உலகின் ஆழமான அழகிய ஏரியான பைக்கால் Lake Baikal – (+Video)

Lake Baikal : 

உலகின் ஆழமான ஏரி (Lake ) எது என கேட்டால், பொதுவாக விசையம் தெரிந்த அனைவரும் சொல்வது கஸ்பியன் கடல் (Caspian Sea ) என்றுதான். ( இது கடல் என்று அழைக்கப்பட்டாலும் விஞ்ஞான ரீதியில் இது ஒரு ஏரியாகும்.)

ஆனால் உண்மை அதுவல்ல! உண்மையில் உலகில் ஆழமான ஏரி சைபீரியாவில்(Siberia) உள்ள

பைக்கால் ஏரியாகும்! ( Baikal ) இதன் ஆழம் சுமார் 1620 மீற்றர்களாகும். இது ஆழமான ஏரி மட்டுமல்லாது உலகில் பழைமையான ஏரியாகவும் கருதப்படுகிறது. சுமார் 25 மில்லியன் வயதுடையது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

636 கிலோமீட்டர் நீளமும் 80 கிலோமீட்டர் அகலமும் உள்ள இந்த ஏரி உலகிலுள்ள சுத்தமான நீரில் 20 வீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளதாம்!
உலகில் உள்ள அனைத்து ஆறுகளையும் உபயோகித்து இந்த நீரினையை நிரப்ப வேண்டுமெனின் குறைந்தது 1 வருடங்கள் ஆகும் என ஆய்வாலர்கள் கண்டறிந்துள்ளனர்.

சைபீரியா குளிரான பகுதி என்பது நாம் அறிந்ததே…
அங்கு குடும் குளிர்காலம் ஏற்படும்போது இவ் ஏரி 115 மீட்டர் தடிப்பிற்கு ஐஸ்கட்டியாகிவிடும்! நினைத்துப்பாருங்கள் அப்போது எப்படி இருக்கும் என்று.

உலகை வலம் வர நினைப்பவர்கள் ஒரு முறை சென்று பார்க்கவேண்டிய அழகிய இடங்களில் இதுவும் ஒன்று.

By : Chandran Pirabu

(2090)

One thought on “உலகின் ஆழமான அழகிய ஏரியான பைக்கால் Lake Baikal – (+Video)”

Leave a Reply

Top