விண்வெளியில் தங்கினால் எப்படி இருக்கும்? – சுவாரஷ்ய தகவல்கள்

tamil scienceவிண்வெளி ஓடங்களில் பயணிக்கும் போது, விண்வெளி வீரர்கள் அனுபவிக்கும் சில அடிப்படை அனுபவங்களை பார்க்கலாம்.

ஒரே நாளில் சுமார் 16 சூரிய உதையங்களை பார்க்கலாம்!
விண்வெளியில் பயணிக்கும் போது 90 நிமிடங்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில் சூரிய உதையத்தை பார்க்கலாம்.
இதனால், விண்வெளி வீரர்கள் தூங்குவதற்கு சிரமம் ஏற்படுகிறது.

உயரம் அதிகரிக்கும்!
விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாமையால், பயணிப்பவர்களின் உயரம் 5 தொடக்கம் 8 cm வரை உயரம் அதிகரிக்கும்.
இதனால், இடுப்புவலி – நரம்பு பிரச்சனைகள் ஏற்படும்.

குறட்டை தொல்லை இல்லை!
பூமியில் குறட்டை விட்டு தூங்கும் விண்வெளி வீரர்கள், விண்வெளியில் குறட்டை சத்தமில்லாது தூங்குகிறார்கள். இதற்கான காரணம் புவியீர்ப்புவிசையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

tamil scienceஉப்பில்லை மிளகில்லை!
விண்வெளி வீரர்கள் உண்ணும் உணவில் தூவுவதற்கு உப்போ, மிளகோ கொடுக்கப்படுவதில்லை. காரணம், அவற்றை உணவில் கொட்டி சாப்பிடமுடியாது. அதனால், உப்பும் மிளகும் திரவ வடிவிலேயே கொடுக்கப்பட்டது. எனினும், அவ் திரவம் அடைக்கப்பட்ட பைகள் விண்ணோடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இப்போது தவிர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மாத்திரைகளாக பயன்படுத்தப்படுகிறது.

விண்வெளியில் பயணித்தவர்களில், கிட்டத்தட்ட அனைவருமே அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
புவியீர்ப்பு விசை இல்லாமையால், தமது உடல் தலை கீழாக இருப்பதாக உணர்வதுடன் அவர்களின் கால், கை உட்பட்ட பாகங்களின் உணர்திறன் குறைப்பாட்டையும் உணர்கிறார்கள்.

மேலும் இரு சுவார்ஷ்ய தகவல்கள்…

Valeri Polyakov

Valeri Polyakov

1995 ஆம் ஆண்டில், Valeri Polyakov எனும் ரஷ்ஷிய விண்வெளியாளர் சுமார் 438 நாட்கள் விண்ணில் இருந்து, நீண்ட காலம் விண்ணில் இருந்தவர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 1000 விண்வெளி வீரர்கள் இதுவரை விண்வெளிப்பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், இதுவரை 3 நபர்கள் மாத்திரமே விண்வெளியில் இறந்துள்ளார்கள்.
18 பேர் விண்ணோட விபத்திலும், 11 பேர் பயிற்சியின் போதும் இறந்துள்ளார்கள்.

அறிவியல்-அமானுட தகவல்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்.

(4111)

One thought on “விண்வெளியில் தங்கினால் எப்படி இருக்கும்? – சுவாரஷ்ய தகவல்கள்”

  1. THANK YOU FOR YOUR INFORMATION

Leave a Reply

Top