போலியோவை ஒழித்துக்கட்டிய ஜோனஸ் ஸாக்

நியூயார்க் யுனிவர்சிட்டியில் மருத்துவப் படிப்பை முடித்த ஜோனஸ் ஸாக் மவுண்ட் ஸெனாய் ஆஸ்பத்திரியில் உழியராக பணியை ஆரம்பித்தார். (1939)
அதன் பின் பீட்ஸ்பர்க் யுனிவர்சிட்டியிலே வைரஸ் ஆய்வகத்தில் இன்ப்ளூயன்ஸ் தடுப்பு மருந்து பணியில் டாக்டர் தாமஸ் பிரான்ஸில் தலைமையில் பணியாற்றினார். இந்த ஆய்வு முக்கியமாக யூ.எஸ் ஆர்மிக்காக பணிக்கப் பட்டது.(1947)

முக்கியமாக மேற்படி ஆய்வின் அனுபவமே போலியோ (இளம்பிள்ளை வாதம்) விற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவிகரமாக இருந்தது என்று சொல்லலாம். அமெரிக்காவில் யூத இனத்தில் பிறந்து பின்னாளில் உலகம் போற்றும் மருத்துவராக விளங்கியவர்.

jonas_salk

தடுப்பு மருந்து (வாக்ஸின்) என்பதாவது நோய் தாக்கும் கிருமி செயல்படாத நிலையில் வைக்கப்பட்டு தடையத்தை விட்டு வைப்பது (டம்மி பீஸ்) இந்த செயல் படாத கிருமியை ரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் வீரு கொண்டு தாக்குதல் நடத்தி தம்மை பலப்படுத்தி கொள்கின்றன. அதாவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப் படுதல் என்று சொல்லலாம்.

In developing the influenza vaccine, he had observed that protection could be established using noninfectious, inactivated (killed) viruses.

ஜோனஸ் இப்படிப்பட்ட ஆராய்சியில் ஈடு படுவது அறிந்த பாஸில் ‘ஓ’கூனூர் (தலைவர்,National Foundation for Infantile Paralysis ) பொருளாதார உதவிகளையும் அவருக்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

போலியோ வைரஸ்களை டெஸ்ட் ட்யூபில்(Using formaldehyde) கவனமுடன் வளர்த்தெடுப்பது என்பதே பெரிய சவாலாக இருந்தது. அதோடு கூட அவற்றை செயல்படா நிலையில் வைத்திருக்க வேண்டும் இதில் தவறு ஏற்படுமாயின் மருந்து செலுத்தப்படுபவருக்கு எதிர் வினையாக போலியோ தாக்கக் கூடும்.
தடுப்பு மருந்து ஊசி மூலமாக முதலில் குரங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்யப் பட்டது. அதன் பின்னே, D.T.வாட்ஸன் இன்ஸ்டிடியூட் மையத்தில் இருந்த முடமாகி இருந்த குழந்தைகளுக்கு கொடுத்து சோதனை செய்யப் பட்டது.

இதன் அடுத்த கட்டமாக சமூகப் சேவை மனப்பான்மையில் உள்ளவர்களுக்கும், அவருக்கும் அவருடைய லாபரட்ரியில் பணிசெய்பவர்களுக்கும் அவரின் மனைவிக்கும், அவரின் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து செலுத்தப் பட்டது. இந்த பரிசோதனை வெற்றி பெற்றதை அடுத்தே, ஆறில் இருந்து ஒன்பது வயதுக்குள்ளான அமெரிக்க தேசத்தின் குழந்தைகளுக்கு (ஒரு மில்லியன்) 1954 ல் பெரிய அளவிலான தடுப்பு மருந்து சேவை ஆரம்பமாகியது. April 12, 1955 ல் இம்மருந்து தரமானது பாதுகாப்பானது என்று உலகத்திற்கு பிரகரணப்படுத்தப் பட்டது.

1962ல் யு.எஸ் -ல் பாதிக்கப்பட்ட 45000 பேர் இரண்டாண்டுகளில் வெறும் 900 ஆக குறைக்கப் பட்டது.

ஸாக், தான் கண்டறிந்த மருந்திற்கு காப்புரிமை செய்யவில்லை அதே போல கண்டுபிடிப்பிற்காக பணத்தையும் பெறவில்லை. அவரின் உள்ளத்தில் இந்த உலகத்தில் இருந்து இந்த நோயை முற்றாக ஒழித்து கட்டவேண்டும் என்றா மாபெரும் நோக்கம் மட்டுமே இருந்தது.

Salk’s dream was to create an independent research center where a community of scholars interested in different aspects of biology – the study of life – could come together to follow their curiosity.

ஓராண்டிற்கும் மேலாக ரிசர்ச் செண்டருக்காக தகுந்த இடத்தை தேடிக் கொண்டிருந்தார் ,ஸாக். சாண்டியாகோ மேயர் சார்லஸ் டெயில் (போலியோ தாக்குதலில் தப்பித்தவர்) லா ஜோலாவில் 27 ஏக்கர் நிலத்தை காட்டி ஆராய்ச்சி மையட்திற்கு பற்பல உதவிகள் செய்தார். இந்த ஆராய்சி மையத்தில் மருந்து தயாரிப்பு மட்டுமல்ல இது குறித்த தொழில் வித்தகர்களும் உருவானார்கள். (Completed in 1967)

1991 ல் முழுமைபெற்ற இன்ஸ்டிடியூசன் (Jonas Salk Institute for Biological Studies) உலகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பிடித்தது. இந்த ஆய்வகத்தில் போலியோ மருந்தை தவிரவும், கேன்ஸர் எய்ட்ஸ், போன்றவற்றிற்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டது.

இவர் எழுதிய பல ஆராய்சி கட்டுரைகளும் புத்தகங்களும் மனித குலத்திற்கு பயனளித்து வருகிறது. இவரின் இன்ஸ்டிடியூட்
அல்ஜீமர்,பார்கின்ஸன்,சக்கரை வியாதிகளுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.

A memorial at the Institute with a statement from Salk captures his vision: “Hope lies in dreams, in imagination and in the courage of those who dare to make dreams into reality.”

அவர் எழுதிய புத்தகங்கள் :
Man Unfolding (1972), The Survival of the Wisest (1973), World Population and Human Values: A New Reality (1981), and Anatomy of Reality (1983).

டாக்டர் ஸாக்கின் இறுதி காலங்களில் (AIDS) எய்ட்ஸிர்கு தடுப்பு மருந்து
கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். தமது எண்பதாவது வயதில் மறைந்தார் (23.ஜுன்.1995).

உலகம் முழுவதும் பல நாடுகள்,பல அமைப்புகள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

1975-ல் இந்தியா அவருக்கு ஜவஹர்லால் நேரு விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

வாழ்க நீ எம்மான் !!

(967)

Leave a Reply

Top