350 மில்லியன் வருடங்களாக மறைந்து வாழ்ந்த உயிரினம் பிடிக்கப்பட்டது

கடந்த வருடம் நவம்பர் (கார்த்திகை) மாதமளவில் கடலடியில் படத்தில் காட்டப்படும் புதியவகை மீன் இனம் இணங்காணப்பட்டது. சுமார் 2000-6500 அடி ஆழத்திற்கு இடப்பட்ட நிலையில் வாழும் மீன்கள் இவை என்பதால் இவற்றைப்பற்றி இதுவரை மனிதர்களுக்கு தெரியாதிருந்துள்ளது.

Knifenose Chimaera

Knifenose Chimaera

ஆர்ட்டிக் சமுத்திரத்தில் படகொண்டில் மாட்டிக்கொண்ட இந்த மீனை ஆராய்ந்ததில் இவை சுமார் 350 மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்வதாக ஊகிக்கப்படுகிறது.

(பூமியின் வயது 454 மில்லியன் வருடங்கள் என கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.)

முதலில் “goblin shark -(கொப்லின் சுறா)” வகையின் ஒரு பிரிவு என கருதப்பட்டது. எனினும் மரபணு ஆய்வில், இது ஒரு புதுவகை மீன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Goblin shark

Goblin shark

கத்தி போன்ற கூரிய மூக்கை உடையவை இவை என்பதால் “Knifenose Chimaera” என பெயரிடப்பட்டுள்ளது.
இது Rhinochimaeridae எனும் வகையைச்சேர்ந்ததாக கருதுகிறார்கள். Rhinochimaeridae எனும் சொல், கிரேக்க மொழியில் “மூக்கு” மற்றும் “அரக்கன்” அனும் அர்த்தத்தை ஒன்றினைக்கும் சொல்லாகும்!

உலகின் அனைத்து சமுத்திரத்திலும் 2000-6500 அடி வரைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த இன மீன்கள் பல இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள்.

மாதிரி காணொளி :

(5246)

One thought on “350 மில்லியன் வருடங்களாக மறைந்து வாழ்ந்த உயிரினம் பிடிக்கப்பட்டது”

  1. Tony Arulvasam says:

    Earth’s age NOT 454 Millions, its 4.5 Billion years old (one Billion is equal to 1000 Million, not 100 Million)

Leave a Reply

Top