டொல்பின்களூடாக வேற்றுக்கிரக வாசிகளை உணரும் முயற்சி. -NASA திட்டம்

1965 ஆம் ஆண்டு நாசாவின் மேல்பார்வையின் கீழ் மார்கரீட்டா என்ற பெண், சில அடி உயரமான நீர்த்தடாகமுள்ள ஒரு அறையில் பீட்டர் என் பெயர் சூட்டப்பட்ட டொல்பினுடன் சுமார் 6 மாதங்கள் பொழுதைக்கழித்தார். அதாவது டொல்பினுடன் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியது. அப்படி பெண்ணின் கட்டளைகளை பீட்டர் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதும், பீட்டரின் பாலியல் நடத்தையில் ஏற்பட்டதடங்கல்களால் முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது சமீபத்தில் அத்திட்டம் பற்றிய ஆவணப்படம் BBC4 இல் ஒளி-ஒலிபரப்பப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் டொல்பின்களுடனான தொடர்பாடல் திட்டத்தை நாசா ஆரம்பிக்க உள்ளது.

பூமியில் மனிதனுக்கு அடுத்தபடியாக வாழும் புத்திசாலி உயிரினமாக டொல்பின்கள் கணிக்கப்படுகின்றன. டொல்பின்கள் ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகளின் சமிக்ஞைகளையும் உணரும் தன்மை உடையன எனவும், மனித ஆழ்மன சக்திகளை வெளிக்கொண்டுவர உதவும் எனவும் நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரும் 17 ஆம் திகதி இவ் ஆவணப்படம் மீண்டும் BBC இல் வெளியாகும், ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்.
image

(4916)

Leave a Reply

Top