கண்ணுக்கு புலப்படாத குடை : 2015 இல் புதிய தொழில்நுட்பம்

கடந்த வருடம் (2013) Dyson எனும் மாணவரால் “கண்ணுக்கு புலப்படாத குடை – Invisible Umbrella ” பற்றிய எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது. ஆனால், அவ்வாறான சாதனத்தை உருவாக்க கூடிய தொழில் நுட்பம்  2025-2050 காலகட்டத்திலேயே சாதகமாகும் என் கருதப்பட்டது.

எனினும் சீனாவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று இச்சாதனத்தை உருவாக்கும் உக்தியை கண்டறிந்ததாக அறிவித்தது.

நேற்றையதினம்,  சீனாவைச்சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று ஏற்கனவே திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் 2015 இல் சாதனம் பாவணைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது!

இச்சாதனம், கீழ்ப்பகுதியால் காற்றை உறுஞ்சி மேல் பகுதியால் அதிவேகமாக வெளியிடும், அவ் வேகம் மழை நீரை புறம்தள்ளி வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக மாற்றமின்றி இருக்கும் குடைக்கு இது ஒரு புதிய மாற்றமாகும். காலப்போக்கில் தொப்பியில் இவ் நுட்பம் வரக்கூடும்.

image

(3448)

One thought on “கண்ணுக்கு புலப்படாத குடை : 2015 இல் புதிய தொழில்நுட்பம்”

  1. gokulan says:

    nice

Leave a Reply

Top