விண்ணைத்தொடும் மின்தூக்கி விரைவில்.

விண்ணில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கோ செய்மதிகளை சரிபார்பதற்கோ விண்ணிற்கு விஞ்ஞானிகளை அனுப்ப வேண்டும் என்றால் விண் ஏவிகள் (rockets) மூலமே அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கான செலவு அதிகமாக்கும்.

இதற்கு மாற்றீடாக விண்ணுக்கும் புவிக்கும் இடையே மின் தூக்கியொன்றை நிர்மாணிக்கும் திட்டம் பேச்சளவில் இருந்தது. இப்போது, இத்திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் ஆலோசகரான Peter Debney இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

ஆனால் திறம்பட இயங்க 100 வருடகாலம் வரை கூட ஏடுத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

2035 இல் இத்திட்டம் திறம்பட இயங்கும் என, வேறு பல திட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான உத்தேச செலவு 20பில்லியன் அமெரிக்க டொலர்கள். திட்டம் நிறவேறினால், விண்ணுக்கு ஒரு கிலோகிராம் நிறையை அனுப்ப 225$ இக்கும் குறைவாகவே முடியும் என் கூறப்படுகிறது.

image

முதல் கட்ட வடிவமைப்பு

மேலும் அறிய “space elevator” என் கூகுள் செய்யவும்.

(2913)

Leave a Reply

Top