ஆரம்பமாகவுள்ள ஏலியன்ஸ் தேடல் வேட்டை.

நாசாவின் வேற்றுக்கிரகவாசிகளை கண்டறியும் பிரிவான SETI முதல் முதலாக பரவலாக அண்டத்தில் வேற்றுக்கிரகவாசிகளை தேடும் பணியை தொடங்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

இது பற்றி SETI யின் பொறுப்பாளர் Douglas Vakoch கூறும் போது…
கடந்த காலகட்டத்தில் 3800 இற்கு மேற்பட்ட கிரகங்களை உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் என நாசா ஆய்வு வகைப்படுத்தியுள்ளது. அக் கிரகங்களை குறிவைத்தே இந்த ஏலியன்ஸ் தேடல் இடம்பெறவுள்ளது.

அதாவது, உயிரினங்கள் உணரும் வகையில் சமிக்ஞைகள் அக்கிரகங்களை நோக்கி விடப்படவுள்ளது.

எனினும் ஒரு தரப்பு இத்திட்டத்தை எதிர்க்கிறது. அவர்கள் தரப்பில், வேற்றுக்கிரகவாசிகள் எம்மைவிட அதீத தொழில்நுட்பத்தை கொண்டிருப்பின் எமது தொடர்பு பூமியின் அழிவிற்கு வித்திடும் என கூறுகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கையில், கடந்த 4பில்லியன் ஆண்டுகளாக பூமியில் உயிரினம் வாழ்கிறது. இதுவரை எந்த வேற்று உயிரினமும் எம்மை தாக்க முனையவில்லை. எனவே இப்பயம் தேவையற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓரிரு ஆண்டுகளில் சமிக்ஞைகள் அனுப்பபடலாம்.

ஏற்கனவே, வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த சமிஞை பற்றி நாம் பார்த்திருந்தோம்.

image

(11226)

5 thoughts on “ஆரம்பமாகவுள்ள ஏலியன்ஸ் தேடல் வேட்டை.”

 1. dinesh says:

  nam valthidum intha ulagam nelaiyanathu illai

 2. kavisaran says:

  தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி JANEESH RAMESH.

 3. JANEESH RAMESH says:

  நாம் வேற்றுக்ராகவாசிகளை நம்மை கட்டிலும் அறிவியல் சிறந்தவர்களாக இருக்க கூடாது என்று தான் எதிர்பார்கிறோம், ஆனால் நாம்
  எதிர்பார்ப்பது அனைதுமுரைகளும் நடந்திருவதில்லை. நாம் எதிர்பார்க்கும் வற்றுக்ராகவசிகள் வசிக்கும் கிரகம் நம் பூமியை விட வயதில்
  பெரியதாக இருந்தால், அவர்கள் நம்மை கட்டிலும் அறிவியலில் சிறந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே நாம் அவர்கள் நம்மை கட்டிலின்
  அறிவியல் சிறந்தவர்களாக இருப்பவர்கள் என்று எண்ணுவது நம்மை பிற்காலத்தில் நடக்க இருக்கும் எதற்கும் தயரக்கிவிடும்

 4. JANEESH RAMESH says:

  We are not expecting for aliens to be powerful than us, but not everything we expect happens. If the planet from which aliens are arriving or the planet which we may find with aliens is older than our earth, then there is a possibility for them to be powerful than us. So it is better for us to expect that the aliens will be powerful than us which makes us prepared for anything that may happen in future.

 5. kavisaran says:

  மிக அற்புதமான பதிவுகள். மேலதிக பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். ஒரு சிறு சந்தேகம். நாம் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் நம்மை விட அறிவில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமா?

Leave a Reply

Top