கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?

mosquitoes blood suckingயானை மற்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் மனித நடமாட்டம் இருக்கும் போதே கண்டுபிடித்து விடுகின்றன. உண்ணும் உணவின் வாடையை சுவையை நாம் உணர்ந்து கொள்வது போலவே என்று சொல்லலாம்.

குறிப்பாக “சல்கேடோன் ” (Sulcatone ) எனும் வேதியல் நொதி வியர்வை சுரப்புகளில் வெளிப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “என் அன்பே ” என தம் குட்டினூன்டு மூளையில் பதிவு செய்துவிட்டன கொசுக்கள் .

நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைகழகத்தை சேர்ந்த லெல்ஸ்லி வோஷெல் தலைமையில் ஒரு குழு கொசுக்களுக்கு ஏன் மனித ரத்தம் பிடிக்கிறது என்ற ஆய்வில் இறங்கியது.

விலங்குகளை காட்டிலும் மனிதனின் வாழ்க்கை முறை அவைகளுக்கு பிடித்து போனது. கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மனிதர்கள் தம்மை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக்கொண்டதே காரணமாம்.

காடுகளில் ரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன. விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு இல்லை. அதுவுமில்லாமல் மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும்.
14 விதமான கொசுக்களின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த போது மனிதர்களுக்கும் கொசுக்களுக்குமான தொடர்பினை உறுதி செய்து இருக்கிறார்கள். குறிப்பாக “Or4” (codes for an odor receptor) எனும் கூறு இதை உறுதி செய்கிறது.
இதுதான் முக்கிய பாரம்பர்ய சாவி என்று சொல்லலாம். அதாவது மேற்சொன்ன கூறு அதன் ஜீனில் பதியப்பட்டதால், புதிதாக ஜனிக்கும் கொசுக்கள் மனிதர்கள் மேல் “காதல்” கொண்டு துரத்துகின்றன (! ).
“அடெஸ் அஜிப்டி ” (Aedes aegypti) எனும் வகை கொசுக்களே அதிக அளவில் உலகம் பூராவும் பரவி உள்ளன.

(5166)

One thought on “கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?”

  1. மகரன் says:

    ஒரு உயிரினத்தின் வாழ்வின்போது அவ உயிரினத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இயல்பு எவ்வாறு அவ் உயிரினத்தின் சந்ததிகளின் வழியே கடத்தப்படும்..? இது லாமார்க் என்பவரின் (கைவிடப்பட்ட ஒரு) கொள்கை… மேலும் தற்போது சாள்ஸ் டாவினின் கொள்கையே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது… விளக்கவும்…!

Leave a Reply

Top