வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் “ஏலியன்ஸ்” எதிர்கால மனிதர்களா? (ஏலியன்ஸ் 06)

PART 01  |  PART 02  |  PART 03  |  PART 04  |  PART 05 

நாங்கள்தான் ஏலியன்ஸாக இருக்கலாம் எ

ன போன பதிவில் நான் கூறியிருந்தேன்… அதை பார்ப்பதற்கு முன்னம் சில சம்பவங்களை பார்த்தால் பொருத்தமாக இருக்கும்…

1954 ம் ஆண்டில் அமெரிக்காவில் பிரபலமாக பேசப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த தகவலின் படி…

அமெரிக்காவின் குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் பல பகுதிகளைச்சேர்ந்த மக்களால்… தாம் விசித்திரமான உயிரினங்களை( மனிதர்களை) கண்டதாக வெவ்வேறு இடங்களில் பொலிஸ்ஸாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இவர்கள் அனைவரினதும் புகார்களிலும்… “குட்டையான உருவமும், பெரிய தலையும், நீண்ட கைகளும், விசித்திரமான நீளமான கண்களும் கொண்ட மனிதர்களை (?) தாம் கண்டதாகவும்…. அவர்கள் தம்மை கண்டதும் ஓடி மறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்…
மேலும் அவர்களை பின் தொடர்ந்து சென்றவர்கள் மயக்கமுற்று சுயனினைவின்றி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்…
சிலர்… தாம் அவர்கள் வந்திறங்கிய இயந்திரத்தை/பறக்கும்தட்டை கண்டதாகவும் கூறியுள்ளார்கள்…

( ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பலர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இந்த தகவல்களை பதிவு செய்தமையால்… இது நம்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது…
குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் என்பதன் மூலம்… அவர்களின் வேகம் சம்பந்தமாகவும் நங்கள் இந்த பதிவுகளை கணக்கெடுக்கலாம்… )
————————————————————————————–
இது போன்றே… பொதுவாக அனைத்து பறக்கும்தட்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ளது…

நாங்கள் இங்கு கவணிக்க வேண்டியது…

அவர்கள் கூறிய உடலமைப்பைத்தான்…

அவர்கள் கூறிய உடலமைப்பில்… கைகள் நீளமாகவும் உடல் குட்டையாகவும் தலை பெரிதாகவும் இருந்ததாக கூறியுள்ளார்கள்…
இதுதான் இங்கு முக்கியமானது…
ஏனென்றால், விஞ்ஞானிகள் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியில் என்ன என்ன உடல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்வு கூறுகிறார்களோ… அதையொத்தே இந்த சம்பவங்களின் போது கூறப்பட்ட ஏலியன்ஸின் உருவ அமைப்பும் இருக்கிறது…. ( விஞ்ஞானிகளால் எதிர்கால மாற்றம் சம்பந்தமாக கூறப்பட்ட விளக்கங்கள் முதல் 2,3 ம் பதிவுகளில் இருக்கிறது… வாசிக்காதவர்கள் வாசிக்கவும்… :) )
அத்தோடு இதுவரை பார்த்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களின் போதும்…
ஏலியன்ஸின் உருவமென அடையாலம் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களிலுமே ஏலியன்ஸின் உருவ அமைப்பு மனிதனின் உருவ அமைப்பினைஜொத்ததாகவே உள்ளது. ( சில சம்பவங்களில் வேறு அமைப்பு கூறப்பட்டாலும்… அதாவது பல கைகள் என்பது போன்ற உருவங்கள் கூறப்பட்டாலும்…. அவையும் நாம் பூமியில் காணும் ஏதோ ஒரு உயிரினத்தின் சாயலை ஒத்ததாகவே உள்ளதை காணமுடியும்….)

இதன்னடிப்படையில் பார்க்கும் போது… ஏலியன்ஸ் என பொதுவாக கூறப்படும் உடலமைப்பானது எமது புலன்களால் உணரப்பட்ட உருவங்களை அடிப்படையாக கொண்டே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நான் ஏற்கனவே செவ்வாயும் மனிதனும் நாமும் பதிவில் கூறியதன் படி…
ஓரனு அமீபாவாக உருவான உயிரின ஆரம்பம்…
கலன்களின் பிரிவின் போது ஏற்பட்ட சிறு…சிறு தவறுகளின் காரணமாகவும்… பிற்காலத்தில் ஏற்பட்ட இனக்கலப்பினாலும் பல உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்து… இன்று உச்சக்கட்டமான பரிணாமமடைந்த மனிதன் உருவாகியுள்ளான்…
இந்த பரிணாம வளர்ச்சி நிண்டுவிடும் என கூற முடியாது… பரிணாமவளர்ச்சி என்பது தொடர்ச்சியானது… ஆகவே… குரங்கிலிருந்து மனிதன் வந்தது போன்று… மனிதனிலிருந்தும் இன்னொரு மேம்பட்ட உயிரினம் உருவாகும் என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளத்தக்க வெளிப்படை உண்மை.
நோர்மலாகவே… ஆதிகாலத்து மனிததுக்கும் நமக்கும் பல வித்தியாசங்கள் உருவாகிவிட்டன… மூக்கு , விலா எலும்பு என பல படிகளில் நாம் பரிணாம் அடைந்துவிட்டோம்…
ஹீ….ஹீ… இன்று கூட சூழல் மாற்றங்களால் தேவையற்றதாக கருதப்படும் முடிகூட கொட்டுகிற… ( இது சம்பந்தமாகவும் ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம்…) மொட்டை விழுபவர்கள் இனி கவலைப்படதேவையில்லை…. ஹீ…ஹீ…. பரிணாம ரீதியில் அவர்கள் எம்மைத்தாண்டிக்கொண்டிருக்கிறார்கள்….

ஆனால்….
வேற்றுக்கிரக வாசிகளாக கருதப்படும் ஏலியன்ஸும் மனிதனின் உடலமைப்பை ஒத்திருக்கும் என கூறுவது ஒரு நெருடலான விடையம்.
ஏனென்றால்… பூமியில் அணுக்கலன்களில் ஏற்பட்ட தவறுகளால்த்தான் இன்று நாம் உருவாகியுள்ளோம்..
இதே படியில்… தவறுகள் ஏற்பட்டால்த்தான்… 2 கை,2கால்,ஒரு முகம் என மனித அமைப்பையோ அல்லது பூமியின் இயற்கை உயிரின அமைப்பையோ ஒத்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆனால்… இதே தவறுகள் ஏற்பட வேண்டுமெனின்… பூமி இருக்கும் அதே அண்டவெளி சூழ் நிலை இருக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் குறைந்தது… ( சாத்தியமும் இருக்கிறது… அதை இதில் கூறினால் இடம் ஓவராக நீண்டுவிடும் என்பதால் எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்…)

நாங்கள் முக்கியமாக இன்னொரு விடையத்தையும் இங்கு பார்க்கனும்…

அதாவது….
மனிதன் எவ்வளவுதான் கெட்டித்தனமானவனாக இருந்தாலும் இயற்கையின் அமைப்பை மீறி… எம்மால் சிந்திக்க முடியாது…
சும்மா பார்த்தாலே இது தெரியும்… கார்,பிளேன்,கப்பல் என எதைப்பார்த்தாலுமே ஏதோ ஒரு வகையில் இயற்க்கையாக உள்ள அமைப்பை ஒத்தே இது இருக்கிறது…
காரணம் மனிதனின் மூளையில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணக்கருக்கள் இவை… இது மாறுவதற்கு சந்தர்ப்பம் மிக…மிக குறைவு…
அதனால்… கூட ஏலியன்ஸின் உருவங்களை மனிதனுடம் ( எமக்கு உட்பட்ட இயற்கையுடன் ) ஒப்பிட்டு கூறுகிறார்களாக இருக்கலாம்…

ஏற்கனவே இந்த ஏலியன்ஸின் அமைப்பு பற்றி…
கிரேக்க , எகிப்திய‌ , புராதன குகைகளில் காணப்பட்ட குறிப்புக்களைப்பார்த்திருந்தோம்…
அந்த‌ குறிப்புக்களில்… மனிதனுடன் இணைந்து செயற்படுவது போன்றுள்ளது… இது ஒரு முக்கியமான விடையம்…
காரணம்… எகிப்திய பிரமிட்களின் கட்டிட அமைப்புக்களில் பயண்படுத்தப்பட்டுள்ள… தொழில் நுட்பங்களில்… பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரங்கள்… பூமியின் விட்டங்கள்… மற்றும் சில முக்கியமான தொழில் நுட்பங்கள்… பயன்படுத்தப்பட்டுள்ளன… முக்கியமாக வட்டத்துக்கு… பயன்படுத்தப்படும்… “ஃபை ( 22/7 = 3.14…)” பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவு அவர்களுக்கு ஏலியன்ஸ் ( எதிர்கால நாம்(?) ) கொடுத்ததாக இருக்குமா…
என்பதையும்… காலப்பயணம் சம்பந்தமான சில விடையங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

அவற்றை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்…

இங்கு… நான் எழுதியிருப்பது எனது கருத்துக்களைத்தான்… உங்களது பின்னூட்டங்கள்தான், இந்த பதிவினை பிரிஜோசனமாக்கும்… :)

By : Chandran Pirabu

(9085)

10 thoughts on “வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் “ஏலியன்ஸ்” எதிர்கால மனிதர்களா? (ஏலியன்ஸ் 06)”

 1. Sajenthiran says:

  வாழ்த்துக்கள்
  வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழு விபரமுற் கிடைக்க உதவவும்

 2. prithivi says:

  sir enakoru doubt,egipth drawings feature ippadidhan irukumnu katti irukangala ila avanga ippadidhan irundhom nu katti irukangala???????

 3. ஹரி பிரகாஷ் says:

  மிகவும் எளிமையாக விளங்குகிறது……ஒரு சிறு உதவி …இந்த தொடர்களை ஒரு தொகுப்பாக இட்டால் அனைத்தையும் படித்து விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்…நன்றி ,,,,,,,,

 4. Gopi Krishna says:

  Dear pirabu,
  I have a doubt! in this thread u said that human race evolved due to a catastrophic event of an micro-organism (bacteria,etc). if that is the case, why do we catch cold due to these micro organisms. if we really evolved from them wouldnt we be able to resist their attack on our body. Hitory also has it that our ancestors died mostly because of fever.

  Though it is only my thought and doubt to which i have no answer

  1. Prabu says:

   I’ll ans u as soon as +ble…

 5. jothi says:

  naan time travel படம் பார்த்தேன் அதில் ஒருவர் நிகழ்காலத்தில் பார்த்தா சிலையின் வடிவில் தான் தான் என்பதை அவர் இறந்த காலத்திற்கு சென்ற பின் தெரியும் ஆனால் இவர இதை நிகழ்காலத்தில் பார்த்தார் ௬௦௦ வருடத்திற்கு முன் நடந்தது இவர் போக வில்லை என்றாலும் அந்தசிலை யார் ? பல கேள்விகள் ? விடை சொல்லவும்

  1. Prabu says:

   உங்கள் கேள்வியை என்னால் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை.
   ///ஒருவர் நிகழ்காலத்தில் பார்த்தா சிலையின் வடிவில் தான் தான் என்பதை அவர் இறந்த காலத்திற்கு சென்ற பின் தெரியும் ///
   இதை ஏன் அவர் இறந்த காலம் சென்று பார்க்க வேண்டும்? காரணம் சிலை அவரின் முக சாயலில் தானே இருக்கும்!

   //௬௦௦ வருடத்திற்கு முன் நடந்தது இவர் போக வில்லை என்றாலும் அந்தசிலை யார் ? ///
   இவர் போனதால் ஏற்பட்ட மாற்றத்தால் தான் சிலை உருவானதாக காட்டப்பட்டதா?
   அல்லது இறந்த கால நபரை நிகழ்காலத்தில் இருந்து சென்றவர் சந்தித்தாரா? தன்னை தெரியப்படுத்தினாரா?
   திரைப்படத்தின் முழுப்பெயரை தெரிவிக்கவும். :)

  2. Raja says:

   U r question plz clear ly

Leave a Reply

Top