தொழிலாளர் தினம் 2013 : அறியவெண்டியவை (May day 2013)

மே முதலாம் திகதி, சர்வதேச ரீதியில் பெரும்பாண்மையான மக்களால் இன மத பேதமின்றி கொண்டாடப்படும் ஒரு தினமாகும்! ஆம், தொழிலாளிகள் அனைவருக்கும் இன்றைய நாள் முக்கியமாகிறது.

இத்தினத்தை இப்போது பலர் ஒரு சாதாரண கேளிக்கை நிகழ்வாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், கொண்டாடப்படும் இத் தொழிலாளர் தினத்தை ஏற்படுத்துவதற்கு பல நடுகளில் பல தொழிலாளிகள் பல வருடங்களாக போராடவேண்டிய நிலை இருந்தது. இப்போராட்டத்தின் போது பலரின் உயிர் பறிக்கப்பட்டமையும் வரலாற்றுக்கறையாக உள்ளது. அன்று அவர்கள் அப்போராட்டத்தின் மூலம் சட்டங்களையும் வரையறைகளையும் ஏற்படுத்தாவிடின்; நாம் இன்றும் பல மணி நேரம் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கவேண்டிய நிலை இருந்திருக்கலாம்!!

இன்றைய தினத்தில், தொழிலாளிகளின் உரிமைகளைப்பெற எவ்வாறான படிகளை நம் முன்னைய சகாக்கள் மேற்கொண்டனர் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகும்.

வரலாறு :

18 ஆம் நூற்றாண்டிடு… சாதாராண தொழிலாளி ஒருவன் சுமார் 15 (12-18) மணி நேரங்கள் வேலைசெய்தாக வேண்டும் என்ற மனித வலுவிற்கு மீறிய கட்டுப்பாடுகள் இருந்த காலம் அது.
குறுகிய சம்பளத்திற்காக இத்தனை மணி நேரம் வேலை செய்வதா? என்ற கேள்விகள் வளர்ச்சியடையும் மக்களிடையே ஏற்பட “தொழிலாளர் புரட்ச்சி” ஆரம்பமாகியது!

வரலாற்றுப்பதிவுகளின் படி முதல் முதலாக 10 மணி நேர வேலை நேர கோரிக்கையை முண்வைத்து இங்கிலாந்தில் சாசன (chartists) இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அயல் நாடான ஃப்ரான்சில் 1830 ஆம் ஆண்டலவில் ஒன்றிணைந்த பல தொழிலாளிகள் கடுமையான போராட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். எனினும் அவை அனைத்தும் கொரூடக்கரங்கொண்டு அடக்கப்பட்டன.

1896 ஆல் ரஷ்யாவில், புரட்சித்தலைவனாக போற்றப்படும் லெனின் தொழிலாளர் உரிமை தொடர்பான பிரசுரங்களை பிரசுரிக்க, தொழிலாளர்களிடையே ஒற்றுமை மேலோங்கியது… பிற்காலத்தில் அது ரஷ்யப் புரட்ச்சிக்கும் வித்திட்டது.

1887 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 5 தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர், அந்த ஐவரின் இறப்பை எதிர் பாராத அமெரிக்க சமூகம் ஒன்றினைந்தது! ஆம், சுமார் 5 லட்சம் பேர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முதலாளி வர்க்கம் தன் இறுக்கப்போக்கை கைவிடவேண்டிய நிலையை எய்தியது!

1899 ல் பரீசில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டின் போது, 8 மணி நேர வேலை நேரத்தை அடிப்படையாக்கக்கொண்டு 1886 ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட வேண்டுகோள் அங்கீகரிக்கப்பட்டு மே முதலாம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தினார்கள்.

By : Chandran Pirabu

(1243)

Leave a Reply

Top