டிஸ்னிக்காக குழந்தையை விற்க முனைந்த வினோதப்பெண்.

Baby-sellingபடத்தில் இருக்கும் அமெரிக்காவைச்சேர்ந்த பெண் தனது ஒரு மாத குழந்தையை 15 000 அமெரிக்க டொலருக்கு விற்க ஏற்பாடு செய்திருந்த வேளை குழந்தைகள் பராமரிப்பு உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டார்.

விஸ்மர் எனும் 34 வயது நிரம்பிய பெண் தனது ஒரு மாத குழந்தையை ஜோன் எனும் 55 வயது நபருக்கு விற்று அந்த காசில் தனது மற்றைய இரண்டு குழந்தைகளையும் டிஸ்னி லான்ட் இற்கு கூட்டிச்செல்ல திட்டமிட்டிருந்துள்ளார்.

விஸ்மரின் தாயார் இந்த தகவலை குழந்தைகள் காப்பகத்திற்கு அறிவித்ததன் பெயரில், குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளையை கை மாற்றும் போது இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

டிஸ்னி லான்ட் இற்கு செல்வதற்காக குழந்தையை விற்க முனைந்த இந்த வினோத சம்பவம் இன்னமும் “வழமைக்கு மாறான சம்பவங்கள்” எனும் தலைப்பில் அமெரிக்க பதிவுகளில் இடம்பெற்று வருகிறது.

(3202)

Leave a Reply

Top