நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!

 • நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..) 
 • ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)
 • தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.
 • இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.
 • மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.
 • குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமெ ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )
 • அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.(…யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்…)
 • உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.
 • நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

கொஞ்சம் இருங்கள் … ஒரே ஒரு தகவல். 

 • அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.

பதிவாளர் :  கலாகுமரன் –இனியவை கூறல் 

(17493)

2 thoughts on “நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!”

 1. good collection try more on brain.

Leave a Reply

Top