மேரி க்யூரி

19583087558_1365133780_n

மேரி க்யூரி (1866-1934)

போலந்து பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் பட்ட இடத்தில் பிறந்தவரான மேரி க்யூரி உலக மக்களுக்காக புற்று நோய் குணப் படுத்தும் ரேடியத்தை தன் உயிர் கொடுத்து கண்டு பிடித்தார் என்று சொல்லலாம்.

சோதனைச் சாலையில் கதிர் வீச்சு தாக்கத்தினால் அவர் ரத்தம் கெட்டது.
அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் சொன்னார் “அழகான யுவதிகள் இருக்க வேண்டிய இடம் சமையல் அறையும் வரவேற்பறையும் தவிர விஞ்ஞான வகுப்பறை அல்ல…”

பெண்ணான அவருக்கு நொபல் பரிசு வழங்குவதை ஒரு கூட்டம் கடுமையாக எதிர்த்தது. எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு 45 மாதங்கள் ஓய்வில்லாமல் முதுகு ஒடியும் படியான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். மேரி கண்டுபிடித்த ரேடியம் மிகக் கொடுமையான புற்று நோயை குணப் படுத்தும் மருந்தாயிற்று.

ரேடியம் கண்டுபிடிக்கும் முறையை, காப்புரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்து இருந்தால் கோடி கோடியாய் சம்பாதித்திருக்க முடியும் ஆனால், உலகத்துக்கே இலவசமாக வழங்கிவிட்டார்.

அதன் பின் அவருக்கே ரேடியம் தேவைப் பட்ட போது தயாரித்து வைத்திருந்த எந்த நிறுவனமும் அவருக்கு கொடுக்க முன் வரவில்லை.

அமெரிக்காவை சேர்ந்த மாதர் அமைப்பு லட்சம் டாலர் நிதிதிரட்டி அவருக்கு ரேடியம் கிடைக்க ஏற்பாடு செய்தது. இறக்கப் போவதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அந்த முடிவை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவர் வேண்டியது இறப்புக்குப் பின் கணவர் க்யூரியின் கல்லறைக்கு பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாய் இருந்தது.

அவரின் விருப்பத்திற்கும் சாதனைக்கும் உற்ற துணையாக இருந்தார் அவர் கணவர். பெண்கள் படிப்பதை கேலி பேசும் படிப்பாளிகள் நிறைந்த சமூகத்தில் இருந்து மீண்டுவந்த மேரி அன்றைக்கு சவால்களை சந்திக்காமல் இருந்து இருந்தால் உலகம் ஒரு அருமையான விஞ்ஞானியை இழந்து இருக்கும்.

by Kalakumaran

(2935)

2 thoughts on “மேரி க்யூரி”

  1. Dineshkumar K says:

    அறியாததை அறிந்தேன் இந்த வலைதளத்தின் வாயிலாய்…

  2. savier says:

    valga valamudan Marie Curie…

    nee ulagil illai endralum….un peyar endrum nilaithu irukkum..

    makkal manadhil

Leave a Reply

Top