அண்டத்தின் நிகழ்வுகள் THE UNIVERSE ACTIONS : உருவாக்கமும் எதிர்கால போக்கும்

முன்னுரை:
பிரபஞ்சத்தின் அழிவைப்பற்றி பல விஞ்ஞானிகள், பல மதங்கள் கூறுகின்றன. ஆனால் யாரும் அமைப்பற்றிய முழுமையான காரணத்தையும், நிருபணத்தையும் கூறவில்லை.
ஆனால் நான் அதைப்பற்றிய விஞ்ஞான நிருபணத்தையும், தீர்வுகளையும் “அண்டத்தின் நிகழ்வுகள்” என்னும் தலைப்பில் கூறி உள்ளேன்.

அண்டம் (UNIVERSE)
படைக்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களையும் உள்ளடக்கியது அண்டம் ஆகும்.

அண்டத்தின் நிகழ்வுகள்: (THE UNIVERSE ACTIONS)

grand_universeஎல்லையில்லாப்பிரபஞ்சத்தில் பலப்பொருட்கள் பலவருடங்களாக ஓய்வுநிலையில் இருந்தன. மேலும் அந்த அந்த பொருட்கள் தனக்கே உரிய ஈர்ப்புவிசையை பெற்று காணப்பட்டன.

மேலும் அந்த ஈர்ப்பு விசையினால் பலப்பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் விலக்கவும் ஆரம்பித்தது. மேலும் இந்நிகழ்வில் பல பெரியப்பொருட்களை நோக்கி (அதாவது அதிக ஈர்ப்பு விசைக்கொண்ட பொருட்களை நோக்கி) பலசிறிய பொருட்கள் ஈர்க்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது பல்வேறு சிறியபொருட்கள் பல்வேறு பெரியப்பொருட்களை தாக்கின. இதனால் அந்த அந்த பெரியப்பொருட்கள் நகர ஆரம்பித்தன.

மேலும் இந்த நிகழ்வின் போது ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பல்வேறு சிறிய மற்றும் பெரியப்பொருட்களும் பிரபஞ்சவெளியில் நகர ஆரம்பித்தன.

இவ்வாறு பிரபஞ்சவெளியில் நகர ஆரம்பித்த பலப்பொருட்களில் படிப்படியாக சுழல்மின்னோட்டங்கள் தோன்றின.

மேலும் அப்பொருட்களின் வேகம் மற்றும் சுழல் மின்னோட்டங்களால் அப்பொருட்களின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனால் அப்பொருட்கள் படிப்படியாக உருகியன.

இவ்வாறு அப்பொருட்கள் உருகிக்கொண்டே பிரபஞ்சவெளியில் தனது உருகிய மற்றும் உடைந்தப் பகுதிகளை சிதரடித்து கொண்டே நகர்ந்தன.

மேலும் இவ்வாறு சிதரடிக்கப்பட்ட பொருட்களில் சுழல்மின்னோட்டங்கள் பரவி காணப்பட்டன.

மேலும் சுழல்மின்னோட்டங்களினால் வெப்பமானப்பொருட்களில் இருந்து அனல், தூசு, புகை, வாயு மற்றும் அந்த பொருட்களின் பகுதிகள் போன்றவை வெளியேறியன.

இவ்வாறு வெளியேறிய பொருட்களை அதிக ஈர்ப்புவிசைக்கொண்ட பொருட்களும் மற்றும் அதனறிகில் உள்ள பொருட்களும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டன. இதனால் அப்பொருட்களைச் சுற்றி வாயுமண்டலங்கள், துணைக்கோள்கள் மற்றும் பலப்பொருட்கள் ஏற்பட்டன.

மேலும் இவ்வாறு அதிக ஈர்ப்புவிசைக்கொண்ட பொருட்களாலும் மற்றும் அதனருகில் உள்ள பொருட்களாலும்; ஈர்க்கப்படாத பலபொருட்கள் பிரபஞ்சவெளியில் நகராமல் உள்ளன.

மேலும் இவ்வாறு மாற்றம் அடைந்த பொருட்கள் பிரபஞ்சவெளியில் திண்மமாகவும், நீர்மமாகவும், வாயுவாகவும், பிளாஸ்மாவாகவும் மற்றும் பல்வேறு பொருட்களாகவும் மாறியன.

இவ்வாறு மாற்றம் அடைந்த பொருட்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுக்கள் ஒருசில கோள்களில் (பொருட்களில்) ஏற்பட்டு அந்த பொருட்களில் உயிரினங்கள் தோன்றின.

மேலும் அண்டம் என்பது ஒரு பொருள் ஆகும். இந்த பொருள் தோற்றத்திற்கான காரணம் ஆற்றல் ஆகும். ஆற்றல் தோற்றத்திற்கான காரணம் பொருள் ஆகும். எனவே பொருளாற்றல் தோற்றத்திற்கான காரணம் அதாவது அண்டம் எப்படி செயல்படுகிறது எனில்,

‘தோன்றாப்பொருளின் தோற்றத்தின் தோற்றமாகவும் முடியாப் பொருளின் முடிவின் முடிவிலியாகவும்’

அதாவது,

‘தோன்றாப்பொருளின் உருவத்தின் உருவமாகவும் அழியாப்பொருளின் அழிவின் அழிவிலியாகவும்’
அண்டம் செயல்படுகிறது. எனவே அண்டமானது ”ஆற்றல் அழிவின்மை விதிப்படி’ தனது தோற்றத்தில் இருந்து ‘காலத்தை’ பொறுத்து தொடர்ந்து மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த கொள்கையின்படி:

1. அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்திற்கு அடிப்படை காரணம் ஈர்ப்புவிசை.

2. அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்தின் காரணமாக பல அண்டப்பொருட்களில் சுழல்மின்னோட்டங்கள் தோன்றின.

3. இந்த சுழல்மின்னோட்டத்தின் காரணமாக அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து அப்பொருட்கள்(NABULA)ஒண்மீன் படலமாக மாற்றம்அடைந்துக்கொண்டே இருக்கின்றன.

4. மேலும் புவி, மற்ற கோள்கள் மற்றும் அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் (NABULA) ஒண்மீன் படலாமாக மாறும்.

5. இதனால் வருங்காலங்களில் உயிரினங்கள் வாழ புவி மற்றும் அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் தகுதி அற்றதாக மாறி வெறும் வெப்ப விண்மீனாக காட்சித்தரும்.

6. மேலும் புவியில் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

7. எனவே தற்போது மக்கள் வளங்களை அறிவியல் பாதையில் செலுத்தி வருங்காலங்களில் வேற்றுக்கிரகங்களுக்கு செல்வதற்கான ஆயத்தபணிகளை மேற்கொள்ளலாம்.

8. மேலும் தற்போதிய கண்டுபிடிப்பின்படி, வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை மற்றும் வேற்றுக்கிரகத்தில் புவியில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறும் அவ்வளவாக இல்லை. எனவே வேற்றுக்கிரகங்களில் உள்ள சூழ்நிலையை செயற்கை முறையில் புவியில் உள்ள ஆய்வகங்களில் உருவாக்கி அந்த சூழ்நிலையில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

9. மேலும் இம்முறையில் அண்டத்தில் உள்ள பலப்பொருட்களில் (கோள்கள், துணைக்கோள்கள்…) போன்றவற்றில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிக்கலாம்.

10. மேலும் இந்த அண்டத்தின் நிகழ்வுகள் அணுக்களிலும், மூலக் கூறுகளிலும் காணப்படுகின்றன.

கறுப்புக்கண்:

வாயஜேர் -2 விண்கலம் நெப்டியூனைப் (Neptune) படம் பிடித்து அனுப்பியதை வைத்துப்பார்த்ததில் வியாழன் (Jupiter) கோளில் சிவப்புக்கண் இருப்பது போலவே நெப்டியூனில் கருப்புக்கண் ஒன்று இருக்கிறது என்னும் விவரத்தைத் தெரிந்து கொண்டார்கள். நெப்டியூனின் தென்பகுதியில் உள்ள இந்த ‘கறுப்பு புள்ளி’ அங்கு வீசும் அதிவேகக்காற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இந்த கறுப்புபுள்ளியின் உயரே வெண்ணிற மேகங்கள் இருப்பது போலவும் அந்தப்புகைப்படங்களில் காணப்பட்டது. ஏதோவொரு எரிசக்தி அந்தக்கோளில் இருப்பதையே அந்த வெண்ணிற மேகங்கள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தார்கள்.

மேலும் இந்த கறுப்புக்கண் போல் புவியில் (Annular) வளைய உருவம் என்ற பகுதி காணப்படுகிறது. இவ்வாறு காணப்படும் கறுப்புக்கண்கள் போன்ற தோற்றங்கள் (Annular) நெபுலாவின் நியூகிளியஸ் போல் உள்ளது.

எனவே புவி, நெப்டியூன், வியாழன் மற்றும் அண்டத்தில் காணப்படும் பல பொருட்கள் நெபுலா (nn) போல மாற வாய்ப்பு உள்ளது.

நெப்டியூன்:

neptune_cutbkஆயிரத்தில் ஒரு பங்கு:

நாம் வாழும் பூமிக்குச் சூரியனிடமிருந்தேதான் ஒளிகிட்டுகிறது என்பது தெரிந்ததே. ஆனால் சூரியனிடமிருந்து பூமிக்கு எவ்வளவு ஒளிகிட்டுகிறதோ அதில் 1000-தில் ஒரு பங்குதான் நெப்டியூன் கோளுக்குகிட்டுகிறது.

ஆனால் நெப்டியூனில் காணப்படும் வெப்பநிலை 300 ஆகும். இந்த அதிகமான வெப்பத்திற்கு காரணம் நெப்டியூனின் சுழற்சிவேகம் ஆகும்.

இந்த கொள்கையை விளக்க போதுமான சான்றுகள்:

1. அண்டத்தில் காணப்படும் அனைத்து பொருட்களிலும் மின்காந்தக்கதிர்வீச்சு காணப்படுகிறது.
2. அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் காந்தத்தன்மை பெற்றுள்ளன.

சுழல்மின்னோட்டம்:

EDDY CURRENT (or) FOUCAULT CURRENT:

காந்தம் தன்னைத்தானே சுற்றிவரும்போது உலோகப்பெட்டி போன்ற உள்ளகத்தில் சுழல்மின்னோட்டம் ஏற்படுகிறது.

ஃபிளமிங் வலக்கை விதி:

(FLEMING’S RIGHT HAND RULE)

ee_001-6ஃபிளமிங் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்து திசையில் சுழல்மின்னோட்டங்கள் பாய்வதால், அம்மின்னோட்டங்கள் உள்ளகத்தின் அச்சை மையமாகக்கொண்ட வட்டப்பாதையில் அமைகிறது.
இந்த ஃபிளமிங் வலக்கை விதிப்படி, பிரபஞ்சத்தில் உள்ள பலப்பொருட்கள் தங்கள் மைய அச்சை மையமாக்கொண்டு வட்டப்பாதையிலோ அல்லது நீள்வட்டப்பாதையிலோ சுற்றிவருகின்றன. மேலும் பெரியப்பொருட்களின் ஈர்ப்புவிசையால் அவற்றை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன.

தூண்டல் உலை: (Induction Furnace)

ஒரு உலோகத்திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல்மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும்.
‘சுழல்மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது’.

பூமி:

உள்மையப்பகுதி:

earth-like-an-onion-layers-640x353உள்மையப்பகுதியானது 2560 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. இந்தப்பகுதியில் இரும்பு, நிக்கல், உருகியபாறை போன்றவை கலந்த குழம்பு காணப்படுகிறது.
உள்மையப்பகுதியில் என்ன நடக்கிறது என்பது இன்னமும் முழுமையாக ஆராய்பபடவில்லை. எனினும் பூமியின் மேற்புறத்தில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு உள்மையப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளே காரணம் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.
மாண்டில் பகுதிக்கும் உள்மையப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியில் மின்காந்தச் சுழல்களும் மின்காந்தக் கொந்தளிப்புகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
அதன் காரணமாகவே பூமிக்கு மேற்புறத்தில் கண்டங்கள் இடம் பெயருகின்றன என்றும், துருவங்கள் மாறுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பூமிக்குள்ளும் மழை:

பூமிக்கு வெளியே மழை பெய்கிறது அல்லவா? அதேபோல் பூமிக்குள்ளும் மழை பெய்கிறது! இதை நம்புவது சிரமமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அது உண்மை.
பூமிக்குள்ளே உட்புற மையப்பகுதியில் உண்டாகும் அபரிதமிதமான வெப்பத்தால் மாண்டில் பகுதியிலுள்ள பாறைகள் உருகி உட்பு மையப்பகுதியை நோக்கிச் செல்கிறது. அது ‘இரும்பு மழை’ என்று நம்முடைய விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
பூமிக்குக் காந்தசக்தி ஏற்படுவதற்கு இந்த இரும்பு மழையே காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

நிலநடுக்கம்:

பூமிக்குள்ளே உள்மையப் பகுதி முழுவம் இரும்புக் குழம்பாக இருக்கிறது என்பது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது 5500 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இருக்கிறது. அப்பகுதியில் ஒரு வகையான அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அவை பூகம்ப அலைக்கதிர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

புவி காந்தப்புலத்திற்கு (Earth Magnetic Field) என்ன காரணம்?

அது இன்னும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. வால்ட்டர் மாரிஸ் எல்சாசர் (Walter Maurice Elsasser) என்கினற விஞ்ஞானி கூறியிருக்கிற விளக்கத்திற்குப்பரவலாக ஆதரவு இக்கிறது. பூமியின் மையத்தில் இரும்பு உருகித்திரவ நிலையிலுள்ளது.

பூமி சுலும்போது இரும்புத்திரவத்தின் சுழல்கள் தோன்றி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகின்றன. இவற்றின் காரணமாக மேற்கிலிருந்து கிழக்காக வட்டமிடும் ஒரு மின்னோட்டம் தோன்றுகிறது. இந்த மின்னோட்டம் பூமியின் அச்சுக்கோட்டில் வடக்குத்தெற்காக ஒரு காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. இதனால் பூமியின் அச்சுப்பகுதி ஒரு காந்தமாகிவிடுகிறது. இந்தக்காந்தம் பூமியைச் சுற்றிப்பரவியுள்ள காந்தப்புலத்தை உண்டாக்குகிறது என்று அவர் சொல்லுகிறார்.

பூமியின் உட்பகுதியில், 100 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்றால், அங்கு வெப்பநிலை 1,200 கெல்வின் ஆகும். 1000 கிலோமீட்டர் ஆழத்தில், வெப்பநிலை 3,000 கெல்வினாக உயர்கிறது. புவியின் மையப் பகுதியின் வெப்பநிலை, 6,400 கெல்வின். சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 6,000 கெல்வின்தான், புவியின் மையப் பகுதியின் வெப்பம், அதைவிட 400 கெல்வின் அதிகம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

Author :  Guganathan (universeactions)

(7845)

One thought on “அண்டத்தின் நிகழ்வுகள் THE UNIVERSE ACTIONS : உருவாக்கமும் எதிர்கால போக்கும்”

  1. Coming 30-07-2016, I celebrate my birthday. At that day we always celebrate ” The Earth Aliens Day ” …

    தற்போதிய கண்டுபிடிப்பின்படி, வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை மற்றும் வேற்றுக்கிரகத்தில் புவியில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறும் அவ்வளவாக இல்லை. எனவே வேற்றுக்கிரகங்களில் உள்ள சூழ்நிலையை செயற்கை முறையில் புவியில் உள்ள ஆய்வகங்களில் உருவாக்கி அந்த சூழ்நிலையில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
    மேலும் இம்முறையில் அண்டத்தில் உள்ள பலப்பொருட்களில் (கோள்கள், துணைக்கோள்கள்…) போன்றவற்றில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிக்கலாம். எனவே தற்போது மக்கள் வளங்களை அறிவியல் பாதையில் செலுத்தி வருங்காலங்களில் வேற்றுக்கிரகங்களுக்கு செல்வதற்கான ஆயத்தபணிகளை மேற்கொள்ளலாம். by L. GUGANATHAN., P.hD.,

    http://universeactions.blogspot.in/2013/02/universe-actions.html
    http://edu.tamilclone.com/?p=5855

Leave a Reply

Top