கனவு நெசமாகும்னு சொல்ராங்கலே! அது உண்மையா?

நான் கண்ட கனவு பலிச்சிடுச்சி என்று சிலர் சொல்கிறார்கள். நான் கண்ட கனவு பலிச்சிடுமோ அது மாதிரியே ஆகிடுமோ ? என்று சிலர் பயப்படுகிறார்கள்.

கனவு கண்டவர்களுக்கு அது முழுக்க ஞாபகம் இல்லாத போது எதற்கு பயப்படுகிறார்கள். இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது திரும்ப திரும்ப வரும்போது யோசிக்கவேண்டிய சமாச்சாரம் தான்.

இன்னொரு வகை அதாவது அதி அற்புத கனவுகள். எதிர்பாரத ஒரு விசயம் நடக்கும் போது நம்ம மனசுல ரீவைண்ட் பன்னி பார்தோம்னா சில நினைவுகள் பிடிபடும். அது பின்னாலேயே போனோம்னா கனவு கண்டது ஞாபகம் வரும். அப்ப நாம் என்ன சொல்றோம் கனவு பலிச்சிடுச்சி. அப்ப கனவு நமக்கு தேவையா இருக்கு. நல்லது நடந்தா கனவை ஆதரிக்கிறோம் இல்லேனா அத எதிர்க்கிறோம். இதுதான் மனித இயல்பு.

உள் மனதில் தண்ணீர்க்குள் இருக்கும் சிறிய நீர்க்குமிளி மாதிரி இருக்கும் நினைவுகள் மொல்ல விடுபட்டு மேலெழும்பி வெளிமனதை தொடுகிற போது நாம் கனவை பற்றி உணர்கிறோம்.

சாதாரணமான உணர்ச்சிகள், ஒழுக்கம் பற்றிய கோட்பாடுகள்,உலகை பற்றிய அறிவு, புலண்களை அடக்கியாலும் தன்மை, இவற்றை கொண்ட வெளிமனதை நாம் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொள்கிறோம். இந்த வெளிமனம் தான் நம்முடைய வாழ்க்கையை நடத்தி செல்கிறது.

உள்மனம் எப்படிப்பட்டது? அதன் செயலை நாம் சாதாரணமாக உணர்வதில்லை. பரம்பரை பரம்பபரையாக ஜீன் மூலமாக கடத்தப்பட்ட பண்புகள், உணர்ச்சிகள், மதி நுட்பம், குழந்தை பருவம் முதல் நம் மனதில் பதிந்து விட்ட ஆசைகள், அபிலாஷைகள், விருப்பு வெருப்புகள் நிறைந்தது நம் உள் மனம். அதில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கலாம்,விகாரமான வெறி உணர்ச்சிகளும் பதிந்து இருக்கலாம். எப்படி ஒரு பயங்கரமான குகைக்குள் நவரத்தினங்களும், வைர வைடூரியங்களும், காட்டு விலங்குகளும்,கலைப்பொக்கிசங்களும் நிறைந்திருக்குமோ அது போல.

நன்மை அல்லது கெடுதல் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்துவது இந்த உள்மனம் தான். பின்னால் இன்பங்கள் அல்லது துன்பங்கள் உண்மையிலே நடக்கும் போது நாம் இந்த உள் மனதை உணர்ந்து கொள்ளலாம்.

சில சமயங்களில் நாம் சொல்ல அல்லது செய்ய வெட்கப்படும் நடவடிக்கைய நம்மை அறியாமல் நாம செய்திருப்போம் அது உள் மனசோட காரியந்தான்.

கனவுகள் நம் எதிர்காலத்தை உணர்த்துகின்றனவா? மனித இனம் தோன்றிய நாள் முதல் கேட்க படும் கேள்வி. எதிர்காலத்தை திட்டவட்டமா படம் பிடித்து காட்டுகிறது என்று சொல்ல முடியாத போதிலும் சூசகமா தெரிவிக்கிறது என்று சொல்லலாம். ஏன்னென்றால் கனவு குறிப்பிட்ட மனிதனின் கடந்தகால வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுதான் வருகிறது அந்த பழைய வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாமல் எந்த எதிர்கால மாறுதலும் உண்டாக முடியாது.

ஒருவன் தன்வாழ்க்கையில் திடு திப்பென்று செய்யும் எந்த ஒரு புதிய காரியத்தைப் பற்றிய உணர்வு அன்று வரை அவன் மனதில் பதிந்த ஒன்று அந்த உணர்வு வெடித்து இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

பதிவாளர் : கலாகுமரன் –இனியவை கூறல்

(3515)

Leave a Reply

Top