ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!

இது நடந்தது இப்போதல்ல, எனினும் வினோதமான இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்…

a116_lm11934 ஆண்டு பேரு/பெரு நாட்டில் இந்தியப்பெண் ஒருவர் 3 அடி உயரமுள்ள ஒரு ஐந்து வயது நிரம்பிய சிறுமியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தார். குழந்தையின் வயிறு மிகப்பெரிதாக கட்டிபோன்று இருந்தது.

மருத்துவர் வயிற்றுக்கட்டி என்று பரிசோதனைகளை மேற்கொண்டார். X-Ray பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவருக்கு ஆச்சரியம். அந்த ஐந்துவயது சிறுமியின் வயிற்றில் 8 மாதங்கள் நிரம்பிய சிசு இருந்தது!

மருத்துவரின் உதவியுடன் சிறுமி பேரு நாட்டின் தலை நகரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். விசேட கவணிப்பில் இருந்த அந்த சிறுமி ஒன்றரை மாதங்களின் பின் 14/05/1939 இல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்!

குழந்தை 2.7 கிலோகிராமுடன் ஆரோக்கியமாக பிறந்தது. (40 வயதில் எலும்பு மச்சையில் ஏற்பட்ட புற்று நோயினால் மரணமடைந்தது.)

a116_lm2ஆரம்பத்தில், பிறந்த குழந்தை அவரது தம்பியாக இருக்கும் என மருத்துவர்கள் ஊகித்தார்கள் (பெண் குழந்தையின் வயிற்றில் இன்னோர் குழந்தை தங்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு, எனினும் அக் குழந்தை இறந்த உடலாகவே தங்கும்.)
ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் அக் குழந்தை அச் சிறுமியின் குழந்தை தான் என உறுதிப்படுத்தப்பட்டது.

சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியால் அடையாலம் காட்டப்படவுமில்லை. சிறுமியின் தந்தை சந்தேகத்தின் பெயரில் கைதாகினார். எனினும், பல மருத்துவ சான்றுகளின் உதவியுடன் அவர் மீது தப்பு இல்லை என்பது நிரூபனமாக்கப்பட்டது.

1972 இல் வேறு ஒரு நபரை திருமணம் முடித்த அந்த பெண்(=சிறுமி) இன்னோர் குழந்தையை பெற்றெடுத்தார்.

இச் சிறுமி பற்றிய தகவல்கள் 2003 ஆண்டிலேயே வெளியுளகத்திற்கு தெரியவந்தது. ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க நாடியபோதும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்!

இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

(7017)

2 thoughts on “ஐந்து வயதில் ஒரு தாய்! – மருத்துவ வினோதம்!”

  1. hi sathya kalivarashan…
    antha news naan paarkala… koncham details sonaal paarkalaam…

  2. Hi prabu naa oru 2days ku munnadi zee tamil tv la ufo patri thagaval sonnanga aana marunaaley adhu unmai illa nu sollitinga adha patri ungaluku therinja yellarukum theriya paduthunga

Leave a Reply

Top