உலகின் உயரமான 10 கட்டடங்கள்! – அறிவோம்10!

10. கிங்கி 100 (Kingkey 100) : Shenzhen, China
சீனாவில் பொருளாதரமுக்கியத்துவம் வாய்ந்த சென்சன் பகுதியில் அமைந்துள்ளது. 100 மாடிகளைக்கொண்டிருக்கின்றமையால் இந்தப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.1 449 அடி உயரமுடையது இந்த கட்டடம். மாடியின் கீழ்த்தளம் கடைகளும், அடுத்த 22 மாடிகள் அலுவலகங்களாகவும் அதற்கு மேல் உள்ள மாடிகள் அனைத்தும் சென். ரெஜிஸ் என்ற ஹொட்டலாகவும் உள்ளது.

09. வில்லிஸ் டவர் : Chicago, Illinois
1 451 அடி உயரமானது, 108 மாடிகளைக்கொண்டது. 1937 இல் கட்டப்பட்ட இந்த கட்டம், தொடர்ந்து 25 வருடங்களுக்கு “உலகில் உயரமான கட்டடம்” என்ற தலைப்பை தக்கவைத்துக்கொண்டது.

08. சிஃபெங் டவர் : Nanjing, China
2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம் 1480 அடி உயரமுடையது. 89 அடுக்கு மாடிகளைக்கொண்டது.
சிற்றுண்டிகள், அலுவலகங்கள், ஹொட்டல் மற்றும் அரச நிறுவனங்கள் இயங்குகின்றன.

07.பெத்ரோனஸ் டவர் : Kuala Lumpur, Malaysia
பெத்ரோன்ஸ் டுவின்ஸ் டவர் என அழைக்கப்படும் இக் கட்டடம் 1 489 அடி உயரமுடையது. 88 மாடிகளைக்கொண்டது. இரண்டு ஒரே உயரமான கட்டடங்களை இணைத்தவடிவில் இது அமைந்துள்ளது. 1998 உல் உலகில் உயரமான கட்டடமாக அமைக்கப்பட்ட இக் கட்டடத்தின் உயர சாதனை 2004 இல் முறியடிக்கப்பட்டது. இன்னமும், உயரமான இரட்டை கட்டடம் என்ற சாதனையை வவைத்துள்ளது.

06. சர்வதேச வர்த்தக அமையம் : Hong Kong, China
1 588அடி உயரமும் 118 மாடிகளையும் கொண்டது இந்த கட்டடம்.

05. சங்காய் உலக பொருளாதார மையம் : Shanghai, China
2007 இல் கட்டப்பட்ட இந்த கட்டம் 101 மாடிகளைக்கொண்டது. சுமார் 1 614 அடி உயரமுடையது. தரை கட்டடத்தை விடுத்து கணக்கிடும் போது உலகில் உயரமான கட்டடமாக இது அமைந்துள்ளது. (தரையை தவிர்த்து 1 555 அடி உயரமுடையது.)

04. தாய்பேய் 101 : Taipei, Taiwan
தரைக்கடியில் 5 மாடிகளையும் தரைக்கு மேலே 101 மாடிகளையும் கொண்டது இந்த கட்டடம். 1 669 அடி உயரமுடையது.
நாட்டின் தேசிய தினங்களின் போது வாணவேடிக்கைகள் நடாத்தப்படுவது இந்த கட்டடத்தின் சிறப்பு.

03. ஒரு உலகவர்த்தக மையம் : New York, NY
சுதந்திர வர்த்தக மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் 2013 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 1 776 அடி உயரமானது.

02. மக்கா அரச கடிகார கோபுரம் மற்றும் விடுதி : Mecca, Saudi Arabia
1 972 ஆம் ஆண்டு 120 மாடிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கட்டடம் உலகில் மிக உயரமான மணிக்கூட்டு கோபுரமாக இன்றுவரை திகழிகிறது.

01. புஜி ஹலிஃபியா : Dubai, United Arab Emirates
புறி டுபாய் எனவும் அழைக்கப்படும் இந்த கட்டடம் 163 மாடிகளுடன் சுமார் 2 723அடி வானுயர நிற்கிறது. 5 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம், 2009 இல் திறந்துவைக்கப்பட்டது.

குறிப்பு :
ஜப்பானில் இருக்கும் skytree கட்டடம் 2 080 அடி உயரமுடையது. என்றாலும், அவை முழுமையான அடுக்கு கட்டடம் இல்லை என்பதால் இந்த வரிசையில் சேர்க்கப்படவில்லை.

1 815 அடி உயரமான கனடாவின் CN Tower உம் முழுமையான அடுக்கு கட்டடம் இல்லை என்பதால் இங்கு இணைக்கப்படவில்லை.

மேலும் அறியவும் ஊக்கம் தரவும்!

(1307)

Leave a Reply

Top