நாசாவின் நிலவிற்கான பயணமும் மர்மமும்.

20/6/1969 அன்று அப்பலோ 11 விண்கலத்திட்டத்தின் படி நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் காலடிவைத்ததாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அதுவரை பூமியைத் தரையை தவிர வேறு தரைகளை கண்டிராத மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அப்பலோ திட்டத்தின் சுவடுகளாக கிடைக்கப்பெற்ற புகைப்படங்களும் வீடியோ ஆதாரங்களும் பெரும் விருந்தாக அமைந்தன. எனினும் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட காலம் தொட்டே பலரால் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவந்துள்ளது. அந்த சந்தேகங்களையும் அவற்றின் உண்மைத்தன்மைகளையும் பார்ப்போம்.

அசையும் கொடி!

அசையும் கொடி!

அமெரிக்க கொடி அசைந்தது.
மிகப்பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விடையம் இது. நாசா வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களின் படி நிலவில் அமெரிக்க கொடியை ஊன்றிய போது அக் கொடி அசைவதாக காட்டப்பட்டுள்ளது. நிலவில் வளி மண்டலமும் காற்றும் இல்லாத நிலையில் எப்படி கொடி அசைந்தது என்ற தர்க்கவியலான கேள்வி பல விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது.

நாசா அதற்கு கொடுத்த விளக்கம்,
அந்த கொடி விசேட தன்மையுடன் தயாரிக்கப்பட்டதாகவும்… அதில் அலைவடிவ அலங்கரிப்புக்கள் இருந்ததாகவும் அதுவே கொடி காற்றில் பறப்பது போன்ற விளைவை ஏற்படுத்தியதாகவும் மழுப்பியுள்ளார்கள்!

நிழல் முரண்பாடு!

நிழல் முரண்பாடு!

நிழல்களின் முரன்பாடு.
நிலவில் பெறப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில், சம்பந்தப்பட்ட பொருட்கள், நபர்களின் நிழல்கள் ஒன்றிற்கொன்று முரன்பட்டதாக உள்ளது. (புகைப்படத்தை பாருங்கள்.)
நிலவிற்கு ஒளிதரும் ஒரே ஒரு முதல் சூரியன். ஆகவே ஒரே திசையில் தான் நிழல்கள் விழவேண்டும். ஆனால், புகைப்படத்தில் இரண்டு திசைகளில் நிழல்கள் விழுகின்றன. ( நிலவில் காலடி வைத்த சம்பவம் ஒரு Stuido வில் எடுக்கப்பட்டதாகவும் அங்கு இருந்த இரு வேறு விளக்குகளின் விளைவாகவே இவ்வாறான நிழல்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது.)

இதற்கு நாசா கூறும் விளக்கம்,
நிலவின் தரை புவியின் தரை போன்று நீண்ட தூர சமதரை அல்ல, பல குன்றுகள் மலை வடிவங்களுடனான தரை. எனவே, குன்றுகளில் பட்டுத்தெறிப்படைந்த ஒளியினால் நிழலில் மாற்றம் ஏற்பட்டதாக அறிவித்தார்கள்.

மர்ம உருவம்

மர்ம உருவம்

விண்வெளி வீரர்களின் முகத்தில் தெரியும் மர்ம உருவம்!
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள் தங்களை தாங்களே எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ஒன்றில், விண்வெளி வீரரின் முகக்கவசத்தில் திட்டத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு உருவம் தெரிகிறது!
இது Stuido களில் பயன்படுத்தப்படும் கமெராவாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதற்கு இதுவரை நாசா விளக்கம் கொடுக்கவில்லை. ( தெளிவற்ற புகைப்படப்பிடிப்பு என நாசா விஞ்ஞானிகள் சிலர் காரணம் சொல்லியுள்ளார்கள்.)

நடை அசைவும் நாடாவும்.
நிலவில், நிலவில் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்ந்து நடக்கிறார்கள். ஆனால், வீடியோவை உற்று அவதானிக்கும் போது அவர்கள் நாடாக்கள் மூலம் பாய்வது இனங்காணப்பட்டுள்ளது. அதாவது சினிமாக்களில் பயன்படுத்தப்படும் யுக்தி!

சார்பாளர்கள் சொல்லும் காரணம், “1970 ஆண்டு படப்பிடிப்பு கருவிகளில் இருந்த தொழில் நுட்ப கோளாறுகளின் விளைவே அது.”
எனினும் ஒரு காட்சியில், தரையில் மண்டியிட்டிருக்கும் ஒரு விண்வெளி வீரர் எழும் போது சாதாரன பெளதீக விதிகளுக்கு ஏற்ப அவரது அசைவு இல்லை. அவரது முதுகுப்புறமாக மேல் நோக்கி இழுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. கால்களில் அசைவு மூலம் பறக்கும் நிலவு தூசுகள் உடனடியாவ தரையில் விழுகின்றன. (புவியின் ஈர்ப்பு விசையில் விழும் வேகத்தில்!)

அடையாலக்கல்

அடையாலக்கல்

நிலவின் கல்லில் “C” அடையாலம்!
நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், அங்கு தரையில் கிடக்கும் ஒரு கல்லில் “C” என்ற அடையாளம் உள்ளது.
Stuido வில் அடையாளத்திற்காக போடப்பட்ட அது, ஒழுங்கமைப்பாளரின் தவறான திருப்பத்தால் கமெராவில் பதியப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

நாசா சொல்லும் மழுப்பல் விளக்கம்,
புகைப்படத்தை முதல் அச்சிட்டவர் நகைச்சுவையாக போட்ட அடையாளம் அது என்றார்கள். பின்னர், அச்சிட்டவரின் தலைமுடி விழுந்திருக்கலாம் என்ரார்கள்.

NASA-Moon-Landing-tamil5

பின்னனி!

நிலவின் பின்னனி.
நிலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகளில் ஒரே பின்னனி பயன்படுத்தப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு நாசா சொன்ன விளக்கம் நிலவின் பின்னனி புவியைப்போன்றதல்ல, ஒரே மாதிரியான அமைப்பை கொண்டது எனவே அப்படியொரு தோற்றப்பாடு என்றார்கள். ஆனால், ஒரே விண்வெளி பயண திட்டத்தில் எடுக்கப்பட்டதாக காட்டப்படும் காட்சிகளில் தரை இறங்கிய விண்கலம் ஒரு காட்சியில் இருக்கிறது, மறு காட்சியில் இல்லை! (படத்தை பாருங்கள்.)

மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு நிலவில் முதலில் காலடிவைத்த மனிதன் நீல் ஆம்ஸ்ரோங் எந்த வித கருத்தையும் கூறாது இருந்தது தான்!
(நீல் ஆம்ஸ்ரோங் நிலவிற்கு சென்றுவந்ததும் இஸ்லாம் மதத்தை தழுவினார். அதற்கு அவர் சொன்ன காரணம், நிலவில் ஓதும் சத்தத்தை கேட்டதாக. ஆனால், நிலவில் வளிமண்டலம் இல்லாதவிடத்து அதற்கு சந்தர்ப்பம் இல்லை! அவர் அப்படி சொன்னமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.)

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் விண்வெளியில் ஆதிக்கம் தொடர்பான பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. ஏற்கனவே 12/4/1961 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சார்பாக விண்வெளியில் பயணித்த முதல் மனிதரானார் யூரி ககாரின். எனவே, அதை ஈடுகட்டும் முகமாக அமெரிக்கா நடத்திய நாடகமாக நிலவுப்பயணம் இருக்கலாம்.
மேலும், 4 சகாப்தங்களில் பாரிய தொழில் நுட்ப மேம்பாடுகளை கண்டிருந்தாலும், 1972 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அமெரிக்கா நிலவிற்கான பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது. நவீன நுட்பங்கள் இருந்தும் இப்போது பயணம் இல்லை!

சமீபத்தில், நிலவில் கால் பதித்ததற்காக இருந்த ஒரே ஒரு நேரடி ஒளிப்பதிவும் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டதாக நாசா அறிவித்தது!

தொடர்ந்திருங்கள் மேலும் அறியலாம்…

(7746)

Leave a Reply

Top