பேர்முடா முக்கோணமும் ஆழ்கடல் அட்லான்டிஸும் – மர்ம பிண்ணனிகள். -4

bermuda_tamilபேர்முடா மர்ம முக்கோண வலையம் பற்றி பார்த்துவருகின்றோம். ஏற்கனவே தேவையான அளவிற்கு அங்கு இடம்பெற்ற முக்கியமான மர்ம சம்பவங்களை பார்த்திருந்தோம். இனி, அங்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கலாம்? என்ற ரீதியில் அறிவியல் கூறுவதையும், ஆய்வாளர்கள் கூறுவதையும், எனக்கு தோன்றுவதையும் பார்க்கலாம். உங்களுக்கு தோன்றுபவற்றை கருத்தில் கூறுங்கள்.

இறுதியாக டொனால்ட் குறோஹர்ட்ஸ் என்பவரின் சம்பவத்தை பார்த்தோம். படகு மட்டும் நிற்க அதில் இருந்த மனிதர் மட்டும் காணாமல் போய் இருந்தார்.

இதே போல், இன்னொரு சம்பவத்தில்…
இராணுவ கப்பல்கள் பேர்முடா முக்கோண வலையப்பகுதியினூடாக சென்ற போது. சுமார் நூறு பேருடன் மூழ்கிப்போனதாக பதியப்பட்ட கப்பல் ஒன்று தனியே நின்றது. சோதனையின் போது மெலிந்த நிலையில் ஒரு நாயும், பயணிகளின் நகைகளும் மீட்கப்பட்டன! ( அந்த நாய்க்குத்தான் தெரிந்திருக்கும் மர்மம்.)

மனித தவறுகள்.
குறித்த பகுதியில் இயற்கையாக ஏற்பட்ட சில விபத்துக்களை தொடர்ந்து, குறித்த பகுதி தொடர்பாக விமான,கப்பல் ஓட்டிகளுக்கு ஆழ்மனதில் ஏற்படுத்தப்பட்டு விட்ட பயம்/பதட்டம் காரணமாகவே விபத்துக்கள் ஏற்பட்டு மாயமாகும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மற்றம்படி அங்கு எந்த மர்மமும் இல்லை என ஒரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் பேர்முடாவை அண்டிய கடல் நீர் மிகவும் தெளிவானதாகவும் அதே நேரம் அடிக்கடி கால நிலை மாற்றத்திற்கு உட்படும் இடமாகவும் இருப்பதுடன், பேர்முடா முக்கோண வலையத்தை அண்டிய பகுதிகளில் பல கடல் குன்றுகள் காணப்படுவதனால், இலகுவாக தொழைந்து போவதற்கான் சந்தர்பங்கள் அதிகம். எனவே, அடையவேண்டிய இடம் என நினைத்து குன்றுகளை நோக்கி பயணித்து அதன் அருகில் இருக்கும் கூர் பாறைகளின் விளைவாக விபத்துக்குள்ளாகி கப்பல்கள் மூழ்கி இருக்கும். எனவே மனித தவறுதான் என வாதிடப்பட்டது.

எனினும், அக் குன்றுகளை அண்டிய பகுதியில் நடந்த தேடுதலில் எந்த தடையங்களும் கைப்பற்றப்படவில்லை. மற்றும் இக்காரணங்கள் விமானங்களின் விபத்துக்களுக்கும் பொருந்தும் இயல்புகுறைவானதாகையால் இக் கூற்று பலரால் நிராகரிக்கப்பட்டது.

காந்த மையம்.
magnetic-mountainபேர்முடா முக்கோண வலையத்தில் அதீத காந்த ஈர்ப்பு மையம்(காந்த பாறைகள் என்றும் கூறப்பட்டது.) இருப்பதனால்தான் அதை அண்டி செல்லும் எந்த பொருளும் ஈர்க்கப்படுகிறது… (+ பல சம்பவங்களில் விமானிகளினதும், கப்பலோட்டிகளினதும் திசை அறி கருவியில் வட திசை முற்கள் தாறுமாறாக மாறியதாக, கட்டுப்பாட்டகத்திற்கு இறுதியாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.) என்று ஒரு சாரார் ஆய்வறிக்கை விட்டனர். எனினும், காந்த பாறைக்கான பெளதீக ஆதாரங்கள் இல்லாததால்; ஆய்வாளர்களின் முயற்சியின் படி, எந்த வித உலோகமும் பயன்படுத்தப்படாத நிலையான சிறிய வகை கப்பல்கள் பேர்முடா பகுதியில் உலாவ விடப்பட்டன.
அவற்றிலும் பலது மாயமாய் போனது! எனவே காந்த பாறைகள் என்ற கோட்பாடு அடிபட்டுப்போனது.

கடற்கொள்ளையர்கள்.
pirates-tamilகரிபியன் தீவுகளை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக கடற்கொள்ளையர்களின் வேட்டை நடைபெற்று வந்ததால், காணாமல் போன கப்பல்களின் மாயத்திற்கு காரணம், கடற்கொள்ளையர்கள் தான் என ஒரு சாரார் கூறினர். எனினும், காணாமல் போன கப்பல்களில் இராணுவ கப்பல்களும் அடங்கும். அவற்றை கடற்கொள்ளையர்கள் வீழ்த்தி இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும்; விமானங்களுக்கு…
(மேலே குறிப்பிட்ட சம்பவத்திலேயே, நகைகள் அப்படியே மீட்கப்பட்டன. மனிதர்கள் வேட்டையாடப்படடதற்கான எந்த அடையாளங்களும் கைப்பற்றப்படவில்லை.)

திடீர் புயல்கள்.
திடீரென ஏற்படும் பாரிய கடல் சூறாவளிகள் காரணமாக கப்பல்கள், விமானங்கள் கடலால் விழுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் திடீர் திடீரென புயல்கள் எழுந்ததற்கான் எந்த சாத்தியமும் விண் ஆய்வுமையங்களில் பதியப்படவில்லை. அதே நேரம் நாம் ஏற்கனவே பார்த்த சில சம்பவங்களில் மனிதர்கள் மட்டுமே காணாமல் போய் உள்ளார்கள். சூறாவளி மனிதர்களை மட்டும்???..

அட்லான்டிஸ் நகரின் விளைவு.
Atlandis-tamilபல காலமாக அமெரிக்க செவ்விந்திய மக்களிடையே இருந்து அன்லான்ட்ஸ் எனும் கடலில் மூழ்கிப்போன மாபெரும் நகரம் பற்றிய கதைகள் உலாவுகின்றன. ஒரு சாரார், இந்த நகரத்தின் கட்டிட வேலைப்பாடுகளினூடாக பாய்ந்து செல்லும் நீரினால் ஏற்படும் சுழற்சியின் காரணமாகவே சில காலங்களில் மட்டும் கப்பல்களும், விமானங்களும் உள் இழுக்கப்படுகின்றன என கூறுகின்றனர்.

பல சுழியோடிகளும் சில ஆய்வாளர்களும் குறித்த பகுதியில் கடலின் அடியில் பிரமிட்டுக்களைப்போன்ற அமைப்புக்கள் இன்றும் அழியாது உள்ளது என கூறுகின்றன. ஆனால், அன்லான்டிஸ் என்ற நகரம் ஆழ்கடலில் இருப்பதற்கான எந்த வித உத்தியோக பூர்வ புகைப்பட ஆதாரங்களும் சிக்கவில்லை.

இதுவரை சாதாரணமான முறையில் கூறப்படும் காரணங்களை பார்த்தோம். அடுத்த பகுதியில் சற்று குழப்பமான‌
கருந்துளை, நேரமாற்றம், ஏலியன்ஸ் மற்றும் மாற்று உலகம் என்ற கோணங்கள் உள்ளடங்களாக மேலும் சில காரணங்களை பார்ப்போம்.

More @

Incidents Ref  : aalkadalil aaviraajyam(+google), sciencechannel

(9713)

5 thoughts on “பேர்முடா முக்கோணமும் ஆழ்கடல் அட்லான்டிஸும் – மர்ம பிண்ணனிகள். -4”

 1. Harish says:

  atlantis polavea mu enda ondu pacific la irunthichu. atha patri oru pathivu idalammea.

 2. antony says:

  nice informations.i expect in nearly we find out the solution.

 3. Murugan says:

  தகவலுக்கு நன்றி..

 4. Samy Uthayachandran says:

  A

 5. Anandah says:

  Unmayana karanam ennavagathan iruka mudiyum?

Leave a Reply

Top