நம் உடல் குறித்த ஆச்சர்யதகவல்கள்

கர்பமாக இருக்கும் பெண்கள் எந்தவிதமான கனவுகளை பொதுவில் காண்கிறார்கள் ?

பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்
கனவில் வருகிறதாம் இது ஏன் என்பது விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக சொல்கிறார்கள்.

img_45kdoei90

நீண்ட நேரம் தொலைக்காட்சியோ, சினிமாவோ பார்த்தால் நாம் சோர்வடைகிறோம் ஏன் ? என்றால் காட்சியை காண்பதற்கு மூளையின் சரிபாதி சக்தி செலவிடப்படுகிறது.

காட்சிகள் எல்லாம் தலைகீழாக தெரிவதுமாதிரியான கண்ணாடியை மனிதர்களிடம் கொடுத்து சோதித்தார்கள் ஓரிரு நாட்களில் அவர்கள் காட்சியை நேராக உணர்ந்தார்கள் இது மூளை செய்த மாயா ஜாலம். அதே போல கண்ணாடியை எடுத்த பின்பு பார்ப்பவை எல்லாம் சீராக நேராக ஒரே நாளில் அவர்கள் காண முடிந்தது.

சிம்பன்சிகளைப் பார்த்து அது உடம்புல என்ன இவ்ளோ முடின்னு வியக்கிறோம் ஆனா ஒன்ன மறந்திட்டோம் நம்ம உடம்புலேயும் அவ்ளோ முடி இருக்குது என்ன மெல்லியது குட்டையானது அவ்ளவே வித்தியாசம்.

img_049485

ஐலேஸ் மைட்ஸ் (eyelash mites) என்று சொல்லக்கூடிய நுண் உயிரி உங்கள் இமைகளில் உயிர்வாழ்கிறது. மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் ஒன்னாச்சும் இருக்கும்ன்னு சொல்றாங்க.

ஆண்களை விட பெண்களின் கண்சிமிட்டல் இரண்டு மடங்கு (அதான் எனக்கு தெரியுமே ! -உங்க மைண்ட் வாய்ஸ்) இதேபோல இன்னொன்னு சொல்லனும்னா அது வாசனையை நுகர்வது.

10000 லிட்டர் காற்றை நாம் ஒரு நாளைக்கு சுவாசிக்கிறோம்…(காற்றை எப்படி அளப்பீங்கன்னு கேட்கக் கூடாது )

சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்வாங்க…ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா, சாப்பிடும்போது தாடை அசைவினால் நமக்கு அடுத்தவங்க பேசுவது சரியா (சின்ன சப்தங்கள்) கேட்காது இதுவும் ஒரு காரணம். மூக்கு பிடிக்க சாப்பிடறா சொல்றோம் அப்ப காது கொஞ்சம் மந்தமா இருக்கும்.

நம் உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தில் 8 செ.மீ நீளமுள்ள ஆணி செய்யலாமாம்.

தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதற்கு நம் அறையின் குளிர் அதிகமாயிருப்பதும் ஒரு காரணம். (நல்ல வேல நான் ஏசியில் தூங்குவதில்லை)

வேற்று கிரகவாசியின் கை (Alien hand Syndrome) இது மூளை சம்பந்தமான ஒரு நோய் (brain trauma) இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் கை தானா அனிச்சையாக நகர்ந்து கொண்டு இருக்கும்.

நெடுங்காலம் குடல் வால் ஒரு பிரியோஜனம் இல்லாத உறுப்புன்னு நெனச்சாங்க சமீபத்தில கண்டுபிடிச்சது என்னன்னா குடல் வாலில் சாப்பிடும் உணவு ஜீரணமாக தேவைப்படும் ஒருவகை பாக்டீரியாவை குடல் வால் தக்க வெச்சிருக்கு.

நம் குடலில் ஒரு ரேசர் ப்ளேடை கரைக்கக் கூடிய என்சைம்கள் வெளியாகுது.(சோதிச்சு பார்திராதீங்க !!) நாம் சாப்பிடும் மாமிசத்தை ஜீரணம் செய்துவிடுகிறது அப்ப குடலின் உள் அறைகள் சேதாரம் ஆகாதா ? என்றால் ஆகும் அதுக்குத்தான் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருதடவை குடலின் உட்சுவர் வளர்கிறது.

மனித எலும்புகள் காண்க்ரீட்டை விட பலம் வாய்ந்தது (கராத்தே மாஸ்டர் செங்கல்களை எப்படி உடைக்கிறார்ன்னு தெரிஞ்சதா ! )

உடம்பில் உள்ள பெரிய செல் எது என்றால் அது கருமுட்டை (பெண்களின்), அதேபோல் சின்ன செல் எது என்றால் அது விந்தணு (ஆண்களின்)

நம் மூக்கின் இரு நாசித்துவாரங்களிலும் எப்போதும் நாம் மூச்சை இழுத்து விடுவது இல்லை. அப்பப்ப (4 hours once) ஒரு துவாரத்தில் மூச்சு விட்டுப்போம் இழுத்துப்போம்.

இரத்தத்தில் இருக்கும் ஒரு சிவப்பு ரத்த செல்லானது நம் உடலை ஒரு நிமிடத்தில் முழுவதும் சுற்றிவிடும்.

ஆண்கள் தான் அதிகமா ஜொல்லு விடுறதா சொல்லுவாங்க (அது உண்மை இல்லன்னு நினைக்கிறேன். ) வாழ்நாளில் நம் வாயில் 10000 காலண் சலிவா உற்பத்தியாகுதாம்.

பிறந்த குழந்தைக்கு 350 எலும்புகள் உடலில் இருக்குமாம் வளர வளர 206 ஆக குறைந்துவிடுகிறது எப்படின்னா ஒன்றுக்குள் ஒன்று சேர்ந்து விடுகிறது. அதே மாதிரித்தான் ஒட்டகச்சிவிங்கி கழுத்தில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் மனிதனின் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்று என்கிறார்கள்.

தொடர்புடைய பதிவு :

ஆச்சர்யம் ஆனால் உண்மை – மூளை குறித்த தகவல்கள்… 

(10895)

7 thoughts on “நம் உடல் குறித்த ஆச்சர்யதகவல்கள்”

 1. Gowtham Cheguevara says:

  Really nice … Am excited

 2. All new facts all should know when we are at least 15 years of age and new inventions taking place .

 3. kalakumaran says:

  //Anonymous03/07/2014 AT 3:36 PM athiga neram games wilanda kannula etpadura pathipugal enna… //

  கண்டிப்பாக பாதிப்பு இருக்கு… சாதாரணமா கை, கால் வலிகளை உணர்வது போல நாம கண் பாதிப்பை உணர்வது இல்லை.. அதிக நேரம் நாம தொலைக்காட்சியோ, புத்தகம் படித்தாலோ கண்கள் சோர்வு அடையும். வீடியோ கேம் விளையாடும் போது காட்சியை உற்றுப்பார்த்து விளையாடுகிறோம். இந்தபுரம் அந்தப்புரம் கூட திரும்புவது இல்லை. மேற்சொன்னதை விட வீடியோ கேம் விளையாட்டில் கண்ணுக்கு பாதிப்பு இருக்கு எப்பன்னா… நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்

 4. Romeo Shajeeth says:

  athiga neram games wilanda kannula etpadura pathipugal enna

 5. Romeo Shajeeth says:

  kuripugal super paaaaaaa

Leave a Reply

Top