5பில்லியன் வருடங்களின் பின் புது உலகம் – நாசாவின் ஈரோப்பா தேடல்.

வியாழன் கிரகத்தின் உப கோலான ஈரோப்பா தொடர்பான ஆராய்வில் நாசா ஆராய்வு நிலையம் ஈடுபடவுள்ளது.

1979 ஆம் ஆண்டளவில் ஈரோப்பா உபகோலில் உயிரினங்கள் இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டது.

அங்கு மிகப்பெரிய சமுத்திரம் கற்பாறைகளுக்கு கீழே முடங்கி கிடப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜிம் கிறீன் எனப்படும் இத்திட்டத்திற்கு பொறுப்பானவர் “இதே நிலை நீடித்தால் சுமார் 5 பில்லியன் வருடங்களின் பின் உயிரினங்கள் வாழ்வதற்கு மிக உகந்த இடமாக இவ் உபகோல் மாறும் ” என தெரிவித்துள்ளார்.

image

2020 அளவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இவ் உபகோலில் உயிரினம் கண்டறியப்பட்டால், அது மிகப்பெரிய மனித வெற்றியாக அமைவதுடன், பிரபஞ்சத்தின் போக்கு மற்றும் நம் நிலை, நம் பிறப்பிற்கான காரணங்களை அறிய வழி செய்யும் என எதிர்வுகூறப்படுகிறது.

(4272)

Leave a Reply

Top