ஜனவரி1 ஏன் புதுவருடப்பிறப்பாக உள்ளது?

Happy-New-Year-2015-Cards-1ஜனவரி (தை) மாதம் 1 ஆம் திகதியை உலகம் முழுவதிலும் வருடத்தின் தொடக்கமாக கொள்கிறார்கள். அது ஏன் என்பதை பார்ப்போம்.

16 ஆம் நூற்றாண்டில் நாட்கட்டியில் ஏற்பட்ட புரட்சி காரணமாக ஜனவரி 1 ஐ புத்தாண்டு தினமாக அறிவித்து, கிரகெரியன் நாட்காட்டி (கலண்டர்) வெளியிடப்பட்டது. அதற்கு முன்னர் பார்த்தால்…
சுமார் கி.மு 2000 ஆண்டுகளிலேயே வருடத்தின் ஆரம்ப நாளாக ஒரு குறிப்பிட்ட நாளை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. பெரும்பாலும் உலகம் முழுவதிலும் மார்ச் (பங்குனி) 20 ஆம் திகதி கொண்டாடப்பட்டுள்ளது. அது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கங்கள் எங்கும் கிடைக்கவில்லை.

புராதன எகிப்தில் செப்டொம்பர் (புரட்டாதி) 20 ஆம் திகதியை கொண்டாடியுள்ளனர். புராதண கிரேக்க மக்கள் டிசம்பர் (மார்கழி) 20 ஆம் திகதியை கொண்டாடியுள்ளார்கள்.

16 ஆம் நூற்றாண்டில் உத்தியோக பூர்வமாக உலகம் பூராவும் ஒரே நாட்காட்டி வெளியிடப்பட்டு ஜனவரி 1 புதுவருடமாக்கப்பட்டது, பண்டைய ரொமேனிய நம்பிக்கையில் இருந்து ஆரம்பமானது.

New-Year-history-tamilபுராதன ரொமேனியர்களின் கடவுள்களில் ஒருவர் ஜ‌னுஸ் (Janus)…
ஜனுஸ் கடவுளின் உருவம் இரண்டு முகங்களை உடைவராக காட்டப்படுகிறது. பின் புறம் இருக்கும் முகம் இறந்த கால சம்பவங்களையும், முன் புற முகம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களையும் குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே, இறந்த காலம் முடிந்து புது எதிர்காலம் பிறக்கும் நாளாக ஒரு நாளை கருதி அதற்கு அந்த கடவுளின் பெயரை இட்டார்கள். இதுவே காலப்போக்கில் ஜனவரி ஆனது.

மேலும் சற்று தர்க்கவியல் ரீதியாக சிந்தித்தால்…
வடதுருவப்பகுதியில் டிசம்பர்(மார்கழி) 31 ஆம் நாள் மிகக்குறுகிய வெளிச்சமுடைய நாளாக இருக்கிறது. எனினும் அடுத்த நாளான ஜனவரி 1 வெளிச்சம் கூடிய நாளாக மீண்டும் வருகிறது. எனவே ஒரு காலம் முடிந்து இன்னோர் காலம் ஆரம்பிப்பதால், வருடத்தின் ஆரம்ப நாளாக கருதுவதற்கு மிகப்பொருத்தமான நாள் இதுவாகும்.
இவ் மாற்றம் விவசாயத்தில் புத்துணர்வை கொடுக்கிறது என்பது, இந்த நாள் பொருத்தமான நாள் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம்.

ancient_calendar_tamilஅறிவியல் பூர்வமாக பார்த்தாலும்…
பூமி சூரியனிற்கு அருகில் இருக்கும் கால கட்டம் ஜனவரி 1 ஐ அண்டி வருகிறது. எனவே, ஜனவரி 1 புதுவருடப்பிறப்பிற்கு பொருத்தமான நாளாக கருதப்படுகிறது.

இவை அனைத்தும் மேற்கத்தைய நாடுகளின் வரலாற்று பின்னனியில் இருந்தும், கிறிஸ்தவ அடிப்படையில் இருந்தும் உருவான புத்தாண்டு தொடக்க நாள் பற்றியவை.

தென் பகுதி நாட்டு மக்கள் வெவ்வேறு நாட்களை கொண்டாடியுள்ளனர். அதில் தை1 (ஜனவரி 14-15) உம் ஒன்று!
நமது முன்னோர்கள், வெவ்வேறு காலப்பகுதிகளில் வருடத்தில் 4 நாட்களை வருடப்பிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். இவை தொடர்பாக தேவையான அளவிற்கு ஏற்கனவே பதிவிட்டதால் இங்கு குறிப்பிடவில்லை.

மேலும் சில புதுவருட பிறப்புக்கள்…
சீன புதுவருடம் :
சீன புதுவருடம் நிலவை அடிப்படையாக கொண்ட நாட்காட்டியின் மூலம் கணிக்கப்படுகிறது. 3 வருடங்களுக்கு ஒரு முறை நாட்காட்டி சரி செய்யப்படுகிறது. ஜனவரி 20 தொடக்கம் ஃபெப்ரவரி 20 ஆம் திகதிக்குள் வருடப்பிறப்பு வரும்.

வியட்னாம் புதுவருடம் :
இதுவும் சீன புதுவருடம் போன்ற அமைப்புடையது.

தமிழ் புதுவருடம் :
ஏப்ரல் 13-15 ஆம் திகதிகளில் கொண்டாடப்பட்டது. தற்போது பண்டைய தமிழ் தேடல்களின் விளைவாக தைப்பொங்கள் அன்று (ஜனவரி 14-15) புதுவருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இணைதிருங்கள் மேலும் அறியலாம்…

(7540)

2 thoughts on “ஜனவரி1 ஏன் புதுவருடப்பிறப்பாக உள்ளது?”

  1. Anuraja says:

    march 20 exactly 12 hrs day and 12 hrs night.

  2. Anantha says:

    Tamil ist oldest Language in The World. “Amma” when a Child come out of her mother , The Baby call “Amma” , not mame or Mama, or mother , or muther, or mum. How can a Child tell this Name ?
    To Day in Germany , that’s Tamil Name onces Tamils had Lived there, (Geyam +Manithar = Geyam + Manithar)= victory

Leave a Reply

Top