதி மட்டும் 11500 கிலோ எடை கொண்டது.

கீழே கிடந்த மணி 1836 ல் பிரெஞ்சு கட்டிடக்கலை நிபுனர் அகஸ்டி (செயின் பீட்டர்ஸ்பர்க் உள்ள ஐசக் கதீட்ரல் சர்ச்சை கட்டியவர்) என்பவரால் பெரிய மேடை மீது நிறுத்தி வைக்கப்பட்டது.

அக்காலத்தில் மாஸ்கோவில் 4000 சர்ச்சுகள் இருந்ததாகவும் ஒவ்வொரு சர்சிலும் குறைந்தது 10 பெரிய மணிகள் இருந்ததாகவும் இதற்காகவே வார்பட பட்டரைகள் பல இருந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. ஒரே மணியில் பலவித ஒலி எழுப்பும் இசை வல்லுனர்கள் இருந்தார்கள். மாஸ்கோ முழுதும் சர்சுகளில் ஒரே மணி சப்தம் தான். பிரம்மாண்ட மணிகள் ஆபத்துகள் ஏற்படும் போதோ அல்லது விசேசங்களின் போதே ஒலி எழுப்பபட்டன.

மேற்சொன்ன ராயல் பெல்லிற்கு முன்பே 4 பெரிய மணிகள் இருந்தது.

(1.) 35 மெட்ரிக் டன் எடை கொண்ட போரிஸ் கெடுனோவ் காலத்தை சேர்ந்தது(1599) வடிவமைப்பாளர் ஆன்ரெ சோகோவ். 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உடைந்து விட்டது.
(2.) அதெ உடைந்த பாகங்களை வைத்து 1654 ல் உருவாக்கப்பட மணி 128 மெட்ரிக் எடை கொண்டது ( இரண்டாம் ஜார் கோலெகூல்) இதை 25 பேர் அடித்து ஒலி எழுப்பினர். 8 மைலுக்கு சத்தம் கேட்கும்.
(3) 160 டன் எடை கொண்ட டோர்மிசன் பெல் 10 ஆண்டுகள் இருந்தது. மணி ஒலிக்கும் போது சிறிய நிலநடுக்க அதிர்வு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
(4) அடுத்து ஐவான் தி கிரேட் உருவாக்கிய மணி 45 ஆண்டுகள் ஒலித்தது.

பதிவாளர் : கலாகுமரன் : இனியவை கூறல்

(1750)

Leave a Reply

Top