மனிதனின் முதல் எதிரி !!

கொசுக்கள் ஜுராஸிக் காலத்தில் இருந்து வாழ்பவை (210 மிலியன் வருடங்கள்). நுளம்பிற்கு பயப்ப்பாத கவிஞனுமில்லை, தலைவனும் இல்லை.  பேரரசன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன (323 B.C. ல் மலேரியாதாக்கி இறந்தார்). கொசுக்கள் இந்த உலகத்தின் மோசமான விலங்கு (! ?) ஏனென்றால் படு மோசமான மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். வருடத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மலேரியா நோய்கண்டு இறக்கின்றனர்.  விதம் விதமான கொசு ஒழிப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எல்லாம் தற்காலிகமாகிப் போய்விடுகின்றன.  அவற்றில் இருந்து மீண்டு மீண்டும் மீண்டும் மனிதனை தாக்குகின்றன.

டீட் (DEET )பெரும்பாலன கொசு விறட்டிகளில் பயன் படுத்தப் படுகிறது.  எதிர்ப்பு மருந்தாக பிகேர்டென் (picaridin)மற்றும் எலுமிச்சை யூக்லப்டஸ் எண்ணெய் ( lemon-eucalyptus oil) ஆகியவை CDC [ Centers for Disease Control ] ஆல் பரிந்துறைக்கப்படுகிறது.

12654353_7879
வெளவால்கள் கொசுக்களை பிடித்து தின்பதில்லை.  பறவைகளில் ஈ பிடிப்பான் வகையை சேர்ந்த purple martins இவைகள் கொசுவைப் பிடித்தாலும் விரும்பி உண்பதென்னவோ தும்பிகளை த்(Dragon fly ) தான்.   மீன்களில் கேம்பீஸ் மற்றும் தட்டாம் பூச்சிகள் (தும்பி) கொசு லார்வாக்களை உண்கின்றன.

மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். அவனை மேலே அனுப்புவதில் முதல் இடத்தையும் அது தான் பெறுகிறது என உலக சுகாதார ( (WHO ) நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. மலேரியா சிக்குன்குனியா..இப்போது புதிதாக ஜிகா (zika) எனும் அஸ்திரத்தால் தாக்குதல் நடத்துகிறது. சிலநாடுகள் பெண்களே கர்பமடையாதீங்க என வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை ரொம்ப சின்னதாக இருக்கிறதாம். எதிர்கால சந்ததியையே பாதித்துவிடும் என அந்நாடுகள் நடுங்கு கின்றன. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் ரக நாடுகள்….(கொசுக்களால் ஜிகா பரவுகிறதா ? என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது )

HIV கொசுக்களால் பரவுவதில்லை. HIV தாக்கப்பட்ட கொசுக்களின் வயிற்றில் அவை செறித்துவிடுகின்றன.

கொசுக்களுக்கு ஆங்கிலத்தில் “Mosquito ”   ஸ்பானிய மொழியில் “சிறிய ஈ (அ) சிறிய பூச்சி” என்று அர்த்தம். 16 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த மொழியில் இந்த வார்த்தை இருகிறதாம். ஆப்பிரிக்க மொழியில் இதை “மொஸீஸ்” என்கின்றனர். இலங்கையில் கொசுவை “நுளம்பு’ என்று வழங்குகின்றனர்

கொசுக்களில் 3500 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 175 வகைகள்  அமெரிக்காவிலும், “ஏசியன் டைகர்” (Aedes aegypti) என்பது எல்லா இடங்களிலும் இருப்பது. மலேரியா கிருமிகளை சுமந்து செல்பவை அனோபெலிஸ் ( Anopheles)

கொசுக்களில் பெண் கொசுக்கள் தான் மனிதர் ரத்தங்களை ருசிக்கிறது. அதற்கு முட்டைகளை உருவாக்க மனித ரத்தம் தேவையாகிறது.

கொசு கடித்துவிட்டது என்று சொல்லுகிறோம் உண்மையில் அவைகளுக்கு பற்கள் (?) இல்லை. அவைகள் நீளமான நுண் துளை (proboscis) உறிஞ்சிகளை வைத்து அவை ரத்தத்தை உருஞ்சுகின்றன.  நுண் உறுஞ்சிகளை நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் இரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. அந்த சிறு இடத்தில் கொஞ்சம் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. அதோடு மரத்துப்போதலும் ஏற்படுகிறது, அதனால் தான் அது கடிப்பது சட்டென உணர முடிவதில்லை.   பெரும்பாலும் அது ரத்தத்தை உறிஞ்சிய பின்பே நமக்கு எரிச்சலும் வலியும் உணரப் படுகிறது.

மலேரியா நுண்கிருமிகள் அதன் எச்சில் மூலம் நம் உடலில் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன.

அதனுடைய எடையை விட மூன்று மடங்கு எடையுள்ள ரத்தத்தை குடித்துவிடுகின்றன. ஒரு பெண் கொசுவானது ஒரே சமையத்தில் 300 முட்டைகளை இட வல்லது. இதுமாதிரி ஒரு பெண் கொசுவானது அதன் வாழ்நாளில் மூன்று தடவைகள் முட்டைகளை இடுகின்றன.

நீர் பரப்புகளின் மேலே இடப்பட்ட முட்டைகள் 10 நாட்களில் லார்வா, அப்புரம் ப்யூபா வடிவம் பெற்று அடுத்த சில நாட்களில் ரெக்கை முளைத்த கொசுக்களாகின்றன.  ஒரு கொசுவின் வாழ்நாள் 2 மாதங்கள் சில வகைகளுக்கு ஆயுசு 3 மாதங்கள்.

பெண் கொசுக்கள் றெக்கையை நொடிக்கு 500 தடவைகள் வேகமாக அசைக்கின்றன. காற்றில் அவைகள்

ஏற்படுத்தும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன.  பறக்கும் வேகம் மணிக்கு  1.5 மைல்கள்.

8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில் கூட இவை வாழ்கின்றன.

அவைகள் அவற்றின் தலையில் உள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலமாக மனிதனின் மூச்சு காற்றும் மற்றும் வியர்வை வாசனையை வைத்து துள்ளியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன அதுமட்டும் அல்ல வெப்ப அளவீடுகளைக் கொண்டும் டார்கெட்டை துரத்திப் பிடிக்கின்றன.

அய்டீஸ் (Aedes) வகை கொசுக்கள் பகல் நேரத்தில் ரத்தம் உறிஞ்சுபவை. க்யூலெக்ஸ் (Culex) வகை இரவானதும் தன் வேலையை துவக்கும்.

(7850)

Leave a Reply

Top