ஸ்டீவ்ன் ஸ்பில்பேர்கின் ஆரம்பத்தோல்வியும் மீழ்ச்சியும்.

Steven-SpielbergSteven Spielberg (ஸ்டீவ்ன் ஸ்பில்பேர்க்) ஹொலிவூட் சினிமா வரலாற்றில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இயக்குனர். யுரசிக்பார்க், E.T, Jaws, இன்டியான ஜொன்ஸன் என கற்பனைக்கு அப்பாற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

ஸ்பில்பேர்கின் சிறுவயது விருப்பமாக இருந்தது அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியாவில் அமைந்திருந்த School of Cinematic Arts என்ற பல்கலைக்களகத்தில் கல்விகற்கவேண்டும் என்பதே. அதற்கான முதலாவது பரீட்சைக்கு முகம் கொடுத்தார், அவரின் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் சிந்தனைத்திறன் சராசரியை விட குறைவாக இருப்பதாக காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் அடுத்த ஆண்டு விண்ணப்பித்தார் அதே காரணத்திற்காக மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இரு தடவைகளும் நிராகரிக்கப்பட்ட பின்னரும், அவரின் விருப்பத்தை அவர் நிறுத்தவில்லை. மீண்டும் அனுமதிகேட்டு விண்ணப்பித்தார், இத்தடவை பரீட்சைக்கே அனுமதி மறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது!

மூன்று விண்ணப்பித்தும் நிறவேறாதுபோனது அவரது விருப்பம். ஆனால், பல முயற்சிகளின் பின்னர் Universal Studios இல் வேலைக்கு இணைந்துகொண்டார். அங்கு அவரிடம் இருந்த தனித்திறனை இனங்கண்டுகொண்டார் ஒரு மேலதிகாரி. அன்றில் இருந்து ஸ்பீல்பேர்க்கின் திசை மாறியது. அவரை நிராகரித்த பல்கலைக்களகத்தில் பல முறை அறிவுரையாளராக நியமிக்கப்பட்டார்!

(3701)

Leave a Reply

Top