தசாவதாரமும் டார்வினிசமும் ! (Hindusim Vs darwinism)

இந்திய இந்து புராணங்கள் அணைத்தும் உண்மை தத்துவங்களை மக்கள் மனதில் எளிதில் பதிய கற்பனை கலந்து எழுதப்பட்ட காவியங்கள், கதைகள். அவற்றின் உள்ள கருத்துகளை மேம் போக்காக பார்க்காமல் ஊன்றி கவனித்தால் மட்டுமே அவ்வுண்மைகளை புரிந்து கொள்ள இயலும்.

தசவதாரம் அதில் ஒன்று. தசாவதாரம் நமக்கு சொல்லும் கருத்துகள் இவ்வுலகம் தோன்றியது எப்படி ? மற்றும் அதில் உயிர்கள் எப்படி படிப்படியாக தோன்றின என்பது. இது டார்வின் கோட்பாடான பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளை நமக்குத்தெரிவிக்கிறது.

இந்திய நாட்டில் வாழ்ந்த பேரறிஞர்கள் தெள்ளத்தெளிவாகவும் பரிணாமக்கொள்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

பரிணாம வளர்ச்சியின் தோற்றம் நீரிலிருந்து தொடங்குகிறது. முதலில் நீர் பாசி இதிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, பல்லி, எலி, பெருச்சாளி, பன்றி, கரடி,எருமை,யானை, ஓநாய்,புலி,சிங்கம், முதலிய ஜீவப் பிராணிகள் தோன்றின இறுதியில் குரங்கு. குரங்கிலிருந்து மூதாதையினத்தின் ஒரு பிரிவு கால கிரம வளர்ச்சியின் பின் மனிதன்.

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிலிருந்து ஒன்று என்பதை கவனத்தில் கொள்ளவும்.

73 வருடங்கள் வாழ்ந்த மாமேதை டார்வின் [1809 – 1882]
பற்றி சில தகவல்கள் :

இரண்டாயிரத்து முப்பது ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டு பேரறிஞன் அரிஸ்டாட்டில் பரிணாமதத்துவத்திற்கு வித்திட்டார்.

அவரின் கூற்று ‘சத்தியத்தின் உரைக்கல் ஞானம் அல்ல இயற்கைதான் அதற்கு உரைக்கல்’

வைத்தியரான இராமஸ் டார்வின் (சார்லஸ் டார்வினுடைய தாத்தா) லிச்பீல்டு (இங்கிலாந்து) ல் வசித்தவர். உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் பரிணாம ரீதியில் வளர்ச்சி பெற்றவை என்ற கருத்தை எழுதி வைத்திருந்தார். ( மூன்றாம் ஜார்ஜ் மன்னர் காலத்தவர்) இவரின் மறைவுக்கு (1802) பிறகு பிரஞ்சு நாட்டின் விலங்கியில் வல்லுனர் லாமார்க் இவரின் கருத்துக்களை மூலாதாரமாக வைத்து விலங்கு சாஸ்திர தத்துவம் (1809) முதுகெலும்பு மிருகங்களின் சரித்திரம்.(1815) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

பரிணாம வளர்ச்சி பற்றி அவர் வகுத்த கொள்கைகள் ஒரே தினத்தில் எழுதப்பட்டவை அல்ல.

1859 ல் சார்லஸ் டார்வின் ஜீவராசிகளின் பரிணாமத் தத்துவத்தை வெளியிட்டார் (ஜீவராசிகளின் மூலம் 230 பக்கங்கள்) உலகின் எல்லா மதங்களும் இந்த தத்துவத்தை எதிர்த்தன. சம்பிரதாயப்பிடிகளை விட்டுவிட எந்த மதமும் ஒப்புக்கொள்ளலாது. அதனால் கண்ணைமூடி மறுதளித்தன. இன்றுவரை அவரின் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் நிரூபிக்கப் படவில்லை.

இந்து மதத் தத்துவங்களை குறிப்பாக ஆதிகால சிருஷ்டி தத்துவங்கள் சிலவற்றை மற்ற மதங்கள் தத்து எடுத்து கொண்டதாக சொல்கிறார்கள். பழைய ஏற்பாடான விவிலியத்தில் சொல்லப்படும் நோவா கால ஜல பிரளய கதை, ரோமானியர்கள் வணங்கும் நீரஸ் என்ற கடவுள் (மச்சவதாரம் – மீனுடல் மனித தலை) இவை சில உதாரணங்கள் [ … இங்கு தசாவதாரம் – டார்வினிஸத்தை பற்றி எழுதுவதால் இந்த கருத்துக்குள் அதிகம் செல்லவேண்டாம் என நினைக்கிறேன்…]

இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1831) தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரி வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.

ஒரு ஆச்சர்யமான தகவல் ” மூட நம்பிக்கைகளுக்கு வேட்டு வைத்த டார்வின் இளவயதில் மதகுருவாக ஆசைப்பட்டவர்.”

டார்வினிஸத்திற்கும் இந்து மத தத்துவத்திற்கு முள்ள ஒப்புமைகள்.

இந்துக்களால் போற்றப்படும் விஷ்ணுவின் தசாவதாரம் டார்வினிஸத்துடன் ஒத்துப் போகிறது.

தசாவதாரத்தை கருத்தில் கொள்ளும் போது டார்வின் வகுத்தளித்த கருத்துகள் முன்னமேயே இந்திஸத்தில் போதிக்கப்பட்டு வந்துள்ளது விளங்கும்.

முக்கிய வளர்ச்சி பருவத்தைக் கொண்டு முதல் 5 அவதாரங்களின் உருவ அமைப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு தாய் தந்தை இல்லை. ஒவ்வொரு அவதாரத்திற்கும் நான்கு கைகள்(வாமன அவதாரத்தை தவிர). அவ்விலங்கு பருவங்கள் நான்கு கால் உயிரினங்கள்.

வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

முதல் அவதாரம் : மச்ச அவதாரம் (மீன்)
வாழ்க்கை நீரிலிரிலிருந்து தொடங்குகிறது. இவற்றின் வளர்ச்சி 600 மிலியன் – 400 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இரண்டாம் அவதாரம்: கூர்மம் (ஆமை)

நீரிலிருந்து நிலத்தில் நடப்பவை (amphibians) வளர்ச்சி 100 மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

மூன்றாம் அவதாரம் : வராகம் (பன்றி) : தரையில் வாழும் பாலூட்டி விலங்கு (mammals) 60 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை.

நான்காவது அவதாரம் : நரசிம்மம் (மனித உருவில் உள்ள சிங்கம்) : பாதி மனிதன் பாதி சிங்கம் 30 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தவை

ஐந்தாவது அவதாரம்:வாமன (குள்ளமான கரடி) Homo Erectus : ஆயுதம் அற்ற இரண்டு காலில் நடக்கும் உருவம். காலம் 5மிலியன் முதல் 2மிலியன் ஆண்டுகளுக்கு முன்.

இந்த ஐந்து அவதாரங்ளுக்கு அடுத்து வரும் 5 அவதார தத்துவங்கள் மனித இனத்தின் படிபடியான நாகரீக வளர்ச்சியை விளக்குவதாகும். ஆதிகால மனிதன் முதலில் நிலத்தை உழுது பயிரத்தெரிந்து கொண்டான் இது பரசுராம அவதாரம்.[ Homo Sapiens (350,000-100,000 years ago)] ஏற்கலப்பையுடன் இருப்பது காண்க.

பின்னர் ஆடுமாடுகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்கிறான். இது கிருஷ்ணவதாரம்( மாடு மேய்ப்பவர்.)

இறுதியில் சமுதாய ஆட்சிமுறை அதை பலப்படுத்த போர் பயிற்சி பெற்றார்கள் மனித பரம்பரையின் வளர்ச்சி சரித்திரம். பிற்பட்ட அவதாரங்களின் விளக்கம்.

இராம அவதாரத்தில் துணைப்பாத்திரமாக அதி புத்திசாலியாகவும், பலம் பொருந்திய அனுமன் (குரங்கு) சித்தரிக்கப்பட்டது ஏன் ? இதை பரிசீலிக்கும் பொழுது முதல் ஐந்து அவதாரங்கள் முன்பே வெளிப்படுத்த பட்ட பின்னரே அடுத்த அவதாரங்கள் விளக்கப்படுகின்றன. அந்த விளக்கத்தின் போதே சிங்கத்திலிருந்து மனித உருவம் தோன்றவில்லை குரங்கினத்திலிருந்தே மனித இனம் தோன்றியது இதை முக்கிய தகவலாக இடை செருகப்பட்ட முக்கிய கதாபாத்திரமே அனுமன் எனவிளங்கிக்கொள்ளலாம்.

பதிவாளர் : கலாகுமரன் : இனியவை கூறல்

(5011)

5 thoughts on “தசாவதாரமும் டார்வினிசமும் ! (Hindusim Vs darwinism)”

 1. dass says:

  wonderful ….marvelous…

 2. harita says:

  harita

  1. harita says:

   awesome intersting

 3. s.dhayanithi says:

  can you give this news as books please in tamil pdf

Leave a Reply

Top