சுதந்திர பத்திரிகையாளர் தினம் 03-May ! + பரிசை வென்றவர் யார்?

மே 3 ஆம் திகதி உலக பத்திரிகைகள் சுதந்திர நாள் ஆக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு முதற் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்திரிகை சுதந்திரத்தைப்பரப்பும் நோக்கிலும், மனித உரிமைகள் சாசனம் 19 ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமை சுதந்திரத்தை உலக நாடுகளில் நிலை நாட்டுவதையும் நோக்காக்கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினம் UNESCO/Guillermo Cano World Press Freedom day என்றே அழைக்கப்படுகிறது. அதற்கான காரணம்…

கொலம்பியாவில் Guillermo Cano Isaza எனும் பத்திரிகை எழுத்தாளர் 1986 ஆம் ஆண்டில், அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பட்டது. அதனால் அவரின் நினைவாக இவ் நாளில் அவரின் பெயரும் தினத்தின் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந் நாள் அன்று, உலகின் சமாதானத்திற்காகவும் சுதந்திரப்பேச்சிற்காகவும் இன்னல்களைத்தாண்டி போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25 000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 14 நபர்களைக்கொண்ட சுயாதீன குழுவால் குறிப்பிட்ட ” சுதந்திர எழுத்தாளர்” தேர்வு செய்யப்படுவார்.

இவ்வருடத்திற்கான சுதந்திர பத்திரிகையாளராக ரஷ்யாவை அண்டியுள்ள அசர்பைஜான் (Azerbaijan ) நாட்டைச்சேர்ந்த Eynulla Fatullayev என்பவர் தேர்வாகியுள்ளார்!

இதுவரை கெளரவிக்கப்பட்டவர்கள் விபரம்…

2013: Reeyot Alemu, Ethiopian
2012: Eynulla Fatullayev, Azerbaijan
2011: Ahmad Zeidabadi, Iran
2010: Mónica González Mujica, Chile
2009: Lasantha Wickrematunge, Sri Lanka (posthumous award)
2008: Lydia Cacho Ribeiro, Mexico
2007: Anna Politkovskaya, Russia (posthumous award)
2006: May Chidiac, Lebanon
2005: Cheng Yizhong, China
2004: Raúl Rivero, Cuba
2003: Amira Hass, Israel
2002: Geoffrey Nyarota, Zimbabwe
2001: Win Tin, Myanmar
2000: Nizar Nayyouf, Syria
1999: Jesús Blancornelas, Mexico
1998: Christina Anyanwu, Nigeria
1997: Gao Yu, China

நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ் விருது கிடைக்க வேண்டும் என்பதே எமது ஆசை. ஆனால், இவ் ஆக்கத்தை எழுதிய என்னைப் பொறுத்தவரை நாம் அதற்கு தகுதியானவர்கள் ஆகவில்லை என்பது உண்மையே.
பத்திரிகை தர்மங்களையும் இணைய ஊடக தர்மங்களையும் பல தமிழ் பத்திரிகைகள், இணையங்கள் மீறிவருவது இருக்கும் வரை எமக்கு இவ் உயரிய விருது கிடைப்பது அரிதுதான்…

By : Chandran Pirabu

(1158)

Leave a Reply

Top