பேர்முடா முக்கோண வலையத்தில் சிக்கித்தவிப்போர்! – Bermuda triangle tamil 03

Bermuda tamilபோன பதிவில் பேர்முடா முக்கோண மர்ம வலையத்தில் காணாமல் போன விமானங்கள் பற்றியும், அதற்கான காரணங்களாக “இருக்கலாம்” எனும் ஊகிப்புக்கள் பற்றியும் பார்த்திருந்தோம்.
விமானங்களில் திடீர் விபத்துக்கள் நடைபெறும் போது, உயிராபத்துக்கள் அதிகம் இடம்பெறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. (விமானத்தின் பயணத்தில் திடீர் விபத்து ஏற்படுமாயின்; உதாரணமாக, விமானம் திடீரென நிலைக்குத்தாக பயணிக்க வேண்டி ஏற்படின் அல்லது விமான பாகங்கள் திடீரென இயங்காதுவிடின் பயணிளிக்கு எச்சரிக்கை செய்து அவர்களை பரசூட்* மூலம் காப்பாற்றும் நிலை சாத்தியமற்றதாகிறது.)
இதனால் அப் பகுதியில் விமான விபத்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தப்பி பிளைத்தவர்களை எதிர்பார்ப்பது கடினம். ஆனால்… கப்பல்களில் அப்படி இல்லை… விமானத்தை காட்டிலும் தப்பிப்பதற்கான விழுக்காடுகள் அதிகம்.

விமானிகள் யாராவது தப்பினார்களா? அவர்கள் சொன்னது என்ன? இவற்றை பின்னர் பார்க்கலாம்.

பேர்முடா முக்கோண வலையத்தில் மர்மமாய்ப்போன கப்பல்கள் தொடர்பாக இனிவரும் இரு பதிவுகளிற்கு ஆராய்வோம்… ஆரம்பத்தில், காணாமல்போன கப்பல்களின் தகவல்களை சிறு ஆய்வுடன் பார்ப்போம்…

பேர்முடா முக்கோண வலையப்பகுதியில் கப்பல்கள் காணாமல் போவது தொடர்பான சம்பவங்கள் 1800 ஆம் ஆண்டில் இருந்தே இடம்பெறத்தொடங்கிவிட்டன…

Bermuda tamil 21800 ஓகஸ்ட்(ஆவணி) மாதம் 340 பயணிகளுடன் கப்பல்(INSURGENT) ஒன்று காணமல் போனது, இந்த சம்பவம் தான் அந்த முக்கோண வலையம் தொடர்பாக மக்களிடையேயும் அரசுகளிடையேயும் பார்வையை செலுத்த தூண்டியது.
ஆரம்பத்தில் அந்த 340 பேரும் கடற்கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. எனினும், அந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் இறந்தவர்களின் உடலோ காணாமல் போன கப்பலோ கண்டுபிடிக்கப்படவில்லை! – எனவே அறிவியல் மட்டத்தை அடையாமல் பேய் முக்கோணம் என்ற நோக்கில் மக்களால் பேசப்பட்ட தொடங்கியது!

1814 / 10 / 09 ஆம் நாளில் மறைந்துபோன 140 பயணிகளுக்கும் கப்பலுக்குமான(WASP) விளக்கம் இல்லை.
1880 / 01 இல் காணாமல் போன 290 பயணிகளுடனான கப்பல்(ATLANTA) தொடர்பான இங்கிலாந்து அரசின் தேடல் எந்த தடையங்களும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.
1918 / 03 /04 இல் 309 பயணிகளுடன் பேர்முடா பகுதியில் பயணித்த கப்பல்(USS CYCLOPS) பயணத்தை முடித்தமைக்கான அடையாளம் இல்லை.

இனி புருவத்தை உயற்ற வைக்கும் சற்று வித்தியாசமான மறைவுகளை பார்க்கலாம்…

1951 / 10 / 04, தரை தட்டும் துறைமுகத்தில் இருந்து படகுகளின் உதவியுடன் கடலிற்கு அனுப்ப பட்ட இராணுவ கப்பல் தனது பேமுடாவூடான பயணத்தை தொடங்கியது. பயணம் ஆரம்பிக்கும் போது, கப்பலை கடலில் செலுத்த உதவும் படகு ஒன்றின் இணப்பு துண்டிக்கப்பட்டதால், சிறிது நேரத்தில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக கப்பலும் மற்ற இணைப்புபடகும் சென்ற் திசையில் சென்றது. ஆனால், சிறிது நேரத்திற்கு முன்னர் சென்ற அந்த கப்பலும் இல்லை படகும் இல்லை!

இன்றுவரை இச்சம்பவம் தொடர்பான எந்த தடையங்களும் கிடைக்கவில்லை. மர்ம்மம் நீடிக்கிறது.

Bermuda tamil 31925 / 04 ஆம் மாதம்… ஜப்பானிய சரக்கு கப்பல் 38 பணியாளர்களுடன் பேர்முடாவலையத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இறுதியாக துறைமுக கட்டுப்பாட்டகத்திற்கு “உதவி!!! உதவி !!! ஆபத்து ஈட்டி போல வந்து கொண்டிருக்கின்றது. சீக்கிரம் வாருங்கள். எங்களால் தப்பிக்கமுடியாது. காப்பாற்றுங்கள்.” என்ற அலறல் தகவல்கிடைத்தது. அதன் பின்னர் என்னவாயிற்கு என்பதற்கான சான்றுகள் கிடையாது. இது இடம்பெற்றது பஹாமசிற்கும் கியூபாவிற்கும் இடைப்பட்ட பகுதியில்.

1968 / 10 / 31, அன்று பிரபல வர்த்தகரும் அதிவேக கப்பல்கள் ஓட்டுவதில் நிபுணருமான டொனால்ட் குறோஹர்ட்ஸ் விசேட பாதுகாப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட படகு மூலம் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்கா நோக்கிய தனது பயணத்தை பேர்முடா முக்கோண வலையத்தினூடாக திட்டமிட்டு ஆரம்பித்தார். அமெரிக்கா வந்தடைந்த அவர், பேர்முடாவை கடக்கும் போது, தனது படகு பல தொழில் நுட்ப சிக்கல்களை சந்தித்ததாகவும் அவற்றை தான் முறியடித்து பயணத்தை சாதித்ததாகவும் அறிவித்தார். அது, அவரது விளம்பர யுக்தி என பலரும் கூறினார்கள். அடுத்து அங்கிருந்து மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்டார்.
லண்டனில் அவரது வருகைக்காக காத்திருந்தவர்கள் தொடர்ந்து காத்திருந்தார்கள். அவர் வரவில்லை.
யூலை 1969 ல் பேர்முடா பகுதியில் தனித்து நின்றிருந்த அவரது படகு கண்டுபிடிக்கப்பட்டது. தான் இனி மீண்டும் வீடு செல்ல முடியாது என்ற வாசகத்துடன் 29,யூன் எழுதிய குறிப்பும் அதில் இருந்தது!

இணைந்திருங்கள்,
அவருக்கு என்ன நடந்தது? என்ன நடந்திருக்கலாம்? இது போல் வேறு நபர்களுக்கு நடக்கவில்லையா?
மற்றும்…
பேர்முடாவில் என்ன தான் நடக்கிறது? அறிவியல் கூறும் காரணங்கள் என்ன?
அறியலாம்….

ஆர்வமானவர்களுக்கு தகவல்களின் சுருக்கம் அடங்கிய ஒரு தளம் இது, இதை சொடுகி வாசியுங்கள்.

Incidents Ref  : faktoider, unmaiyin pakkam, New York Times, 9,11,1951,weburbanist, aalkadalil aaviraajyam

(8114)

One thought on “பேர்முடா முக்கோண வலையத்தில் சிக்கித்தவிப்போர்! – Bermuda triangle tamil 03”

  1. Udhaya Kumar says:

    woow

Leave a Reply

Top