அணுவும் தொல் தமிழனும் ! [ Atom Vs tamizhan ]

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம் லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.

தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .

கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.

திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

 

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே

– திருமந்திரம் 2008 [ திருமூலர் ]

இதன் சுருக்கமான பொருள் “நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்”

திருவாசகத்தின் இன்னொரு சான்றையும் உங்கள் முன் வைக்கிறேன்.

அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப் பெருந்தன்மை வளப் பெருங்காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரையலச்
சிறியவாகப் பெரியோன் தெரியின்

திருவாசகம் – திருவண்டப்பகுதி [மாணிக்க வாசகர் ]

இதன் சுருக்கமான பொருள் ” அண்டங்கள் பலவாக உள்ளன அவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தாலோ நூற்றொரு கோடிக்கு மேற்பட்டு நிற்பனவல்லாமல், ஒன்றை விட ஒன்று அளவிட்டறிய முடியாதபடி அழகு பொருந்தியவாகவும் உள்ளது இவ்வண்டங்கள் அணைத்தும் இறைவனின் முன்பு வீட்டின் கூரையில் உள்ள மிகச்சிறிய துவாரத்தின் விழியாக நுழையும் சூரிய கிரணத்தில் தோன்றித் தெரியும் சிறு துகள்களுக்கு ஒப்பாகும் தன்மையதே”

திருவள்ளுவர் 2025 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.

திருமூலர் 4525 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர். 18 சித்தர்களில் முதன்மையானவர். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர்
மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர். பாண்டிநாட்டின் அமைச்சராகவும் இருந்தார். 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை, திருவாசகம்,திருக்கோவை இவரால் எழுதப்பட்டவை. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தவர்.

அணுவை பற்றிய தகவல்கள் : )

உலகில் உள்ள எல்லா பொருட்களும் அணுக்களால் நிரம்பியுள்ளது. நேர்மின் தன்மை கொண்ட புரோட்டான் அணுவின் மையத்தில் உள்ளது (1.0073 amu நிறை) எதிர்மின் தன்மை கொண்ட எலக்ட்ரான் மையத்தை சுற்றி சுழன்று வரும்.புரோட்டானுக்கு சமாமான மின்சக்தி கொண்டிருக்கும்.புரோட்டானைவிட 2000 மடங்கு நிறை குறைந்தது (0.000549 amu). நியுட்ரான் ஒரு அணுவில் இல்லாமலும் இருக்கும் (நிறை 1.0087amu)

புரோட்டான்களின் எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண்.

2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் 1 மில்லி மீட்டர் நீளம் இருக்கும்.

கிரேக்க தத்துவஞானி டெமோகிரிடஸ் (DEMOCRITUS) கி.பி 470 ல் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மூலக்கூறை அணு (atom) என்று கூறி ஆரம்பித்து வைத்தார். பிறகு 1800 வரை நிறுபிக்க படாத ஒன்றாக இருந்தது. டால்டன் (DOLTON) தான் அணுவின் பொருண்மை குறித்த அணுவியல் கோட்பாடுகளை
1808 ல் வெளியிட்டார்.

பின்வந்த ஸ்வீடிஷ் வேதியலார் ஜான் பெர்ஜிலியஸ் (Jons Berzelius) அணுவின் நிறையை நுண்ணியமாக கணக்கிட்டார். உதாரணமாக இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் சேர்ந்த கலவைதான் நீர் என நிறுபித்தார் H2O என்ற குறியீடையும் அளித்தார்.

140 ஆண்டுகள் கழித்து அணுவின் சக்தியை கண்டுபிடித்தார் அவோகாட்ரோ (AVOGADRO) ஆங்கிலத்தில் மாலிக்யூல் என்பது லத்தீன் வார்த்தை மாஸ் லிருந்து எடுத்தெழுதினார். மூலக்கூறின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை அறுதியிட்டு கணக்கிட்டார்.

22 லிட்டர் வாயுவில் 602 பில்லியன் டிரில்லியன் மாலிக்யூல்ஸ் உள்ளது. சுருக்கமாக இதை 6.02 x 1023 Mole-1 என்று எழுதினார். இதுவரை இந்த மாறிலி தான் அடிப்படை.

அணு சக்தி : நியூட்ரான்கள் மூலம் அணுவின் உட்கருவை துளைக்கும் போது மேலும் நியூட்ரான்களை சிதறடித்து அவை அண்மை அணுக்களை துளைத்து தகர்க்க இந்த சங்கிலி ரியாக்சனில் அபரிமிதமான சக்தி வெளிப்படுவது.

ஐன்ஸ்டின் அணுவை யுரேனியத்தில் இருந்து பிரித்தெடுத்து அதிலிருந்து பெரும் சக்தி கிடைக்கும் என்ற கருத்தை அறிவித்தார். இவர் ஜெர்மன் நாட்டிலிருந்து உயிர் பிழைக்க அமெரிக்காவிற்கு தப்பினார். இவரை வைத்து அமெரிக்கா தயாரித்த அணு குண்டு ஹிரோஷிமாவின் அழிவுக்கு வித்திட்டது. இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை.

அவர் இறப்பதற்கு(நவம்பர் 1954) ஐந்து மாதங்களுக்கு முன் அணு ஆயுதம் குறித்து “என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு” எழுதினார். இப்படி பின் விழைவைப் ஏற்படுத்திய அணுகுண்டை இனி எப்போதும் யாரும் பயன் படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

பதிவாளர் : கலாகுமரன் : இனியவை கூறல்

(2990)

One thought on “அணுவும் தொல் தமிழனும் ! [ Atom Vs tamizhan ]”

Leave a Reply

Top