பெண்கள் மட்டும் ஆளும்உலகம்! : parthenogenesis

பொதுவாக இயற்கை முறையில் ஒரு உயிர் உருவாக வேண்டுமென்றால் ஆண்-பெண் இனப்பெருக்க உறவு முறை மூலமே சாத்தியமாகின்றது.

ஆனால், பல புழுவகைகளில் பெண் இனம் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஆண்கள் இருப்பதில்லை!
ஆம், அவ் புழு வகைகள் இனப்பெருக்கம் அடைவதற்கு ஆண்களின் துணை தேவைப்படுவதில்லை. பெண் புழுவே இனப்பெருக்க காலத்தின் போது கரு முட்டைகளை உருவாக்கிக்கொள்கின்றன.
நம்ம மண்புழுக்கள் (Earthworm) பலவும் இந்த ஜாதிதான்!

புழுக்கள் மட்டுமன்றி பல பல்லி (lizard) வகைகளிலும் இப்படியான ஒரு இன-இனப்பெருக்கம் இடம்பெறுகின்றது. உதாரணமாக மெக்சிக்கோவில் வாழும் whiptail எனும் பல்லி வகைகளில் ஆண் பல்லிகளே இருப்பதில்லை. அவை தோன்றியது முதல் இன்றுவரை 100% பெண் பல்லிகளாகவே இருக்கின்றன!
சிந்தித்துப்பாருங்கள்… இவ்வாறான ஒரு நிலை மனிதனிற்கு வந்தால் உலகம் எப்படியிருக்கும்… மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்று…இவ்வாறு நடைபெறும் இனப்பெருக்கத்தை பார்தெனோஜெனிசிஸ் (parthenogenesis) இனப்பெருக்கம் என்று அழைப்பார்கள். இரு பெண் இனங்கள் சேர்ந்து ஒரு “பெண்” உயிரை உருவாக்கும் இனப்பெருக்க முறையும் இதற்குள் அடங்கும்.
( ஆண் இனப்பெருக்கத்தில் பங்காற்றாததால் y குறோமோஷோம் கருக்கட்ட வாய்ப்பேயில்லை, அதனால்தான் இந்த இனங்களில் ஆண் உயிரினம் இருப்பதேயில்லை!)

  • மேலதிக திருத்தத்தகவல்கள் எதிர் பார்க்கப்படுகின்றது.

By : Chandran pirabu

(2889)

One thought on “பெண்கள் மட்டும் ஆளும்உலகம்! : parthenogenesis”

  1. Manikandan says:

    அறியதொரு தகவல், நன்றி.

Leave a Reply

Top