யேசுவின் அற்புதங்களுக்கு காரணம் இறைத்துவமா ESP யா? – ESP09

miracles-of-jesusஇறுதியாக இந்த பகுதியில் ESP சக்தியுடைய மனிதரான அல்ஹாசர் பற்றி பார்த்திருந்தோம். தொடர்ச்சியாக இயேசு நாதரின் இறைத்தன்மை பற்றி பேசலாம் என கூறியிருந்தேன். இன்று அப்பகுதியை பார்க்கலாம். ( இது எவ் மதத்தையும் இழிவு படுத்துவதற்காக எழுதப்படுவதல்ல. ESP எனும் சக்தியை எமது இறைவர்களாகவும் இறைத்தூதர்களாகவும் கூறப்படுபவர்களின் சக்தியுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு ஆய்வே. இக் கருத்துக்களை எந்த மதத்தையும் இழிவு படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டாம்.)

யேசு பற்றி பார்த்தோமானால், இறைவனின் மகனாக / தேவ தூதராக சித்தரிக்கப்படுகிறார். அவரின் வாழ்க்கை குறிப்பை பார்த்தோமானால். அவரின் அற்புதங்கள் / விசேட சக்திகள் 30 வயதிற்கு பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. அவர் இறைவனின் மகனாக காட்டப்பட்ட போதும், பிறப்பில் இருந்து அவருக்கு விசேட சக்தி இருந்ததாக கட்டப்படவில்லை. ஒரு குறித்த வயதின் பின்னரே அவரின் அற்புத செயல்கள் வெளிப்பட்டுள்ளன. இது நாம் ஏற்கனவே பார்த்த அல்ஹாசர், டொங்லஸ் ஹியூம் போன்ற ESP மனிதர்களைப்போன்ற ஒரு சம்பவமே. அதாவது, அவர்களும் பிறக்கையிலேயே சக்திகளுடன் பிறக்கவில்லை திடீரென ஏற்பட்ட விசேட சக்திகளே அவர்களை ESP மனிதர்களாக அடையாளப்படுத்தின.

இன்னோர் வகையில் சிந்தித்தால், யேசு ஒரு விசேட நாளில் பிறந்ததாக (வால் நட்சத்திர போக்கு) குறிப்பிடப்படுகிறது. அந்த விசேட நாளில் பிறந்தால் இவ்வாறான விசேட சக்திகள் தானாகவே கிடைக்கும் எனும் ஒரு விதி / ஊக்டம் / தீர்க்கம் இருக்கலாம். காரணம், இந்து மற்றும் இஸ்லாமிய(?) வரலாறு(?) சம்பவங்களிலும் விசேட சக்தி வாய்ந்தவர்களின் பிறப்பு ஒரு விசேட தினத்தில் இருந்ததாக காட்டப்படுகின்றது. இவை பற்றி வேறு ஒரு பகுதியில் பின்னர் மேலும் ஆராயலாம்.

இதே போன்றே, சம்பந்தர் உட்பட 64 நாயன்மார்களில் பலரின் வாழ்க்கை / அற்புத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவர்கள் அனைவரும் ESP மனிதர்களாக இருந்திருப்பார்கள் என்பதே எனதும் என்போன்றோரதும் கருத்து. “இறைவன் / கடவுள்” என்று குறிக்கப்படும் சக்தி மிகப்பெரிய சக்தி. இப்போதைய நிலை வரை விளக்கம் கூறவேண்டும் என்றால், “பிக்பாங்” எனப்படும் பெரு வெடிப்பிற்கு காரணமும் அதன் நோக்கமும் அதற்கு முட்பட்ட நிலையுமே “இறைவன்” எனலாம். அதாவது நமது படைப்பின் காரணம் அறிந்தவரை இறைவன் எனலாம். அதை விடுத்து, எமது பூமியில் நடைபெற்ற / பெறும் சம்பவங்களை வைத்து இறைத்துவம் அளிப்பது என்பது எமது அறிவினால் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருக்கின்றது. காரணம், பிரபஞ்சத்தில் ஒரு சிறு துளியே பூமியும் மனித வாழ்வும். அத்துளியுடன் சம்பந்த பட்ட சம்பவங்களை வைத்துக்கொண்டு இறைத்துவத்தை தீர்மானிப்பது என்னை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இறைத்துவம் என்பது மிகப்பெரிய சக்தி அது என்ன? எவ்வாறு செயற்படும் எனும் ஊகத்தை பின் தொடர்களில் பார்க்கலாம்.

இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய முற்பட்டால் ஒரு விவாதத்திற்கு உரிய பகுதிக்குள் செல்ல வேண்டும். செல்வோம்…

miraclesயேசுவின் வாழ்க்கை சம்பவங்கள் பைபிலை அடிப்படையாக கொண்டே விளக்கப்படுகின்றன. பைபிலில் யேசுவின் 12 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட சுமார் 18 வருட கால வாழ்க்கை நிகழ்வுகளுக்குரிய குறிப்புக்கள் இல்லை. இக்காலப்பகுதி “தொலைந்து போன ஆண்டுகள் என பொருள் படும்வகையில் “Jesus’ Lost Years” ” என அழைக்கப்படுகிறது.
இக் குறித்த காலப்பகுதியில் யேசு இந்தியாவிற்கு சென்றதாகவும், இமைய மலைப்பகுதியில் தியானமூடாக தனது சக்தியை பெற்றதாகவும் ஒரு கருத்து உண்டு. அப் பகுதியை பார்த்தோமானால்…

யேசுவின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட இடங்கள் சில பைபிலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,
யேசு பெதலஹேம் (Bethlehem) இல் பிறந்தார்.(Luke 2:1-20)
ஜெருசலேமிறு பயணித்தார். (Luke 2:22-28)
புனிதர் ஒருவரின் பேரில் யேசு எகிப்து நாட்டில் பாதுகாப்பாக இருந்தார். (Matthew 2:1-12 / Matthew 2:15)
யேசுவின் தாய் மற்றும் வளர்ப்புத்தந்தையாக(?) கருதப்படும் மேரி மற்றும் ஜோசப்பின் சொந்த இடமான நஷரத் இற்கு 12 வயதில் குடிபெயர்ந்தார்.(Matthew 2:19-23)
இவையே பைபில் குறிக்கப்பட்டிருக்கும் முக்கிய இடங்களாக கூறப்படுகிறது.

இதில் எங்கும், யேசு இந்தியாவிற்கு பயணித்ததாக கூறப்படவில்லை. (அப்போது இந்தியா “இந்தியா” என்ற பெயரில் இல்லை என்றபோதும், அப் பகுதிக்கு பயணித்ததாக பைபிலின் எப் பகுதியிலும் குறிப்புக்கள் இல்லை.)

JESUS-HEAL-BOYஆனால், எகிப்துவிற்கு யேசு பயணித்திருப்பது ஒரு ஆர்வமான பகுதி.
காரணம், எகிப்தில் இந்தியா பற்றிய பல குறிப்புக்கள் மற்றும் அழிந்துபோன குமரிக்கண்ட குறிப்புக்கள் பல காக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்திய பகுதியூடாக வந்த குறிப்புக்களைக்கொண்டே எகிப்திய மன்னர் ஒருவரால் அடிப்படை மதம் (யூதமதம்(?)) ஒன்று உருவாக்கப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. இவை பற்றி ஏற்கனவே “லெமூரியா” பதிவுகளில் பார்திருந்தோம்.

மேலும், அக் காலகட்டத்திலும் அதற்கு பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கும் (இன்றும்) இந்தியா என்பது ஒரு விசேட பகுதியாக அனைவராலும் தேடப்படும் பகுதியாக இருதுவருகிறது. (அமெரிக்காவிற்கு கோலாம்பஸ் சென்றதும் இந்தியாவை தேடியே). காரணம் இந்தியா என்பது மாபெரும் நாகரீகமான குமரிக்கண்ட வாழ்வின் எச்சங்களை உள்ளடக்கிய ஒரு மர்மதேசமாக இருந்துள்ளது. (இப்போதும், ஆனால் ஆராய்வு இன்றி அல்லது ஆய்வுகள் முடக்கப்பட்டு.)

mystic2ஆகவே, யேசு அவ்வாறான ஒரு தேசத்தை நாடிச்சென்றிருக்கலாம் என கூறமுடியும். மேலும், Holger Kersten எனும் ஆய்வாளர் யேசு இந்தியாவிற்கு சென்றார் என்பதற்கு சில பல ஆதாரங்களை தனது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். ( His Unknown Life Before and After the Crucifixion (1994) , The Jesus Conspiracy)
Nicolas Notovitch எனும் ரஷ்ய ஆய்வாளார் 19 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பகுதியில் நடாத்திய தேடலில் இஸா(Issa) எனும் புனிதரை பற்றிய குறிப்புக்களை உதாரணம் காட்டி அவரே யேசு என நிறுவ முயன்றுள்ளார். ( Issa நபி எனவே இஸ்லாமியர்கள் யேசுவை குறிக்கிறார்கள்(?))
ஆனால், Nicolas Notovitch திபெத்திய பகுதியில் ஆய்வு செய்யவே இல்லை என J. Archibald Douglas எனும் ஆய்வாளர் ஆதாரங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்.

இன்னோர் தகவலாக, யேவின் பிறப்பின் போது வந்த ஞானி (the Magi) கிழக்கு பகுதியில் இருந்து வந்தவராக குறிப்புக்கள் உள்ளன. அவர் ஒரு இந்திய இமையமலை பகுதியில் வாழ்ந்த ஞானி என இந்து மத பரமஹம்ச யோகானந்தா குறிப்பிட்டுள்ளார். அதாவது, விசேட தினத்தில் பிறந்த யேசுவிற்கு சக்திக்கான வளிகாட்டியாக அவர் இருந்தார் என வாதிட்டுள்ளார்.

இன்னோர் சாராரின் கருத்துப்படி யேசு 108 வயதுவரை வாழ்ந்ததாகவும். 33 வயதிற்குப்பின்னர் மீண்டும் அவர் இமையமலை பிரதேசத்தில் வாழ்ந்ததாகவும் ஒரு கதை உள்ளது.

எது எப்படியானாலும், எயேசுவிடம் எம்மை போன்ற சாதாரண மனிதர்களிடம் இல்லாத சில விசேட சக்திகள் இருந்துள்ளன. அச் சக்திகள் ESP எனும் பதத்திற்குள் உள்ளடங்கக்கூடிய சக்திகளே அன்றி, தனி இறைத்துவம் என குறிக்கும் சக்திகளாக கருதமுடியாது என்பதே எனது கருத்து.

இச் சிக்கலான ஒரு சம்பவத்தை அடுத்து, ESP ஐ எவ்வாறு அதிகரிக்கலாம்… “மந்திரம்” என குறிக்கப்படும் இந்துமத சொல் எவ்வாறானது என்பதை எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
இதை வைத்து இஸ்லாம் மற்றும் இந்து நண்பர்கள் ஆக்க பூர்வமற்ற விவாதங்களை கருத்திடுவதை தவிர்த்துக்கொள்ளவும். நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Ref :
huffingtonpost
gotquestions
compellingtruth
The Jesus Conspiracy
+ Google

(10064)

18 thoughts on “யேசுவின் அற்புதங்களுக்கு காரணம் இறைத்துவமா ESP யா? – ESP09”

 1. sundaraj says:

  இங்கு குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.//////////////////////// புண்ணாகியது பரவாயில்லை உங்கள் ஆத்துமா மரித்திருக்கிறதே அதைக்குறித்து உங்களுக்கு கவலை இல்லையா?-Mr.தமிழ் ஜீனியஸ்

 2. jay says:

  jesus is a prophet. he is not a god..if he is a god, why he asking help from another god..

 3. Rajesh kumar says:

  Jesus is God. And jesus only God. Otherwise nothing is there. If u want to know about god jesus just Read the Bible then automatically ur doubt is going clearly. God bless you.

  1. jay says:

   if u read the bible..why u are saying jesus is god?? he is a prophet and messenger of god..

  2. imaz says:

   Is it ,?
   but Bible Is talking more about Prostitution and
   sex than talking about jesus… may i know why?

   Example
   Aathiyahamam
   19am athiharam

   33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

   34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

   35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

   36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

  3. imaz says:

   33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

   34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

   35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

   36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

 4. kani says:

  Namba mudiyuthu sir aana vishesa naalil piranthar apdina avarukum mela oru sakthi irukunu thane artham..

 5. இங்கு குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.//////////////////////// புண்ணாகியது பரவாயில்லை உங்கள் ஆத்துமா மரித்திருக்கிறதே அதைக்குறித்து உங்களுக்கு கவலை இல்லையா?

 6. இயேசு பிறப்பதற்கு 700 வருடத்திற்கு முன் ஏசாயா என்னும் தேவனுடைய தீர்க்கதரிசி சொன்னது……………
  ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.(இவரே இயேசு)

 7. 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

  21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

  22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

  23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

 8. Bible, Matheu :1:18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

  19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

  1. 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

   21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

   22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

   23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

 9. balasubramanim says:

  Very nice. I wand more information about esp and aliens

 10. manipriya says:

  I want more information about jesus…..pls

  1. Prabu says:

   விரைவில்…

  2. lester floras says:

   Read bible especially new testament

 11. raj says:

  GOOD JOKE.

  1. Prabu says:

   Foolish comment.

Leave a Reply

Top