ஒளியையே உறிஞ்சும் கருந்துளைகள் (Black holes)

பரந்து விரிந்த எல்லை காணமுடியாத ஆகாயத்தில் தான் எத்தனை அழகு! எத்தனை அற்புதங்கள்! இவ்வாறு வியந்து ரசிக்கக் கூடிய அண்டவெளியிலும் எத்தனையோ ஆபத்துக்களும், விடைகாணமுடியாத கேள்விகளும் மர்மங்களும் நிறைந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மையாகும். அத்துடன் அது நாகரிக மனிதனின் ஆராய்ச்சிக் களமாகவும் விளங்குகிறது.

விண்வெளியில் மனிதன் செய்யும் ஆராய்ச்சிகள் பற்பல. அதிலே புதிரானதும் சுவாரசியமானதுமான ஒன்றானது அளவிட முடியாத மிக அதிகமான ஈர்ப்புசக்தி கொண்ட கருந்துளைகள்(Black Holes) எனப்படும் ஒரு விடயமாகும். இதை கருப்பு துவாரம், கருங்குழி மற்றும் கருப்பு ஓட்டை எனப் பலவாறாக அழைக்கின்றனர்.

கருந்துளை எனப்படுவது விண்வெளியில் காணப்படும் மிக மிக அதிகமான ஈர்ப்புசக்தி கொண்ட உட்குழிவான துளை ஆகும். இது தனது அருகே உள்ள ஈர்ப்பு சக்தி குறைந்த பொருட்கள் அனைத்தையும் தன்னுள்ளே உள்ளீர்த்துவிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஒளி அலைகள் மற்றும் மின்காந்த அலைகளைக் கூட தன்னுள்ளே ஈர்க்குமளவிற்கு கருந்துளைகளின் ஈர்ப்பு சக்திவலுவானதாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதனுள்ளே நடப்பவைகளை வெளியே இருந்து அறிந்து கொள்ள முடியாது என்பதனாலேயே இவற்றை கருந்துளைகள் என்று அழைக்கின்றனர்.

கருந்துளைகள் என்பன இறந்த நட்சத்திரங்கள் எனக் கூறப்படுகின்றன. இவை எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பதற்கோ, எதனால் அதிகூடிய ஈர்ப்புசக்தி கொண்டனவாக விளங்குகின்றன என்பதற்கோ சரியான காரணம் என்ன என  இன்னமும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஒரு நட்சத்திரமானது முற்றுமுழுதாக எரிந்து முடிந்த நிலையில், அதாவது தன்னிடத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் வெளிவிடப்பட்டு சக்தியற்றுப் போன நிலையில் அண்டவெளியில் தன்னை சூழவுள்ள அனைத்தையும் தன்னுள்ளே ஈர்க்கத் தொடங்குகின்றது.

இந்தக் கருந்துளைகளை சாதாரணமாக பார்க்க முடிவதில்லை. ஆனாலும் இவைகளின் ஈர்ப்பு சக்தி செயற்படும் எல்லைக்கு உட்பட்ட மற்றும் இவற்றின் எல்லைக்கு அப்பால் உள்ள பொருட்களின் மீது ஏற்படும் தாக்கங்களின் மூலம் கருந்துளைகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். சிலவேளைகளில் கருந்துளைகள் தமக்கு அண்மையில் உள்ள நட்சத்திரங்களில் உள்ள வளிமங்கள் மற்றும் ஒளி என்பனவற்றை உள்ளீர்க்கும் போது ஒரு சுழற்சி ஏற்பட்டவண்ணம் கருந்துளைகளுக்குள்ளே செல்வதனால் ஏற்படும்  வெப்பநிலை மாற்றத்தினால் உண்டாகும் கதிர்வீச்சு என்பவற்றை வைத்து இவற்றைக் கண்டறிய முடியும் என ஒரு கருத்தும் அறிவியாலாளர்களிடையே நிலவுகின்றது.

1783 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரித்தானிய தொழில்சாரா வானியலாளரான ஜோன் மைக்கேல்(John Michael) ஒளியைக் கூட தப்ப விடாத அளவுக்கு சக்திகொண்ட பொருள் என கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இதே போன்றதொரு கருத்தை 1795 ஆம் ஆண்டு பிரான்ஸ் இயற்பியலாளரான பீரே சைமன் லாப்பிளாஸ்(Pierre Simon Lappilas) என்பவரும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று தீவிரமான ஆராய்ச்சிக்குட்பட்டிருக்கும் கருந்துளைகள் பற்றிய கோட்பாடு 1916 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன்(Einstien) அவர்கள் முன்மொழிந்த பொதுச் சார்பு கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப கால ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புக்களின்படி ஒவ்வொரு பால்வெளியின் மையத்திலும் பாரிய கருந்துளை ஒன்று அமைந்துள்ளது என்பதுடன் எமது பால்வெளியின் கூட இன்னுமொரு பால்வெளியின் மையத்திலுள்ள கருந்துளைக்குள்ளே அமைந்திருக்கலாம் என பௌதிகவியலாளர்கள் கூறியுள்ளனர்.

– ஞானி –

(8543)

7 thoughts on “ஒளியையே உறிஞ்சும் கருந்துளைகள் (Black holes)”

  1. venkat says:

    black hole patri nam adhikala aaraichchi enna solludu?

  2. Manivannan says:

    Oru black holem ennum oru black holem athan eirpu visaiela direct ta santhikum pothu athan black hole waves. La crack vilum pothu athu nuclear react level ku oru blast nadakuma?

  3. skanagavelu says:

    Very nice clear!! Thank you so much.

  4. s.naveen kumar
    1. ippo oru star black hola maridichina athu last varikum black hola than irrukuma illa…!!!!!!!
    2.starterk 2 movie la kattra mathiri black hola seyatkaya uruvaka mudiyuma ,,.?
    3.black hole ullizhukira porutkal enga poguthunu theriyuma unga karuthu enna….?
    4.black hole nilaiya ore idathil irrukuma .illa move pannuma..?
    5.black hole move pannichina.athanudaya speed enna..?

  5. karthi says:

    black hole en opposite reaction enna ventru solla mutiuma…

  6. S.Manikandan says:

    nanbare edhanala black hole uruvaguthu,namba suriyanum oru naal black hole ah mariduma?

Leave a Reply

Top