பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவும் கிரேக்கர்களின் கணக்கீடும் !

கிரேக்க வானியல் விஞ்ஞானியும், கணிதமேதையுமான அரிஸ்ட்டார்கஸ் (கி.மு 310 – 230 ) சாமோஸில் வாழ்ந்தவர்.

சூரிய மண்டலத்தில் சூரியன் தான் மையம் என்பதை 265 B.C ல் தெரிவித்தார். அதுமட்டுமல்ல இரவுக்கும் பகலுக்குமான கால வேறுபாடு சூரியன் தன்னைத்தானே சுற்றுவதும் சாய் கோணம் என்பதையும் விளக்கினார்.

முதன் முதலில் தியரிட்டிக்கலாக அண்டவெளி என்பது எப்படி இருக்கும் என்பதையும், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவையும் சொன்னவர்.

அவர் வகுத்தளித்த தொலைவு தற்கால கணக்கீட்டிற்கு பெரிதும் ஒத்து வருகிறது.
நிலவுக்கும் பூமிக்கு இடையே உள்ள தொலைவைப் போல 19 மடங்குகள் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் இருக்கும் என குறிப்பிட்டார்.

ஆனால் உண்மையில் அது 390 மடங்கு தொலைவில் இருக்கு !!
ஆனால் தொலைவை நிர்ணயிக்க அவர் வகுத்த முறையில் பெரிய வேறுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். (பார்க்க படம்)

img_eid9474583

சூரியன் கதிர்கள் நிலவில் எதிரொலிப்பது தெரிந்ததுதான். அரைவட்ட நிலவையும் பார்த்திருப்பீங்க. சூரியனின் கதிர்கள் நிலவை நோக்கி 90 டிகிரியில் பட்டு எதிரொளிக்கிறது.

அந்த ஒரு கோணத்தை வைத்து மட்டும் தொலைவை கணக்கிடமுடியாது இல்லையா..?

அரைவட்ட நிலவின் ஒளியை வைத்து பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள கோணம் 87 டிகிரி என தீர்மானித்தார் (Aristarchos).

ஒரு முக்கோணத்தின் கோணங்களின் கூட்டு தொகை 180 டிகிரி என்பதால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள கோணம் 3 டிகிரி.

சூரியன் கதிர்கள் நிலவில் எதிரொலிப்பது தெரிந்ததுதான். அரைவட்ட நிலவையும் பார்த்திருப்பீங்க. சூரியனின் கதிர்கள் நிலவை நோக்கி 90 டிகிரியில் பட்டு எதிரொளிக்கிறது.

 

அந்த ஒரு கோணத்தை வைத்து மட்டும் தொலைவை கணக்கிடமுடியாது.

img_dist_02
அரைவட்ட நிலவை வைத்து அவர் நிர்ணயம் செய்த கோணம் 87 டிகிரிகள், இன்றைய கணக்கீட்டின் படி அது 89.85 பாகைகள்.

ஆனால் தசம கோணத்திருத்தம் ஏற்புடையதே. அக் கால கட்டத்தில் இருந்த கருவிகளின் துணையுடன் அவரின் கணிப்பு எப்படி என்பதே ஆச்சர்யமான ஒன்றுதான்.

நிலவு சூரியனை சுற்றுகிறது அதே சமயத்தில் பூமியும் சூரியனை சுற்றிக்கொண்ட்டே இருக்கு ஆனால் சமமான வட்டம் இல்லையே எந்த கால அமைவில் இந்த கணக்கீட்டை (சீசன்) எடுத்தார் என்பதையும் கருத்தில் கொள்ளும் போது வானியல் விஞ்ஞானிகள் வியப்படைகிறார்கள்.

wow…What a brilliant ancient Astronomers !!

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு
3,84,400 கிலோ மீட்டர்கள்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு :
149,600,000 கிலோ மீட்டர்கள்.

(7141)

6 thoughts on “பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவும் கிரேக்கர்களின் கணக்கீடும் !”

 1. Abdul Hadee says:

  Yaaru ithai uruvaakkiyathu?

 2. Manikaalai says:

  It’s wonderful

 3. ramesh says:

  Earth’s axial tilt (obliquity) is currently about 23.4°. To understand axial tilt, the right-hand rule can be employed.so Earth and moon contain equal circle.

 4. Manikandan says:

  I request you to update more informations frequently .. Please keep this blog actively

  1. Prabu says:

   முயற்சிக்கின்றேன் :)

Leave a Reply

Top