வௌவாள்களை கண்டு மனிதன் பயந்தானா? வியந்தானா ?!!

பாலூட்டிகளான வௌவாள்களை (bats) கண்டு வியந்த மனிதன் அதை பற்றி பல்வேறு கதைகள், திரைப்படங்கள், கார்டூன் திரைப்படங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தோ கற்பனையாக வோ பல பரிமாணங்களை கொடுத்திருக்கிறார்கள். பேட் மேன், பேட் உமென் என பல கார்டூன்கள். டிராகுலா (Vampire) (ரத்தக்காட்டேரி) என்றவகையில் பல திரைப்படங்கள் இதைபற்றி எழுத இன்னும் பல பக்கங்கள் ஆகும்.
உலகத்தில்


“கிட்டி”
என அழைக்கப்படும் பன்றி மூக்கு வௌவாள்கள் அளவில் மிகச்சிறியது  றெக்கையின் நீளம் 15 சென்டிமீட்டர்கள். தங்க கீரிடம் சூட்டிய – பறக்கும் நரி என அடைமொழி கொண்ட மிகப்பெரும் வௌவாளின் றெக்கையின் நீளம் 4 அடி 11 இன்சுகள்.

வௌவாள்கள் 1240 வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரு தொகுப்பாக பிரித்துள்ளார்கள் மைக்ரோ பேட்ஸ், மெகா பேட்ஸ்.  உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்து இருவகையாக பிரிக்கப்படுகிறது, 30 சதவீதம் பழந்திண்ணிகள் (வெஜிடேரியன்) 70 சதவீதம் பூச்சியுண்ணிகள் (நான்வெஜிடேரியன்).  அவற்றில் சில இனங்கள் மீன்,தவளைகளை பிடித்து உண்பவை, சில ரத்தகாட்டேரிகள் ( வேம்பயர்ஸ்)  அல்லது இரத்தம் உறிஞ்சிகள் என வகை பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த இனமானது இயோசீன் காலத்திலிருந்து அதாவது 52 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட இனங்களே வெற்றிகரமாகத் தொடரும் என்ற கருத்து கவனிக்கத் தக்கது.

இதனுடைய இரத்த சம்பந்த உறவுக்காரர்கள் டால்பின், நீர்யானை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

அரிய வகை பழந்திண்ணி வெளவாள்கள் சாதாரணமாக கோவை மாநகரின் மையப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் காணமுடிகிறது. மாலை நேரங்களில் சாதாரணமாக கூட்டமாக பறந்து திரிகிறது. குறிப்பாக நேரு ஸ்டேடியம்-வ.உ.சி விலங்குகள் காட்சியகம்,  காந்தி பூங்காவில் இருக்கிறது. பழந்திண்ணி கொட்டை போடாத இடம் ஆர்டிக், அண்டார்டி பகுதி மட்டும் தான்.

வௌவாள்கள் மீவொலிகளை (ULTRA SONIC) ஒலிக்கச்செய்து கிரகித்து பறக்கிறது. எந்த அளவு துள்ளியம் என்றால் எதிரில் ஒரு கொசுவோ அல்லது மயிரிழையோ இருப்பதாக கொண்டால் அதன் மீது இமைப்பொழுதில் மோதாமல் செல்லும்.

அவை கண்பார்வை அற்றவை அல்ல ஆனால் சற்று மந்த பார்வை உடையவை. அதற்கு பதிலாக மீவொலிகளை எதிரொலிகளாக கிரகித்து இமேஜை தத்ரூபமாக அதன் மூளையினால் உணர முடியும்.  பறவைகளிடையே போட்டியினைத் தவிர்க்கவே அவை இரவில் உணவு தேடுகின்றன.  அதன் பயணம் சில சமயம் 800 கிலோ மீட்டர்களுக்கு தொடர்கிறது. சில வகை அல்ட்ரா வயலட் ஒளி சிதறல்களை உணரும் சக்தி படைத்தவை. கூட்டங்கள் வெவ்வேரானாலும் இவை சப்தங்களிலே உரையாடல் நிகழ்த்துகின்றன.

 

இவை பூச்சி இனங்களை கட்டுப்படுந்தும் மாபெரும் காரணியாக திகழ்கிறது. உதாரணமாக ஆயிரம் வௌவாள்கள் கொண்ட ஒரு கூட்டமானது வருடத்தில் நான்கு டண் பூச்சிகளை சுவாகா செய்து விடுகிறது.

இருட்டு மற்றும் ஈரப்பதமுள்ள பகுதிகளில் வசிக்க விரும்புகிறது. இருந்தாலும் எல்லா வகைகளுக்கும் குகைப்பகுதிகள் தேவை இல்லை. பாழடைந்த கட்டிங்கள்,  கோயில் மாடங்கள், பெரிய மரங்கள் இதன் வசிப்பிடங்கள்.

பெரிய குகைகளில் வாழும் இவற்றின் கூட்டத்தின் மொத்த உறுப்பினர்கள் கிட்ட தட்ட ஒரு மில்லியன்.  இதன் பிறப்பு விகிதம் குறைவு தான்.  தாய் வௌவாள்கள் குட்டியை ஆறு அல்லது எட்டு வாரங்கள் நன்றாக பறந்து இறையைபிடிக்கும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும்.

மழைக்காலங்களில் இவை வெளியில் பறப்பதில்லை அந்த சமயங்களில் இதன் மீவொலி எதிரொலிப்பதில் இவைகள் கிரகிப்பதில் பிரச்சிணை உண்டு என்பதால்.

பலவகை பெயர்கள் : –  படிக்கும் போது இறுதியில் வௌவாள் என கூட்டிப்படிக்கவும்.

கத்திமுனை வால், தனிமுனை வால், புகை கக்கும், உரிஞ்சியுண்ணும், புனல்காது, அகண்டறெக்கை, பேய்முக, எலிமுக,நியூஜிலாந்து -குட்டைவால், புல்டாக்(மீன்பிடிப்பவை), இலைமூக்கு, பொய்முக ரத்தக்காட்டேரி, கண்குலி முக, லாட முக, நீர்யானைமுக,கிட்டி பன்றிமுக, அந்திமாலை, இருட்டுமுக, இன்னும்பல..(இத்தனை ஆங்கில படங்களுக்கு கதை கொடுத்த ஜீவன்கள்)

டெக்சாஸ், ஓக்லகோமா,(மெக்சிகன் நீளவால் வௌவாள்), வர்ஜினியா (பெரியகாதுடைய வௌவாள்) போன்ற அமெரிக்க மாகாணங்கள் வௌவாள்களை சின்னமாக கொண்டுள்ளன.

பதிவாளர் : கலாகுமரன் – இனியவை கூறல்

(3269)

One thought on “வௌவாள்களை கண்டு மனிதன் பயந்தானா? வியந்தானா ?!!”

  1. dhamodharan says:

    Realy very nice usefull news

Leave a Reply

Top