நியூயோர்க் நகரை வலம் வந்த நிஜ “சுப்பர் வுமன்”! – Terrifica-Fantastico-Superhero-Tamil

Terrifica-tamil1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நியுயோர்க் நகரில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வரும் பெண்களுடனோ, வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெண்ககளுடனோ எந்த ஆணாவது தவறாக நடக்க முனைந்தால் திடீரென எங்கிருந்தோ ஓடிவரும் ஒரு முகம்மூடி நபர் அவர்களை அடித்து அந்த பெண்களை காப்பாற்றும் சம்பவங்கள் நடக்கத்தொடங்கின.

தங்க நிறத்திலான முகமூடியும் வெள்ளை செயற்கை முடியும் சிகப்பு நிற உடையும் அணிந்த அந்த மர்ம நபரை Terrifica என அனைவரும் அழைத்தார்கள். அவர் தன்னைத்தானே fantastico என அழைத்தார்!

பல பத்திரிகைகளில் அவரால் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் பற்றி செய்திகள் வந்தன.

சில காலங்களின் பின்னர் அந்த மர்ம நபர் பற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவந்தன…
கணினி ஆலோசனை நிறுவனத்தில் வேலை பார்க்கும் 30 வயது நிரம்பிய சாரா என்ற பெண்ணே அந்த Fantastico!
“பெண்கள் வலுவற்றவர்கள்.. அதனால் இலகுவாக பிரச்சனைகளுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்… ஆண்கள் அவர்களை பயன்படுத்த நினைக்கிறார்கள், அவர்களை காப்பாற்ற முடிவெடுத்தேன்” – இது தான் அவர் கொடுத்த வாக்குமூலம்!

இணைந்திருங்கள் பல வினோத சம்பவங்களை அறியலாம்!

(2753)

Leave a Reply

Top