மாயமான மலேசிய விமானமும் வெளிச்சத்திற்குவரும் மர்ம இலுமினேட்டியும்! – 09

இலுமினேட்டி குழுமத்தின் திட்டங்கள் என்றவைகையில், இலுமினேட்டி அட்டைகளை அடிப்படையாகக்கொண்டும் எதிர்-இலுமினேட்டி அங்கத்தவர்களின் தகவல்களைக்கொண்டும்; திட்டமிட்டு நடத்தப்பட்ட மற்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சம்பவங்களை எனது/உங்களது போக்கில் பார்த்துவருகின்றோம். இன்று…

MH-370பங்குனி(மார்ச்) மாதம் 8ஆம் திகதி அன்று மலேசியாவின் MH370 என்ற விமானம் 239(?) பயணிகளுடன் காணாமல் போய் இருந்தது. அது தொடர்பான ஏற்கனவே பல இடங்களில் படித்திருப்பீர்கள், இங்கு “இலுமினேட்டி குழுமத்தின் கடத்தலாக இருக்குமா?” என்ற கோணத்தில் பார்க்கலாம்.

ஐ.நா திட்டத்திற்கு அமைய கடற்பகுதிகளிலும், வான் பகுதிகளிலும் இடம்பெறும் இயற்கை / செயற்கை மாற்றங்களை அறிந்துகொள்வதற்காக உலகம் முழுவதும் பல இடங்களில் விசேட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த எந்த கருவிகளிலும் விமானம் வெடித்ததற்கான சான்றுகளோ வீழ்ந்ததுக்கான சான்றுகளோ பதிவாகவில்லை!
எனினும், இன்றுவரை இந்து சமுத்திரப்பகுதிகளில் பாரிய அளவு தேடல்கள் நடைபெற்றுவருகின்றன.
( இக் கருவிகல் விமானம் இந்து சமுத்திரப்பகுதியில் பறந்ததற்கான பதிவுகளை கொண்டுள்ளன… இதுவே இந்து சமுத்திரத்தில் தேடல் மும்முரமடைய காரணமாக அமைந்தது.)

இலுமினேட்டி குழுமம் என்பது, இஸ்ரேலில் திட்டம் தீட்டப்பட்டு; உலக காவலனாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவினூடாக செயற்படும் ஒரு குழுமம் என பல anti-illuminati குழுமங்கள் ஆதாரங்களுடன் கூறிவருகின்றார்கள். (அமெரிக்காவின் டொலர் நாணயத்தாளை கவணியுங்கள், ஃபேஸ்புக்கின் மர்ம பின்னனி என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட பதிவை பார்க்கலாம்.)

ஏற்கனவே, இலுமினேட்டி தொடரில் 8 ஆவது பதிவில், 2004 சுனாமி தாக்க சம்பவத்திற்குசில தினங்களுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் இருந்த தீவில் இருந்து தனது இராணுவங்களை அமெரிக்கா நாட்டிற்கு அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இன்று அந்த தீவு தான் மர்ம முடிச்சாக மாறியுள்ளது.

illuminati-smsசில தினங்களுக்கு முன்னர், the guardian தளம் அடங்களாக பல தளங்களூடாக, மாயமான விமானத்தில் இருந்த ஒரு அமெரிக்க பிரஜை அதனது பத்திரிகையாள நண்பருக்கு தாம் ஒரு தீவில் (Diego Garcia ) கடத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரது கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தான் கைபேசியை மறைத்து வைத்திருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த தீவு இந்து சமுத்திரத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் தீவு! இக் குறுஞ்செய்தியின் பின்னர் விமானக்கடத்தல் அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாக இருக்கும் என்ற சந்தேகம் உலகம் முழுவதும் எழுப்பப்பட்டுள்ளது. (இப்போது பல பிரபல தளங்கள் இச் செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளன.)

இதை மேலும் பார்க்க முதல்,

அந்த விமானத்தை செலுத்திய ஜஹாரி அகமது ஷாவைப்பற்றி பார்க்கலாம், 53 வயதான அவர் சுமார் 30 வருடங்களாக விமான ஓட்டி அனுபவமுள்ள ஒரு மூத்த விமானி. மலேசியாவின் பிரதான எதிர்கட்சியான(?) மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளார். அக் கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அடுத்த நாளே விமானம் மாயமானது/பட்டது. இக் கோபத்தை காட்டவே விமானி விமானத்தை கடத்தி இருக்க வேண்டும் எனம் கருதப்படுகிறது.

ஆனால், தீர்வுக்கு சில வாரங்களுக்கு முன்பே, தென் இந்திய மற்றும் மாலைதீவு குறுகல் விமான ஓடுதளங்களில் விமானத்தை எப்படி தரை இறக்குவது என பார்த்துள்ளார்! (சிமுலேட்டர் கருவியில் சிக்கிய தகவல்).
விமானி விமானத்தை சுமார் 45 000 அடி உயரத்திற்கு திடீரென மேல் எழுப்பியுள்ளார் அதற்கான பதிவுகள் பதியப்பட்டுள்ளன. பின்னர், விமானத்தில் இருந்து வெளியிடப்படக்கூடிய பல சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன.

ஆகவே, விமானிகளின் உதவியுடன் தான் விமானம் மாயமானது என்பதை உறுதிப்படுத்தமுடிகிறது. விமானி விமானத்தை அதி உயரத்திற்கு உயர்த்தி விமான சமிக்ஞைகளை துண்டித்ததால், விமானத்தை விபத்துக்கு உட்பட வைப்பது அவர் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது. விமானியின் வீட்டில் இருந்த simulator இல் விமானி குறுகிய விமான ஓடுதளங்களில் விமானத்தை தரையிறக்குவதை பார்வையிட்டமை, விமானம் தரையிறக்கப்படும் நோக்கில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மேலும், தென் இந்திய – மாலைதீவு பகுதிகளில் விமான தரையிறக்கத்தை பார்வையிட்ட்டதும், தற்போது கூறப்படும் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்படும் தீவு, மாலைதீவுகளை ஒத்த அமைப்புடன் இருப்பதனால் மேலும் இது ஒரு திட்டமிட்ட செயல் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இன்னோர் வினோதமாக, குறித்த நாளில் இரவு நேரத்தில் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ரேடர்கருவிகளின் செயற்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்திருக்கிறது!

மேலே பார்த்த தகவல்களின் அடிப்படையில் எதுவும் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படாவிடினும், இது கடத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உங்கள் மனதிலும் தோன்றி இருக்கும் என நம்புகின்றேன்…
நம்புபவர்களுக்காக இது எப்படி இலுமினேட்டியுடன் தொடர்புபடும் என்பதை பார்க்கலாம்…

படம் trident 01

படம் trident 01

இலுமினேட்டி குழுமத்தின் உப சின்னங்களின் ஒன்றாக சூழமும் கருதப்படுகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தின் சின்னம் சூழத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது!
ஏற்கனவே, அமெரிக்காவின் செப்டொம்பர் 11 தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட இலுமினேட்டி செயல் என பார்த்திருந்தோம். இடிந்துபோன அந்த இரண்டு கட்டடங்களின் நினைவுச்சின்னங்களாக இடம்பெற்றிருக்கும் அமைப்பை பார்க்கவும்… இரண்டு சூழங்கள்… (படம் trident 01), அமெரிக்காவுடன் எந்த விததிலும் சம்பந்தப்படாத இந்த சின்னங்கள் ஏன்?

மேலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு பெரிம் பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு நாடு சீனா, மாயமான விமானத்தில் இருந்தவர்களில் 153 பேர் சீனர்கள், அதில் நால்வர் முக்கிய அரசியல் பின்னனியுடையவர்கள் என சொல்லப்படுகிறது. (இன்று, இந்துசமுத்திரப்பகுதியில் காணாமல் போன விமானம் இருப்பதற்கான சமிக்ஞைகள் தமது செய்மதிகளில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக சீனா தனது பங்கிற்கு தேடுதலில் இறங்கலாம்… இறங்கினால், பல திருப்பங்கள் இடம்பெற வாய்ப்புண்டு… ஆனால், இவை நடைபெற முதல் தடையங்களை அறவே அழித்திட முடியும்!)

இது வேறு நிகழ்ச்சி… ஆனாலும் இதே நோக்கத்தில் பார்க்க முடியும்…
சமீப காலமாக உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பகை அதிகரித்துவருகின்றது. உக்ரைனின் சின்னத்தில் சூழம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இலங்கை போன்ற நாடுகளில் உத்தம்/இன அழிப்புக்கள் நடைபெற்ற போது கண்டுகொள்ளாத அமெரிக்கா உட்பட்ட நாடுகள் இப்போது உக்ரைனின் பக்கம் நிப்பதை காணலாம். (ரஷ்யா எப்போதும் அமெரிக்காவிற்கு எதிரான ஓர் பலம் பொருந்திய நாடாகவே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுவும், 2009இன் பின்னர் ஏற்பட்ட உலகபொருளாதார பின்னடைவின் பின்னர், மேலும் பலமடைந்த நாடுகளாக உருவெடத்த இரண்டு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று… இன்னொன்று சீனா… )

மாயமான விமானம் தொடர்பான மேலும் சில தகவல்கள்…

“Two passports, three cities, two countries, one day.” இது பிட்புல் மற்றும் ஷகிரா பாடிய பாடலில் இடம்பெற்ற வரிகள். இவை மலேசிய விமான கடத்தலை குறிப்பதாக கூறுகின்றார்கள்.

மலேசிய விமான தேடலில் பங்கேற்ற ஆனால், சூழ அடையாளத்தை கொண்ட நிறுவனக்களில்/பாடசாலைகளில் கல்விகற்ற அதிகாரிகள் மூவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்கள்.

Sochi 01

படம் Sochi 01

இதே பகுதியில், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தாக்குதல் நடைபெறலாம் என இலுமினேட்டி அட்டைகளை அடையாளம் காட்டி கூறப்பட்ட தகவல்களை பகிர்ந்திருந்தேன். ஆனால், அது நடைபெறவில்லை. “இலுமினேட்டி” என்ற சொல்லின் மீதே சந்தேகத்தையும் அப்படி ஒன்றும் இல்லை என்ற நிலையையும் இச் சம்பவம் வெகுவாக பலரிடையே ஏற்படுத்தி விட்டது. ஆனால், 2014 இல் குளிர்காலப்பகுதியில் ரஷ்யாவில் பராலிம்பிக் நடைபெறவுள்ளது. இடம்பெறும் நகரம் Sochi, அவ் நகரத்தில் இருக்கும் பிரபல மணிக்கூட்டு கோபுரம் தான் இது. (படம் Sochi 01)
குறிப்பிட்ட இலுமினேட்டி அட்டை தான் படம் illuminati 01 இல் உள்ளது. கோபுர உச்சிகளை நீங்களே கவணியுங்கள்…

illuminati 01

நீண்ட நாட்களிற்கு பிறகு இடப்பட்ட பதிவு, நீண்ட பதிவாக அமைந்துவிட்டது… அடுத்த பதிவில், மேலும் பல எதிர்கால திட்டங்களை பார்க்கலாம்… உங்கள் கருத்துக்களையும், நீங்கள் அறிந்த தகவல்களையும் கருத்திடுங்கள்…

References : abovetopsecret, vikatan ,atruthsoldier, gizmodo, google news feed

(15856)

3 thoughts on “மாயமான மலேசிய விமானமும் வெளிச்சத்திற்குவரும் மர்ம இலுமினேட்டியும்! – 09”

  1. Theeban says:

    Sochi லயும் ஒன்னும் நடக்கலயே….???

  2. என்னோடு தொடர்பு கொள்ள முடியுமா சகோ
    Whatsapp no xxxxxxxxxx

Leave a Reply

Top