கன்னித்தாய்! – அறிவியல் பரிமாணத்தின் அடுத்த கட்டம்.

Kentucky எனும் இடத்தில் அமைந்துள்ள மிருக காட்சிசாலையில் இருக்கும் 6 மீட்டர் நீளமானதும் 91 கிலோகிராம் நிறையுடையதுமான “Python” வகையைச்சேர்ந்த பாம்பு ஒன்று ஆண் துணை இன்றி தானாகவே குட்டி ஈன்றுள்ளது.

பூச்சி வகைகளில் ஏற்கனவே இப்படி சம்பவங்கள் நிகழ்ந்திருந்த போதும், பெரிய விலங்குகளின் இதுவே முதல் தடவை என்பது மட்டுமில்லாமல் இப் பாம்பு கருத்தரிப்புக்கு பெண் துணையும் தேவைப்படவில்லை. (பூச்சி வகைகள் சில பெண் துணையூடு கருத்தரிக்கும்.)

6 குட்டிகளுக்கும் செய்யப்பட்ட DNA (மரபணு) சோதனையில் தாய் பாம்பு மட்டுமே தனி பெற்றோராக அறியப்பட்டுள்ளது.

3 குட்டிகள் பெரும்பாலும் தாயை ஒத்துள்ளன.

பாம்பு வளர்க்கப்பட்ட முறை இவ்வாறான விசித்திர சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம் என் கருதப்படுகிறது.

image

(3038)

Leave a Reply

Top